Astrology எப்போது (டா) உடல்; உபாதை வரும்?தலைப்பில் உள்ள ‘டா’ எனக்காக நான் எழுதிக்கொள்வது. அப்போதுதான் எழுதுவதற்கு ஒரு உற்சாகம பிறக்கிறது!
பயிற்சிப்பாடம்ஜோதிடம் கற்றுக் கொள்வது எளிதன்று. கடுமையான முயற்சி செய்து ஜோதிடப்பாடங்களைப் படிப்பதோடு, படித்ததை மனதில் தக்கவைத்துக் கொண்டால் மட்டுமே, அதில் தேர்ச்சி பெறமுடியும்.
படிக்கின்ற அத்தனை பாடங்களையும், அத்தனை, விதிகளையும் மனதில் தக்கவைக்க முடியாது. ஆனால் முக்கியமான விதிகளைத் தக்கவைத்துக் கொள்ளலாம். அதாவது மனதில் நிறுத்திவைக்கலாம்.
முக்கியமான பாடங்கள் எது? அவற்றை எப்படித் தக்கவைப்பது எப்படி என்பதே இந்தப் பயிற்சி வகுப்பின் (மேல்நிலை வகுப்பின்) நோக்கமாகும்.
இது மேல் நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். உங்களுக்கும் (அனைவருக்கும்) பயன் படட்டும் என்பதற்காக இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்.
பாடங்களைப் படிப்பதோடு மட்டும் அல்லாமல், பல ஜாதகங்களை பரிசீலித்துப் பார்ப்பதுடன், ஜோதிடம் தெரிந்த சிலருடன் அடிக்கடி உரையாடுவதன் மூலமும் நாம் அனுபவங்களைப் பெறமுடியும். அனுபவங்கள் மனதில் தங்கிவிடும்.
கிடைக்கும் உதாரண ஜாதகங்களை எல்லாம் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக மெனக்கெட வேண்டாம். கிடைக்கின்றபோது அவற்றைச் சேகரித்துவைத்துக்கொள்ளலாம். முன்பு எல்லாம் நோட்டுப் புத்தகங்களில் குறித்து வைத்துக்கொண்டே வருவார்கள். இப்போது அந்தத் தொல்லை இல்லை. கணினியில் ஒரு Main Folder, Various Sub Folderகளை உருவாக்கி அவைகளைச் சேர்த்துக்கொண்டே வரலாம். அந்த வசதி ஒரு அற்புதமான வசதியாகும். அனைவரையும் அவ்வாறே செய்ய வேண்டுகிறேன். பல உதாரண ஜாதகங்களை நான் உங்களுக்குத் தரவுள்ளேன். அடுத்தடுத்து ஒவ்வொன்றாக அவைகள் வரும். பொறுத்திருங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லா மனிதர்களுக்குமே ஒரு பொதுவான கேள்வி உண்டு. "நான் கஷ்டப்படுகிறேன். எனது கஷ்டங்கள் எப்போது தீரும்?"
கஷ்டப்படாத மனிதர்களே கிடையாது. கஷ்டங்கள் பலருக்கும் பலவிதமாக இருக்கும்.
கஷ்டங்களை அல்லது துன்பங்களை அல்லது துயரங்களை அல்லது தொல்லைகளை இரண்டு வகைப்படுத்தலாம்.
1. நிரந்தரக் கஷ்டம். மாற்ற முடியாத நிரந்தரக் கஷ்டம்
2. தற்காலிகமான (Temporary) கஷ்டம்
இதிலும் ஒவ்வொரு வீட்டை வைத்தும், கிரகத்தைவைத்தும், கஷ்டங்கள் பலவகைப்படும். ஒவ்வொன்றாக அலசுவோம்.
முதலில் சூரியனை வைத்துப்பார்ப்போம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சூரியன் உடல்காரகன். சூரியனை வைத்து வரும் கஷ்டங்கள் எப்படி வகைப்படும்?
1. உடல் ஊனம் இருந்தால், ஆஸ்த்துமா போன்ற நோய்கள் இருந்தால் அது நிரந்தரக் கஷ்டம்.
