மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை 10 ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------------------------------------
சிறுகதை எத்தனை புண்ணியம் தெரியுமோ?
ஆக்கம் வெ.கோபாலன் தஞ்சாவூர்
அலுவலகம் சென்றுவிட்டு தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் வீடு திரும்பும் ரமணன் அன்று ஆறு மணிக்கே உற்சாகமாக வீடு திரும்பினான். அவன் மனைவி ரமாவுக்கு ஆச்சரியம். இன்று சம்பள தேதிகூட இல்லையே, ஏன் இவர் இப்படி அரக்க பரக்க வந்திருக்கிறார் என்று அதிசயித்தாள்.
அவனே சொல்லட்டும் என்று காத்திருந்தாள். வழக்கம் போல் உடைகளைக் களைந்து மாற்றுடை தரித்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, "ரமா, கொஞ்சம் காபி கிடைக்குமா?" என்று கேட்பவன் இன்று உற்சாகம் குறையாமலே சொன்னான், "ரமா! சீக்கிரம் புறப்படு. பஜனோத்சவம் போகணும்னு சொன்னியே, இரண்டு டிக்கெட் இலவசமா கிடைச்சுது, வா, போகலாம். எங்க மேனேஜருக்கு வந்தது, அவருக்கு வேற ஏதோ வேலை இருக்காம், நீதான் உன் மனைவியை கூட்டிண்டு போயிட்டு வாயேன் என்று கொடுத்தார், வா போகலாம். இப்போ புறப்பட்டா தான் சரியான நேரத்துக்குப் போய்ச்சேர முடியும்" என்றான்.
கடந்த நான்கு நாட்களாக அருகில் இருந்த பெரிய சபா ஹாலில் பஜனோத்சவம் என்ற பெயரில் மிகவும் பிரபலமான பஜனை கோஷ்டிகள் வந்து பஜனை பாடிக் கொண்டிருந்தார்கள். ரமாவுக்கு அந்த நிகழ்ச்சிகளில் ஏதானும் ஒன்றுக்காவது போய் பஜனை கேட்டுவிட்டு வரவேண்டுமென்று ஆசை. அவள் குடியிருந்த ஒரு கூட்டுக் குடித்தன வீட்டில் பலரும் இந்த பஜனை நிகழ்ச்சிகளுக்குப் போக ஆர்வம் கொண்டிருந்தாலும், அவர்களது வசதி அதற்கு இடம் கொடுத்தபாடில்லை.
ஆனால் பெரிய சபாவில் உறுப்பினராக ஆகி, மாதாமாதம் கணிசமான தொகையைக் கட்டணமாகச் செலுத்தி கச்சேரிகளுக்குச் செல்லும் வசதி அந்த தம்பதியருக்கு இல்லை. அரசாங்க அலுவலகம் ஒன்றில் கீழ்நிலை கிளார்க்காகப் பணியாற்றும் ரமணனுக்கு வருமானத்துக்கும் குடும்பச் செலவுக்குமே திணறலாக இருந்த நிலையில் சினிமா, கச்சேரி என்றெல்லாம் போக வாய்ப்பு ஏது?
யார் செய்த புண்ணியமோ, அவர்களுக்கு இலவசமாக அரசாங்கம் கொடுத்த தொலைக்காட்சிப் பெட்டியொன்று கிடைத்தது. ரமாவுக்குப் பகல் பொழுதில் அதில் வரும் மெகா சீரியல்களில் மனதைச் செலுத்தி, அந்த சீரியல் கதைகளோடு மானசீகமாக ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால், கச்சேரி, சினிமா போன்ற வெளியுலக பொழுது போக்குகளில் எல்லாம் அவளுக்கு ஆசை ஏற்படவில்லை. போதாக்குறைக்கு அவளது இரண்டு வயது பெண் குழந்தையோடு பொழுதும் மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருந்தது.
போன வாரம் தொலைக்காட்சிகளில் அறிவிப்பு செய்த அந்த பஜனோத்சவம் அவளுக்கு மனதில் ஒரு ஆவலைத் தூண்டிவிட்டது. பெரிய கோஷ்டிகளின் பஜனைகள், அதிலும் பாண்டுரங்க விட்டல பஜனை என்றால், அந்தப் பாடல்கள், அவற்றின் துரித கதி, தாளகதி இவைகளில் எல்லாம் அவளுக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருந்தது. இன்றைய தேதியில் தமிழகத்தில் மிகப் பிரபலமான பஜனைப் பாடகர்கள் இந்த விழாவில் வந்து பாடுகிறார்கள். அவர்கள் எல்லாம் அவள் மனதில் நிழலாடினார்கள்.
அவள் பிறந்த ஊருக்கு ஒரு முறை சென்றிருந்த நேரத்தில் அங்கு அருகில் கோவிந்தபுரத்தில் நடந்த ஒரு பஜனைக்குச் சென்றிருந்தாள். அடடா! அந்த பஜனையைக் கேட்ட பிறகு நீண்ட நாட்கள் அந்த பஜனைப் பாடல்களின் தாளமும், பாண்டுரங்கனை நினந்து பாடப்பட்ட அந்தப் பாடல்களில் தவழ்ந்த பக்தி உணர்வும் அவள் மனதை விட்டு அகலவேயில்லை. அப்படிப்பட்ட பஜனை கோஷ்டிகள் பஜனை அவள் வீட்டுக்கு மிக அருகில் இப்போது நடைபெற்றாலும் அங்கு போய்ப் பார்க்கவும், கேட்கவும் அனுமதிக் கட்டணம் உண்டு என்பதால் அவள் ஆசை அடங்கிப் போயிற்று.
