மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.6.17

Astrology எப்போது சாமி திருமணம் நடக்கும்?


Astrology எப்போது சாமி  திருமணம் நடக்கும்?

சிலபேர் நொந்துபோய் இருப்பார்கள். எத்தனையோ பிரயத்தனம் செய்தும் திருமணம் மட்டும் இன்னும்  கூடிவராமல் இருக்கும். கடைசி நேரத்தில் தட்டிக்கொண்டு போய்விடும்.

நண்பர்கள் வேறு பிய்த்துக்கொண்டிருப்பார்கள்: “எப்போதுடா திருமணம்? நம்ம செட்டில எல்லாப் பசங்களுக்கும் ஆயிடுச்சு. உனக்கு  மட்டும் தாண்டா பாக்கி!”

என்ன செய்வது? தர்ம சங்கடமாக இருக்கும்!

நான்கைந்து வருடமாக இதே கதை. ஆண்கள் என்றில்லை, பெண்களுக்கும் திருமணம் கூடி வராமல் தள்ளிக்கொண்டே போகும்.

ஏழாம் வீடு அல்லது ஏழாம் வீட்டுக்காரன் அல்லது களத்திரகாரன் சுக்கிரனுடன் தீய கிரகங்கள் கூட்டாக இருந்தால் திருமணம் தாமதமாகும்.

இத்தகைய தாமதம், தடைகள் எல்லாம் நீங்கி இறையருளால் ஒருவருக்குத் திருமணம் நடைபெற ஒரு சிவஸ்தலம் உள்ளது. அனைவருக்கும் தெரிந்த ஸ்தலம்தான். தெரியாதவர்கள் தெரிந்து கொள்வதற்காக இன்று பதிவிட்டுள்ளேன்
-----------------------------------------------------------------------------------------------------
சிவஸ்தலத்தின் பெயர்: திருமணஞ்சேரி
அங்கே உறையும் இறைவனின் பெயர் அருள் வள்ளல் நாதர், உத்வாக நாதர்
இறைவியின் பெயர் கோகிலாம்பாள்
திருநாவுக்கரசர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர்களால் பதிகம் பாடப்பெற்ற ஸ்தலம்.

மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து 6 கி.மி. தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உள்ளது.

முகவரி
அருள்மிகு அருள் வள்ளல் நாதர் திருக்கோவில்
கீழைத்திருமணஞ்சேரி
திருமணஞ்சேரி அஞ்சல்
குத்தாலம் S.O.
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN - 609813

காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமணஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமையாகும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும். இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தமது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவார்கள் என்பதும் தல வரலாறாகும்.

திருமணப் பிரார்த்தனை விபரம்: திருமண தடை உள்ளவர்கள் இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ கல்யாண சுந்தரர் சுவாமிக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால், விரைவில் திருமணம் கைகூடும். ஆலயத்தில் பூஜை சாமான்கள், நெய்தீபம், அர்ச்சனை சீட்டு பெற்றுக் கொண்டு ஸ்ரீ செல்வ கணபதியை வழிபாடு செய்த பின் நெய்தீப மேடையில் 5 தீபம் ஏற்றிவிட்டு எதிரில் உள்ள திருமண பிரார்த்தனை மண்டபத்தில் வழிபாடு செய்ய வேண்டும். திருமண பிரார்த்தனை செய்து கொள்பவர்கள் வீட்டிற்குச் சென்றதும் ஒரு தீபம் ஏற்றி ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை கழுத்தில் அணிந்து கொண்டு சுவாமியை நினைத்து வணங்க வேண்டும். பினபு மாலையை ஒரு துணிப்பையில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாளில் இருந்து விபூதி, மஞ்சள், குங்குமம் தினமும் உபயோகிக்க வேண்டும்.

திருமணம் கைகூடியவுடன். ஆலயத்தில் வழங்கப்பட்ட மாலையை, தம்பதி சமேதராக ஆலயத்திற்குச் சென்று அதை ஆலயத்தில் செலுத்திப் பிரார்த்தனையை நல்லபடியாக முடித்துக் கொள்ளல் வேண்டும்.

நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்வதுதான் முக்கியம். இடக்கு மடக்காகக் கேள்விகள் கேட்கும் ஆசாமிகள் எல்லாம் அங்கே செல்லாமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது. மற்ற பக்தர்களுக்கும் நல்லது. ஆலயத்திற்கும் நல்லது.