2. சிக்கன் குனியா காய்ச்சல், பல்வலி, மூட்டுவலி போன்றவைகள் தற்காலிகக் கஷ்டங்கள்.
அதுபோல சூரியன் தந்தைக்குக் காரகன்.
1. இளம் வயதிலேயே தந்தை இல்லாமல் இருந்தால், அல்லது தந்தையால் பலன் எதுவும் இல்லை என்றால் அது
நிரந்தரக் கஷ்டம்.
2. தந்தையோடு மனஸ்தாபம், அல்லது தந்தையாரோடு விரோதப்போக்கு என்றால் அது தற்காலிகக் கஷ்டம்
வீடுகளும், அதனுடன் சம்பந்தப்பட்ட மனித உடற்பகுதிகளும்:
1 ஆம் வீடு (லக்கினம்): தலை, மூளை, தலைமுடி, தோற்றம் Head, Brain, Hair, Appearance
2 ஆம் வீடு: முகம், கழுத்து, தொண்டை, கண்கள், பற்கள், நாக்கு, மூக்கு,தைராய்ட் சுரப்பி, குரல்வளை Face, Right Eye, Neck, Throat, Teeth, Tongue, Nose, Mouth, Speech, Nails
3 ஆம் வீடு: காது,நுரையீரல், கைகள், தோள்பட்டைகள், கைகள், நரம்பு மண்டலம் Ears, Right Ear, Lungs, Shoulders, Arms, Hands, Upper part of Eusophagus, Clavicles, Mobility
4 ஆம் வீடு: மார்பு, இதயம், உணவு மற்றும் மூச்சுக்குழல்கள் Breasts, Chest, Lungs, Heart, Diaphragm
5 ஆம் வீடு: வயிறு,, தண்டுவடம், முதுகின் மேற்பகுதி Upper Abdomen, Stomach, Liver, Gall Bladder, Spleen, Pancreas, Duodenum
6 ஆம் வீடு: குடற்பகுதிகள்,intestines, spleen, and nervous system Intestines, Digestion, Absorption, Appendix, Lowerback, Injuries, Wounds
7. 7ஆம் வீடு: ஜீரண உறுப்புக்கள், சிறுநீரகம், Urinary Tract, Kidneys, Sexual Organs, Uterus, Ovaries, Testicles, Semen, Lower Back
8. 8ஆம் வீடு: தோல், புஜம் External Genital Organs, Anus, Perineum
9. 9ஆம் வீடு: இடுப்பு, தொடைப்பகுதிகள், Hips, Thighs, reproductive system, sexual organs, bowels, and excretory system
10. 10ஆம் வீடு: கல்லீரல் hips, thighs, liver, and sciatic nerve
11. 11ஆம் வீடு: முழங்கால், இணைப்பு எலும்புகள் மற்றும் skeletal system,calves, and circulatory system Left Ear, Calves, Ankles, Lower Legs
12. 12ஆம் வீடு: கால்கள், பாதம், Feet lymphatic system, and adipose tissue
உடல் ஆரோக்கியத்தில் சனியின் பங்கு! Saturn and Health
அதீதமான துரதிர்ஷ்டத்தை அளிப்பவர் சனீஷ்வரன். துன்பங்கள், தடைகள் ஆகியவற்றிற்கும் காரணகர்த்தா அவர்தான். மனிதனுக்குப் பலவிதமான நோய்களைக் கொடுப்பவர் அவர்தான். (Saturn is the chief planet in producing diseases)
6, 8, 12ஆம் வீடுகளுக்கு அவர்தான் காரகர் (authority) சிறிய, பெரிய நோய்களுக்கும் மருத்துவமனையில் படுப்பதற்கும் தொடர்பு உடைய வீடுகள் அவைகள் (6th, 8th and 12th houses are connected with short or long ailments and hospitalization)
சூரியனுக்குக் கடும் பகைவர் அவர். சூரியனுடன் அவர் சேர்ந்திருந்தாலும் அல்லது சூரியனுக்கு 7ஆம் வீட்டில் நேரடிப் பார்வையில் இருந்தாலும், அவர் ஜாதகனுக்கு சம்பந்தப்பட்ட வீட்டிற்கு உரிய (அதாவது சூரியன் இருக்கும் பகுதிக்குரிய உடற்பகுதியில்) ஊனத்தை அல்லது கடும் நோயை ஏற்படுத்துவார்.