அந்த நிலையில்தான் தன் கணவன் இன்று பஜனோத்சவம் போகிறோம், நுழைவுச் சீட்டு இலவசமாகக் கொடுத்திருக்கிறார்கள் என்ற செய்தியைச் சொன்னதும் மிகுந்த மகிழ்ச்சியோடு கிளம்பத் தயாரானாள். அவர்களுடைய இரண்டு வயதுப் பெண் அமிர்தா அந்தக் கூட்டுக் குடியிருப்பின் வாயிலில் மற்ற குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்து, அவளை இழுத்துக் கொண்டு வந்து முகத்தைத் துடைத்து ஆடை அணிவித்து அலங்காரம் செய்து, தானும் தயாராகப் புறப்பட்டு நின்றாள்.
ரமணன் ஆபீசிலிருந்து வந்த உடையைக் களைந்துவிட்டு பெரிய கரை போட்ட வேட்டியை அணிந்து கொண்டு முழுக்கைச் சட்டையும், நெற்றி நிறைய குழைத்துப் பூசிய திருநீறுமாகத் தயாராக இருந்தான். பஜனை கேட்பது என்றால் கச்சேரிக்குப் போவதைப் போல போகமுடியுமா; சற்று பக்தி பரவசமாக, அதற்கேற்ற உடையணிந்து கொண்டல்லவா போகவேண்டும்.
இவர்கள் அடிக்கடி இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் போகிறவர்கள் என்றால் பழக்க தோஷத்தில் குழந்தைக்குப் பசித்தால் ஏதாவது ஆகாரம், குடிக்க குடிநீர் போன்றவற்றை ஒரு பிளாஸ்டிக் கூடையில் வைத்துக் கொண்டு எடுத்துப் போவார்கள். என்றுமில்லாத வழக்கமாக இன்று திடீரென்று வந்து வா சபாவுக்குப் போகலாம், பஜனை கேட்கலாம் என்று சொன்னதும் அதுபோன்ற எந்த தயாரிப்பும் இல்லாமல் குழந்தையைத் தூக்கிக் கொண்டு கணவனுடன் வெறும் கையுடன் புறப்பட்டுவிட்டாள் ரமா.
இவர்கள் சென்று சபாவுக்குள் நுழைந்து தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வரிசையில் குறிப்பிட்ட எண்கள் உள்ள ஆசனங்களில் அமர்ந்து கொண்டனர். குழந்தையை ரமா மடியில் வைத்துக் கொண்டாள். இவர்கள் உட்கார்ந்த சில மணித்துளிகளில் பஜனை தொடங்கியது. மேடையில் ஏழெட்டு பேர் அமர்ந்து கொண்டிருந்தனர். ஒரு கோடியில் மிருதங்கம், மறு கோடியில் வயலின். மற்ற பலரும் பாடுபவர்கள். நடுநாயகமாக உட்கார்ந்திருந்தவர் பஞ்சகச்சம் அணிந்து இடையில் ஒரு வஸ்த்திரத்தை அணிந்துகொண்டு மேல்சட்டை அணியாமல் நெற்றியில் குழைத்துப் பூசிய திருநீறு, சந்தனம், குங்குமம் திகழ கண்களை மூடிக்கொண்டு சிறிது தியானம் செய்துவிட்டு மெல்ல பஜனையைத் துவக்க, மற்றவர்கள் உடன்பாட, எடுத்த எடுப்பிலேயே பஜனை களைகட்டத் தொடங்கிவிட்டது.
பாட்டு ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து மேடையில் இருந்த ஒவ்வொருவராகப் அடியெடுத்துக் கொடுக்க மற்றவர்கள் தொடர்ந்து பாட, பாடகர்கள் தங்கள் முழுத் திறமையையும் காட்டிப் பாடிக் கொண்டிருந்தனர். நேரம் ஓடினதே தெரியவில்லை.
ரமா பிறந்து வளர்ந்தது எல்லாம் தஞ்சை மாவட்டத்தில் ஒரு சாதாரண ஊர். அங்குள்ள பஜனை மடத்தில் அவ்வப்போது ஸ்ரீராமநவமி, ஸ்ரீஜெயந்தி போன்ற நாட்களில் பஜனைகள் நடக்கும். அங்கெல்லாம் இதுபோன்ற பெரிய கூட்டமோ, பாடுவதற்கு புகழ்பெற்ற பாகவதர்களோ வருவது கிடையாது. அவரவர்க்குத் தெரிந்த பாடல்களைப் பாடுவார்கள். எந்த வரிசையில் எந்தெந்த சுவாமிகள் பெயரில் பாடவேண்டுமோ, பாடிவிட்டுக் கடைசியில் அனுமன் வணக்கத்தோடு பஜனை முடியும், பிரசாதங்கள் வழங்கப்படும்.