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. Very useful information sir thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. எங்க ஊர்ல நிறைய பேரு இந்த கோவிலுக்கு போய் பலனடைஞ்சிருக்காங்க. நானும் ரெண்டு மூணு முறை இந்த கோவிலுக்கு போய் இருக்கேன்.

    ReplyDelete
  3. 7 ல் சனி இருந்தால் அதற்கு எந்த விதமான பரிகாரம் செய்ய வேண்டும்.
    2 ம் வீட்டிற்கும் தனியே அதிபதி.
    இது நண்பரின் பெண் ஜாதகம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  4. 7 ல் சனி இருந்தால் அதற்கு எந்த விதமான பரிகாரம் செய்ய வேண்டும்.
    2 ம் வீட்டிற்கும் தனியே அதிபதி.
    இது நண்பரின் பெண் ஜாதகம்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Very useful information sir thanks sir vazhga valamudan//////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  6. ////Blogger kmr.krishnan said...
    Good information/////

    நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  7. ////Blogger ராஜி said...
    எங்க ஊர்ல நிறைய பேரு இந்த கோவிலுக்கு போய் பலனடைஞ்சிருக்காங்க. நானும் ரெண்டு மூணு முறை இந்த கோவிலுக்கு போய் இருக்கேன்.////

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    7 ல் சனி இருந்தால் அதற்கு எந்த விதமான பரிகாரம் செய்ய வேண்டும்.
    2 ம் வீட்டிற்கும் தனியே அதிபதி.
    இது நண்பரின் பெண் ஜாதகம்.
    மிக்க நன்றி. /////

    ஜாதகத்தில், 7ல் சனி இருப்பது நன்மையானதல்ல
    மகரம் மற்றும் கும்ப லக்கினங்களுக்கு விதிவிலக்கு - சனி லக்கினகாரகன் என்பதால்!
    மற்ற லக்கினங்களுக்கு 7ல் சனி இருந்தால், சனியின் தீய பலன்களைக் கட்டுப்படுத்துவதற்கான பரிகாரங்கள்:
    ஏழாம் இடத்து சனி திருமண வாழ்க்கையில் பதிப்பை உண்டாக்கும்!!!!

    1. காகங்களுக்கும், எருமை மாடுகளுக்கும் சனிக்கிழமைகளில் உணவு வழங்கலாம்
    2. கருப்பு நிறத்துணிகளை அடிக்கடி தானமாகக் கொடுத்துவரலாம்.
    3. சமைத்த சாதத்தில் சிறிது எள்ளைக் கலந்து எளியவர்களுக்கு அன்னதானம் செய்து வரலாம்
    4. ஹனுமான் சாலிசா பாடலை உள்ளுணர்வோடு பாடி ஹனுமானை பிரார்த்தனை செய்து செய்து வரலாம்
    5. ஒவ்வொரு சனிக்கிழமையும் சனிஷ்வரனை பிரார்த்தனை செய்துவிட்டு வரலாம்

    ReplyDelete
  9. மிக்க நன்றி ஐயா.
    அவ்வாரேசெய்ய சொல்கின்றேன்.
    ஓரே ஒரு குறை என்னவென்றால் அமெரிக்காவில் காகா வராது.
    மற்ற அனைத்தையும் செய்ய சொல்கின்றேன்.

    ReplyDelete
  10. ஐயா,

    Where can I get the books written by you..can u mention the shop name or publications name in Coimbatore......under what name u have published ur books and how many books u have written.....

    ReplyDelete
  11. ////Blogger Chandrasekaran Suryanarayana said...
    மிக்க நன்றி ஐயா.
    அவ்வாறே செய்யச் சொல்கின்றேன்.
    ஓரே ஒரு குறை என்னவென்றால் அமெரிக்காவில் காகா (காகம்) வராது.
    மற்ற அனைத்தையும் செய்யச் சொல்கின்றேன். /////

    நல்லது. நன்றி!!!!

    ReplyDelete
  12. ////Blogger கார்த்திக் Sree Vadivel Tex said...
    ஐயா,
    Where can I get the books written by you..can u mention the shop name or publications name in Coimbatore......under what name u have published ur books and how many books u have written...../////

    வகுப்பறை ஜோதிடம் - பகுதி ஒன்று மட்டும் வந்துள்ளது. மற்ற பகுதிகள் விரைவில் வரும்
    umayalpathippagam@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள். புத்தகம் கிடைக்கும்!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com