உதாரணத்திற்குப் பன்னிரெண்டில் சூரியன் இருந்து, 6ஆம் வீட்டில் சனியிருந்தால், ஜாதகனுக்குப் பாதத்தில் ஊனம் அல்லது தீராத நோய் இருக்கும். தற்சமயம் இல்லை என்றாலும் சனி திசை சூரிய புத்தியில் அல்லது சூரிய தசை சனிபுத்தியில் உண்டாகும்.
ஏழில் சூரியன் இருந்து, சனியின் பார்வையும் அவர்மேல் இருந்தால், கிட்னியில் பிரச்சினைகள் உண்டாகும். அதுபோல அந்த வீட்டுடன் சம்பந்தப்பட்ட உடற்பகுதியிலும் பிரச்சினைகள் உண்டாகும். இப்படி ஒவ்வொரு வீட்டிற்கும் பார்த்த்துக்கொள்ளுங்கள்.
சூரியன் சனியின் நேரடி பார்வையில் இருக்கக்கூடாது. இருந்தால் சூரியன் இருக்கும் வீடும் அது சம்பந்தப்பட்ட உடலின் பகுதியும் பாதிக்கப்படும்
அதுபோல சூரியனுடன் சனி அல்லது ராகு கூட்டணி போட்டிருந்தாலும் உடற்கோளாறுகள் உண்டாகும்.
நல்ல ஆரோக்கியமான உடம்பிற்கு சூரியன் ஜாதகத்தில் நீசமாகாமலும், தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாமலும் இருக்க வேண்டும்!
சூரியன் ஒரு ராசிக்கு ஒரு மாதம் வீதம் 12 ராசிகளையும் கடந்து தனது சுற்றை ஆண்டுக்கு ஒருமுறை நிறைவு செய்யும். சித்திரை ஒன்றாம் தேதி (தமிழ்வருடப்பிறப்பு அன்று) மேஷ ராசியில் அடியெடுத்துவைக்கும் சூரியன் ஒரு மாதகாலம் அங்கே இருந்து விட்டு வைகாசி மாதம் முதற் தேதியில் ரிஷப ராசிக்கு வரும்
1.சித்திரை மாதத்தில் - மேஷம்
2.வைகாசி மாதத்தில் - ரிஷபம்
3.ஆனி மாதத்தில் - மிதுனம்
4.ஆடி மாதத்தில் - கடகம்
5.ஆவணி மாதத்தில் - சிம்மம்
6.புரட்டாசி மாதத்தில் - கன்னி
7.ஐப்பசி மாதத்தில் - துலாம்
8.கார்த்திகை மாதத்தில் - விருச்சிகம்
9.மார்கழி மாதத்தில் - தனுசு
10.தை மாதத்தில் - மகரம்
11.மாசி மாதத்தில் - கும்பம்
12.பங்குனி மாதத்தில் - மீனம்
இப்படிச் சூரியன் வலம் வரும்போது, தனது சுயவர்க்கத்தில் எந்த இடத்தில் பரல்கள் மிகவும் குறைவாக உள்ளதோ, அந்த இடத்தில் இருக்கும் ஒரு மாத காலத்தில், அதற்குள்ளான காலத்தில், தற்காலிக நோய்களைக் கொடுப்பான். காய்ச்சல், சளி, உடல் அசதி, உடல் வலி, தூக்கமின்மை என்பது போன்று அது எந்த வடிவில் வேண்டுமென்றாலும் வரும்.
அந்தக் காலகட்டத்தில் ஜாதகனுக்கு தற்காலிக உடல் உபாதைகள் ஏற்படும். அது காய்ச்சலில் இருந்து constipationவரை எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++