இங்கு பாடும் பாகவதர்களோ புகழ்பெற்றவர்கள். ஒவ்வொருவரும் தத்தமது திறமை வெளிப்படும் வண்ணம் பாடிக் கொண்டிருந்தார்கள். அதிலும் ரமா கிராமத்தில் கேட்டபடி சாதாரண பஜனைப் பாட்டுக்கள் இல்லை. இங்கே புதிதாக பண்டரீபுரம் விட்டலனின் புகழ் போற்றும் வேகம் நிறைந்த பாடல்கள். அந்த பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் கூடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் கைகளைத் தலைக்கு மேல் தூக்கி தாளமிட்டுத் தாங்களும் பின்பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். இந்த அற்புதமான சூழ்நிலைக்குச் சற்றும் பொருந்தாத வகையில் ரமாவின் குழந்தை முனக ஆரம்பித்தது.
"என்னம்மா வேணும்? ஏன் முனகறே?" என்று குழந்தையை வினவினாள் ரமா.
குழந்தை பதில் சொல்லாமல், வலது கை விரல்களை மடக்கி, கட்டைவிரலை மட்டும் நீட்டி வாய்க்குக் கொண்டு போய் தனக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று ஜாடை காட்டியது.
ரமா தன் கணவனிடம் கேட்டாள், "குழந்தைக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமாம், பாருங்கோ, எங்கேயாவது இருக்கா என்று" என்றாள்.
அவனுக்கோ பஜனை சுவாரசியம். "இப்போ தண்ணீருக்கு எங்கே போறது. வரும்போதே கையிலே கொஞ்சம் பாட்டிலில் பிடித்துக் கொண்டு வந்திருக்கணும்." என்றான்.
அப்போது தங்களுக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு அம்மாள் கையில்லாத ரவிக்கையும், கழுத்து நிறைய நகைகளுமாக அமர்ந்து பஜனைக்கு ஏற்ப தாளமிட்டுக் கொண்டிருந்தாள். அவள் மடியில் ஒரு பிளாஸ்டிக் கூடை. அதில் ஒரு எவர்சில்வர் டப்பா, அதனோடு ஒரு பாட்டிலில் குடிநீர். அந்த அம்மாளைக் கேட்டுக் கொஞ்சம் தண்ணீர் வாங்கி குழந்தைக்குக் கொடுக்கலாமே என்று எண்ணமிட்டு, அதை ரமணனிடம் சொன்னாள் ரமா.
அவன் மெல்லா அந்த அம்மாளிடம், "மாமி! குழந்தை தாகம் என்று அழுகிறாள். உங்க பாட்டில் தண்ணீரைக் கொஞ்சம் கொடுங்களேன். துளி கொடுத்துட்டு தந்துடறேன்" என்றான்.
அந்த அம்மாளுக்கு பஜனை கேட்பதை இடையூறு செய்த கோபமோ என்னவோ, சட்டென்று திரும்பி "அதெல்லாம் இல்லை. எனக்கு வேணுன்னு கொண்டு வந்திருக்கேன். வேணும்னா நீங்க கையிலே கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே. வெளிலே டிரம்ல வச்சிருப்பான் போய் கொண்டு வந்து கொடுங்கோ" என்று பட்டென்று சொல்லிவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.
ரமணனுக்கு அதிர்ச்சி. குடிக்க அவசரத்துக்குத் தண்ணீர் கொடுக்கக்கூட மறுப்பா. கிராமங்களில் சொல்வார்கள். கஞ்சனைப் பற்றி சொல்ல, அவன் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தரமாட்டன் என்று. அதனை இன்று நேரடியாகப் பார்க்கவும், கேட்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டதே.
கூசிக் குறுகிப் போனான் ரமணன். இப்படியும் மனிதர்களா? இவர்கள் பஜனை கேட்டதாலோ, அல்லது தாளமிட்டுக் கொண்டு விட்டலனைப் பாடியதாலோ இவர்களுக்கு என்ன புண்ணியம் வந்துவிடப் போகிறது. சே! என்ன மனிதர்கள் என்று மனதில் குமுறினான்.
தன் மனதில் ஏற்பட்ட அவமானத்தை, எரிச்சலை அடக்கமுடியாமல் அடக்கிக் கொண்டாள் ரமா. பெண் ஜன்மம் இரக்கம் உள்ளது என்பார்களே. இந்த ரவிக் அதெல்லாம் இல்லாத ஜென்மம் போலிருக்கிறது. தாகத்தில் தவிக்கும் ஒரு குழந்தைக்குத் தன்ணீர் தர மறுத்துவிட்டு எனக்கு வேணும் என்று சொல்லும் அவள் பெரிய இடத்துப் பெண் என்பது தோற்றதிலிருந்தே தெரிகிறதே. இவர்களுக்கு மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் சக்திகூட இல்லாமல் போய்விட்டதே. இவர்களுக்கெல்லாம் பஜனை ஒரு கேடா என்று நினைத்தாள் ரமா.
ஒரு வழியாக குழந்தையை சமாதானம் செய்யவும் பஜனை முடியவும் சரியாக இருந்தது. கூட்டம் எழுந்து அந்த மண்டபத்தைவிட்டு வெளியேறத் தொடங்கியது. வாயிற்படியைத் தாண்டி மண்டபத்தின் முகப்புக்கு வரும் போது அந்த ரவிக் பெண்மணி யாரிடமோ பேசிக்கொண்டு போவது கேட்டது ரமாவுக்கு.
அவள் சொல்கிறாள், "இந்த பஜனையைக் கேட்டது எத்தனை புண்ணியம் தெரியுமோ?" என்று.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2
தங்கள் கவிதாவிலாச்த்தை மக்களின் மேன்மைக்காகப் பயன்படுத்திய மகான்கள்
ஆக்கம் பார்வதி ராமச்சந்திரன், பெங்களூரு
கவிமழை பொழியும் திறன் எல்லோருக்கும் வந்துவிடுவதல்ல. அப்படி அத்திறன் வாய்த்தாலும், அவர்களுள் பலரும் கவிஞர் என்று மட்டும்தான் அறியப்படுவார்.
ஆனால் நம் கண்முன்னே வாழ்ந்து, மனிதருள் தெய்வாம்சம் உடையவராகப் பிரகாசித்த பல மகான்கள் திருவாக்கிலிருந்து பிரவாகித்த பாடல்கள் அவர்களின் உண்மை ஸ்வரூபத்தை உலகுக்கு உணர்த்தியதோடு, நம் ஜென்மம் கடைத்தேறவும் வழிவகுக்கின்றன.அவர்கள் தங்கள் கவிதாவிலாசத்தை உலகத்தோரின் மேன்மைக்கே பயன்படுத்தினர். அதனாலேயே, அவர்கள் மிக உயர்ந்த மேன்மையான நிலையில் வைத்து வணங்கப்படுகின்றனர்.
பெரும்பாலும் முதல் பாடலை அவர்கள் அனுக்கிரகித்த உடனே, அவர்கள் இன்னாரென, உலகம் உணர்ந்து கொண்டது. அவற்றுள் மிகச்சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.
1. அது ஒரு தெய்வக்குழந்தை. தன் தாயிடம் சந்நியாசம் மேற்கொள்ள அனுமதி பெற்றதும், ஒரு குருவைத் தேடி பிஞ்சுக் 'காலடி' நோக நடந்து சென்று கொண்டிருக்கிறது. நர்மதா தீரம் வந்ததும், அதன் மனதில்,'தன் குரு இங்குதான் இருக்கிறார் என்று தோன்றியது. நர்மதை, தன் கரையில் பிற்கால ஜகத்குருவைப் பார்த்தாள். மறுகணமே, ஆனந்தம் மீதுற பிரவாகத்தை அதிகரிக்கலானாள். வெள்ளப்பெருக்கைப் பார்த்ததும் பயந்த கிராம மக்கள், கரையிலிருந்த ஒரு சாதுவை நோக்கி ஓடினர். அவரோ நிஷ்டையிலிருந்தார். அப்போது அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த, சின்னக்குழந்தையின் முகத்தில் தெரிந்த ஒளி அவர்களை ஈர்க்கவே, அந்தக் குழந்தையிடம் ஓடி வந்து முறையிட்டார்கள். அம்மையும் அப்பனும் ஏக உருவாகி வந்த, அந்தக் குழந்தை, தன் கமண்டலத்தை நதியில் காட்ட, நர்மதை, உலகமனைத்தையும் தன்னுள் அடக்கிய தெய்வத்தின் கமண்டலத்தில் சரண் புகுந்தாள்.
நிஷ்டையிலிருந்த சாது, விழித்தார். நடந்ததெல்லாம் அவர் அறியாததா?. 'புவியோ அரவினுக்கு ஒரு தலைப் பாரம் ' என்று தமிழ் மூதாட்டி எந்த அரவினை, ஆதிசேஷனைப் பாடினாளோ, அந்த ஆதிசேஷனே, பதஞ்சலி முனிவராகவும், பின்னர் இதோ, இப்போது 'கோவிந்த பகவத் பாதரா'கவும் அவதாரம் எடுத்து, தன் சிஷ்யருக்காக, நர்மதைத் தீரத்தில் காத்திருந்த வேளையில், காத்திருந்த சிஷ்யன் எதிரே நிற்கக் கண்டார். எதுவும் அறியாதவர் போல், 'குழந்தாய், நீ யார்' என்று கேட்டார்.
கேட்ட மறுகணம், சொல்முத்துக்களை சரமாகத் தொடுத்து, அந்த பிஞ்சுக் குழந்தை கவிமழை பொழியலாயிற்று. 'தான் யார், தன் அவதார நோக்கம் என்ன, என்பதோடு, தான் பிற்காலத்தில், ஸ்தாபிக்கப்போகும் அத்வைதத் தத்துவத்தையும் சேர்த்து சொல்லாமல் சொல்லி ஸ்லோக மழை பொழிந்தது.
பின்னாளில் ஆதிசங்கர பகவத்பாதரான அக்குழந்தை சொன்ன அந்தப் பத்து ஸ்லோகங்கள் பின்னர் 'தச ஸ்லோகீ' என்றே பெயர் பெற்றன. ஒவ்வொரு ஸ்லோகமும் சிவ: கேவலோஅஹம் என்றே முடியும். இதன் பொருள் மாயையெல்லாம் அகன்ற பிறகு, எஞ்சியிருக்கும் சிவமே நான் என்பதாகும்.அதில் ஒன்றைப் பார்க்கலாம்.
ந சோர்த்வம் ந சாதோ ந சாந்தர்ந பாஹ்யம்
ந மத்யம் ந திர்யங் ந பூர்வாபரா திக்/
வியத்வ்யாபகத்வாத் அகண்டைகரூப:
ததேகோsவசிஷ்ட: சிவ: கேவலோsஹம்//
இதன் பொருள், ஆத்மாவுக்கு, மேல், கீழ் முதலிய நிலைகளோ, கிழக்கு, மேற்கு முதலிய திசைகளோ இல்லை. பரந்து விரிந்துள்ள ஆகாயம் (பிரபஞ்ச வெளி) பாகுபாடற்று எப்படி நீக்கமற நிறைந்துள்ளதோ அது போல ஆத்மாவும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. அந்த ஆத்மாவாய், ஆனந்தமாய்த் திகழ்கிற சிவமே யான். (அதாவது, சிவமும் ஆத்மாவும் ஒன்றே என்ற அத்வைதத் தத்வம் இங்கு மறைபொருள் ) ஒளியும், காற்றும் இன்ன பிறவும் இறைத்தத்துவமே. அது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது . இது பரம்பொருளின் நிர்க்குண (உருவமற்ற) நிலை. இதை,
எத்திக்குந் தானாகி என்னிதயத் தேயூறித்
தித்திக்கும் ஆனந்தத் தேவே பராபரமே
திக்கொடு கீழ் மேலுந் திருவருளாம் பொற்பறிந்தோர்
கைக்குள்வளர் நெல்லிக் கனியே பராபரமே
என்று தாயுமானவ ஸ்வாமிகள் பாடல்களிலும்,
அறிவினில் உறையும்; கருவென வளரும்;
பரிதியில் ஒளிரும்; வளியென பரவும்;
விரிவெளி யெனத் திகழும்
என்று, சிங்கைச் செல்வர், திரு.ஆலாசியத்தின் கவிதைவரிகளிலும் காணலாம்.
சாக்தத்தில், பெரிய அண்ட வெளியிலும் அணுவிலும் சிறிய , பரமாணுவிலும், வீற்றிருப்பவள் பரஞ்சோதியாகிய அம்பிகையே('ப்ரஞ்ஜ்யோதி: பரந்தாம பரமாணு: பராத்பரா')என்று நிர்க்குணப் பரம்பொருளாக அம்பிகையை லலிதா சஹஸ்ரநாமம் புகழ்கிறது. ('வெடிபடு அணுவினுள் ஒளியுரு கடும்பொறி'----- சிங்கைச் செல்வர், திரு.ஆலாசியம்)
2. சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமசுந்தரி தம்பதியருக்கு நீண்ட நாட்களுக்குப்பின் பிறந்த மகனுக்குப் பேச்சு வரவில்லை. 'செந்தூர் முருகா, உன் தாள் சரணம்' என்று ஐந்து வயது மகனையும் அழைத்துக் கொண்டு, திருச்செந்தூர் சென்று, அங்கேயே தங்கி, விரதமிருந்து வந்தனர். 45 வது நாள், முருகனருள் அக்குழந்தையிடம் பேசியது. அக்குழந்தை வாய் திறந்து கவிமழை பொழிந்து 'கந்தர் கலி வெண்பா'வை அருளியது. 'சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரத்தின் மகிமையே 'கந்தர் கலி வெண்பா'. 'குமரகுருபர ஸ்வாமிகள்' என்று பின்னாளில் உலகமெங்கும் அறியப்பட்ட அக்குழந்தையின் முதல் கவியில் தான் எத்தனை எத்தனை தத்துவார்த்தங்கள்.
- பலகோடி
அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க்
கண்டசக்தி மூன்றுட் காரணமாய்த் - தொண்டுபடும்
ஆவிப்புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும்
ஏவித்தனி நடத்தும் என் கோவே
முதல் இருவரிகளில் இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் சர்வசாதாரணமாகக் காணக் கிடைக்கின்றன. பல கோடி பிரபஞ்ச வெளிகளில் இருந்து, நாம் காணும் இந்த உலகம் உருவாகக் காரணமான, மூன்று சக்தி(படைத்தல், காத்தல், அழித்தல்)களுக்குக் உட்பொருளாய் விளங்குபவன் முருகன். இதன் மூலம், அண்ட சராசரங்கள் பல பிரபஞ்சவெளிகளை உள்ளடக்கியது என்பது தெரிவிக்கப்படுகிறது. பரம்பொருள் சகுண நிலையை அடைந்து, இவ்வுலகத் தோற்றத்திற்கு மூல காரணமாகிறது. ஐந்தொழிலான, படைத்தல், காத்தல்,அழித்தல்,மறைத்தல், ஆகியவற்றை ஏவித் தனி நடத்தும் என் கோவே என்று முருகனைப் பரம்பொருளாகக் கூறுகிறார் ஸ்வாமிகள். இதை சாக்த தத்துவத்தில், பஞ்ச – பிரம்ம – சொரூபிணி (பிரம்மத்திலிருந்து வெளிப்பட்டு ஐந்து தொழில் புரியும் ஐந்து பிரம்மங்களைத் தனது வடிவமாகக் கொண்டவள் அம்பிகை என்பது பொருள்) என்று லலிதா சஹஸ்ரநாமம் துதிக்கிறது. நமது சகோதரர் திரு. ஆலாசியமும் இதை,
ஒன்றுமில்லா தொன்றில் ஒன்றாய் - என்றும்
ஒன்றாகி நின்றே பண்டு நன்னுலகை
நன்றாய் படைக்க ஒன்றும் பலவாய்
ஒன்றியழ கொளிக்கும் ஆதிசக்தியே!
என்று புகழ்கிறார்.
3. இதுவும் ஒரு குழந்தையே. மூன்று வயது. தந்தை குளிக்கச் செல்லும்போது, 'நானும் வருவேன்' என்று அடம் பிடித்தது. தந்தை சிவபாத இருதயரும், தாய் பகவதி அம்மைக்கும் வாராது வந்த மாமணிபோல் வந்த பிள்ளை. மறுக்க மனமின்றி அழைத்துச் சென்ற அவர், குழந்தையைக் கரையில் உட்கார வைத்து, மூழ்கிக் குளிக்கலாயினார். தந்தையைக் காணாத குழந்தை,
கண் மலர்கள் நீர் ததும்பக் கைம் மலர்களால் பிசைந்து
வண்ண மலர்ச் செங்கனிவாய் மணி அதரம் புடை துடிப்ப
எண்ணில் மறை ஒலி பெருக எவ் உயிரும் குதுகலிப்ப
புண்ணியக் கன்று அனையவர் தாம் பொருமி அழுது அருளினார்.
'தாள முடியாதது, குழந்தையின் அழுகை' அல்லவா, அதற்கு ஏன் எவ்வுயிரும் குதூகலம் அடைய வேண்டும்? ஏனென்றால், இது புண்ணியக் கன்று,அவர் அழுவதும் அருளே( சிறு பேரழைத்தனவும் சீறி அருளாதே, ஸ்ரீஆண்டாள், திருப்பாவை.) சீர்காழி உறையும் தோணியப்பர் திருச்செவியில், குழந்தையின் அழுகுரல் கேட்டது. உமையை நோக்கி, 'பால் ஊட்டுக' எனப் பணித்தார். அன்னை அளித்த ஞானப்பால் உண்ட சிசு, வாயில் பால் வழிய அமர்ந்திருந்ததைக் கண்ட தந்தையார் 'யார் அளித்த பால் இது?' என்று வினவ, ஞானத்தின் சம்பந்தம் பெற்ற திருஞானசம்பந்தப்பெருமான்,
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்
எனத்தொடங்கும் தேவாரம் பாடினார்.
மகான்களின் திருவாக்கிலிருந்து உதித்த கவியமுதம், இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை தர வல்லது. முன் ஜென்ம வினை தீர்ந்து, மாயை அகன்று, அவன் அருளால் அவன் தாள் வணங்கும்பேறு, இத்தகையோரின் சொல்லமுதைப் பருகினால் நமக்குக் கிட்டும்.
விண்
உறுபெரும் பொருளது சுடரொளி நிறைய
மருளெனும்செய் பாவமதுரு உறுவது ஒழிய
பொறுத்தருள்புரிவாய் கருணைப் பெருங்கடலே!
(சிங்கைச் செல்வர், திரு.ஆலாசியம்)
என்று, எங்கும் நிறைப் பரம்பொருள் அருள்புரிய வேண்டுவோம்.
பின்குறிப்பு: (வாத்தியாருக்கு) பரம்பொருளின் நிர்க்குண நிலையையும், சகுண நிலையையும், சர்வ சாதாரணமாக, கவியில் கொண்டுவருவது, சாமான்ய மனிதர்களால் முடியக்கூடியது அல்ல என்பதைத் தாங்கள் அறிவீர்கள். சகோதரரின் சென்ற வாரக் கவிதை எத்தனை பேரைச் சென்று சேர்ந்தது என்று தெரியவில்லை. அதன் பெருமையை உரைக்கவே, சில இடங்களில் எடுத்தாள நேர்ந்தது. எத்தனையோ குடத்து விளக்குகளை குன்றின் மேல் ஏற்றும் தாங்கள் இதனைப் புரிந்து கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன். தவறெனில், தாங்களும் சகோதரரும் என் பிழை பொறுக்குமாறு, தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
பார்வதி இராமச்சந்திரன்,
பெங்களூரு.
Please visit my blog (AALOSANAI.blogspot.in).
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
குறையிருந்தாலும் குறைவதுண்டோ?
ஆக்கம் கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி
சென்ற வார மாணவர் மலரில் என் ஆக்கத்தில் கண்ட செய்திகளைப் பற்றி தஞ்சாவூரார் சில உண்மைகளைக் கூறியிருந்தார்.
நான் கூறிய 'தஞ்சை=வல்லம் சாலையில் உள்ள பிள்ளையார்பட்டிப் பிள்ளையார் 'பின்னம்' ஆனவர்; ஆகவே வழிபடும் வழக்க்ம் இல்லை' என்று கூறியிருந்தார்.
ஆம்!அவர் கூறியது சரியே.அந்தப் பிள்ளையாரின் நல்ல கொம்பும் முன்னர் இருந்த ஒரு குருக்களின் கவனக்குறைவால் அபிஷேகக் குடம் விழுந்து முறிந்துவிட்டது.
மஹாபாரதம் எழுதுவதற்குக்காகத் தன் ஒரு கொம்பைத் தானாக முறித்துக்கொண்ட பிள்ளையாருக்கு, மற்றொரு நல்ல கொம்பும் உடைந்து விட்டது.ஆகவே அவர் 'பின்னப்பட்டு' விட்டார்!
பிள்ளையார் சிலை வடிக்கும் போதே ஒரு கொம்பு முறிந்த நிலையிலேயே காட்டப்படுகிறது. அது பின்னமாகக் கொள்ளப் படுவதில்லை.
"இறைவன் பூரணமானவன்! அந்தப் பூரணத்திலிருந்து வருபவை அனைத்தும் பூரணமானவையே!அந்தப் பூரணங்கள் அனைத்தும் மீண்டும் பூரணத்திலேயே கலந்து பூரணமாகின்றன" என்று பேசும் ஒரு வேத சாந்திபாடம்.
பின்னம் ஆவது என்றால் உடைந்து போவது! உடைந்த விக்ரகங்களை வழிபடும் வழக்கம் இல்லை என்பது தஞ்சாவூரார் கூற்று. இது தொடர்பாக சில சுவையான செய்திகள் நினைவுக்கு வந்தன.
==============================================
"நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல் முடமாகிப் போனதென்ன சொல்வீரய்யா!" என்று தில்லை நடராஜரைப் பார்த்து கேள்வி எழுப்பிய ஒரு பாடல் உண்டு.
ஸ்ரீ கிருஷ்ணருக்கு "திரிபங்கி"என்று ஒரு பெயர் உண்டு. மூன்று இடத்தில் 'பெண்டு' உள்ளவர் என்று பொருள்.
=====================================
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தக்ஷிணேஸ்வரக் காளிகோவிலில் அர்ச்சராக பணியாற்றும் சமயம் அங்குள்ள கிருஷ்ணர் விக்ரஹத்திற்கு பின்னம் ஏற்பட்டுவிட்டது.
ஸ்ரீராமகிருஷ்ணர் காளி அன்னைக்கு மட்டுமே பூஜாரி. மற்ற விக்ரஹங்களுக்கு மேலும் சில அர்ச்சகர்கள் இருந்தனர்.அதில் ஒருவர் கவனப் பிசகாக கிருஷ்ணர் விக்ரஹத்தினை சேதப்படுத்தி விட்டார்.
இங்கே பின்னப்பட்ட பிள்ளையார் பற்றி எழுந்த அதே கேள்வி அக் காலத்திலேயே எழுந்தது."உடைந்த கிருஷ்ணர் விக்ரஹத்தை வழிபடலாமா?"
அக் கோவிலின் அறங்காவலர் ராணி ராசமணியிடம் பலரும் பல அபிப்ராயங்களைக் கூறினர்.பெரும்பாலானவர்களின் முடிவு 'உடைந்த விக்ரஹம் வழிபடத் தகுந்தது அல்ல' என்பதே.
புதிய விக்ரஹம் செய்ய ஆணை பிறப்பிக்க முடிவு செய்யும் முன்னர்
ஸ்ரீ பரமஹம்சரிடம் ராசமணி அம்மையார் கலந்தாலோசித்தார்.
அப்போது ஸ்ரீ பரமஹம்சர் இறை ஆவேச நிலையில் கூறினாராம்:"கிருஷ்ணர் கால் உடைந்து பின்னம் ஆகிவிட்டார் என்று அவரை மாற்ற நினைக்கும் ராச மணி தேவியாரே! உங்களுடைய மாப்பிள்ளைக்கு விபத்தில் கால் உடைந்து விட்டால் அவரையும் மாற்றிவிட்டு மகளுக்கு வேறு கணவன் தேடுவீர்களோ?"
ஸ்ரீ ராமகிருஷ்ணர் தன் திருக்கரங்களாலேயே அந்த ஸ்ரீ கிருஷ்ணர் விக்ரஹத்தை செப்பனிட்டு மீண்டும் அந்த விக்ரஹமே வழிபாட்டுக்கு வந்ததாம். இன்றளவும் அந்தப் பின்ன விக்ரஹமே வழி படப்படுகிறது என்று சொல்கிறார்கள்.
=================================================
ஸ்ரீ நீல கண்ட தீக்ஷதர் நாயக்க மன்னர்கள் காலத்தில் மதுரையில் முதல் அமைச்சராக இருந்தவர்.ஸ்ரீ அப்பைய தீக்ஷதரின் தத்துக் குமாரர். ஸ்ரீ நீலகண்டரும் பெருங்கவிஞர்;மஹாஞானி!
மதுரைக் கோவிலை புதுப்பிக்கும் பணியில் நாயக்க மன்னர்கள் ஈடுபட்டு இருந்த சமயம். ஒருநாள் முதல் அமைச்சர் நீலகண்டர் கோவிலில் மேற்பார்வை பார்க்கச் சென்றார்.அப்போது நாயக்க மன்னர், அரசியின் சிலைகள் கூப்பிய கைகளுடன் வடிக்கப்பட்டு வெளிப் பிராகரத்தில் அமைக்கப்பட்டு இருந்தன.
அரசியின் தொடைபகுதி செதுக்கும் சமயம் உளி தவறுதலாகப்பட்டு அந்தப்பகுதியில் ஒரு சில்லு தெறித்துவிட்டது. அச்சிலையை மாற்றி விடுவதாகச் சிற்பி நீலகண்டரிடம் கூறுகிறார்.
ஸ்ரீ நீலகண்டர் ஒரு நிமிடம் தியானம் செய்துவிட்டு, "ராணிக்கு இயற்கையாகவே அப்படி ஒரு குறைபாடு அந்த பாகத்தில் உள்ளது. எனவே இறை விருப்பப்படி அமைந்த சிலை அப்படியே இருக்கட்டும்" என்று கூறுகிறார்.
இச்செய்தி நாயக்க மன்னர் செவிகளுக்கு ஸ்ரீநீலகண்டரின் பகைவர்களால் திரிக்கப்பட்டு சென்று அடைகிறது."எப்படி ராணியின் மறைவான அங்கத்தில் உள்ள குறை இவருக்குத் தெரிய வந்தது?" என்ற கேள்வி எழுந்தது.
ஆத்திரத்தில் அறிவு இழந்த நாயக்க மன்னர்,ஸ்ரீ நீலகண்டரின் கண்களை நோண்டிவிடும் நோக்கத்துடன் அவரைக் கைது செய்து கூட்டி வரும்படி கூறுகிறார்.ஸ்ரீ நீலகண்டர் இல்லத்து வாசலில் அரசனின் படை வீரரகள் வந்து நிற்கின்றனர்.
அரசனின் எண்ணத்தை தன் உள் உணர்வால் அறிந்த நீலகண்டர் தன் கண்களைத் தானே அவித்துக் கொள்கிறார். செய்தி அறிந்த அரசன் ஓடோடி வந்து நீலகண்டரைப் பணிகிறான்.ஸ்ரீ மீனாக்ஷியை வேண்டி நீலகண்டர் பாட
இழந்த கண்களை மீண்டும் பெறுகிறார்.
அரசனிடம் விடை பெற்று எஙகள் பூர்விக கிராமமான அருவன் குளம் என்னும் நாரணம்மாள்புரத்தில் வந்து தங்குகிறார்.
இக்கிராமம் நெல்லைக்கு அருகில் தாழையூத்து அருகில் உள்ளது.அக்கரையில் உள்ள பாலாமடையில் ஸ்ரீநீலகண்ட தீக்ஷதரின் சமாதிக் கோவில் உள்ளது.என் 'வேர்களைத்தேடி ஒரு பயணம்' ஆக்கத்தில் முன்பே குறிப்பிட்டுள்ளேன்.
==============================================
ஸ்ரீ கிருஷ்ண அய்யப்ப சுவாமிகள் என்று ஒரு பெரியவர் இருந்தார். இப்போது அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார்.கிரஹஸ்த சன்னியாசி. அரசுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர்.ஓய்வு பெற்ற பின்னர் மனைவியுடன் பாத யாத்திரையாகவே பலக்ஷேத்திரங்களுக்கும் சென்று வந்தார்.பஜனை சம்பிரதாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
நான் பிள்ளையார்பட்டி பிள்ளையாரை வழிபட்டு வந்த சமயம் அவர் ஒருமுறை அங்கு வந்திருந்தார்.அவரிடம் பிள்ளையாரின் ஊனம் சுட்டிக் காட்டப்பட்டது.சுட்டியதோடு அல்லாமல் "பின்னப்பட்டவரை வழிபடலாமா?"என்ற கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது.
சுவாமிகள் அமர்ந்து தியானம் செய்து விட்டுக் கூறினார்.
"நல்ல நிலையில் முழுமையாக இருக்கும் ஒரு மாக்கல் பிள்ளையாரை பெரிய பிள்ளையாருக்கு முன்பாக வைத்துவிட்டு, இருவருக்குமாகச் சேர்த்து ஆராதனைகளை செய்யவும்" என்று அருள்வாக்காகக் கூறினார்.இதுதான் நல்ல மகான்களுக்கான அடையாளம். எதையுமே நிராகரிக்க மாட்டார்கள்.அவர் கூறியபடியே வழிபாடு செய்து வந்தேன்.
================================================
முன்பு ஊன முற்றவர்களைப் பல கொச்சைச் சொற்களால் அழைத்துவந்தோம். இப்போது அவர்களை 'மாற்றுத் திறனாளிகள்'என்று மதிப்பாக அழைக்கிறோம். மனிதர்களில் உடல் பாதிப்பு உள்ளவர்களுக்கே மதிப்பளிக்கத்துவங்கிவிட்ட நாம் தெய்வச் சிலைகளில் பழுது ஏற்பட்டால் அவற்றைத் தள்ளிவிடலாமா?
"தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ?==உங்கள்
அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?"
வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்: கே. முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4
பரமன் அழித்த முப்புரம் - மீண்டும்
பரா(ரம)சக்திப் படைத்த அற்புதம்.
ஆக்கம்: ஆலாசியம், சிங்கப்பூர்
சோதியனே
சுடர்மிகு ஞான வடிவானவனே
வேதியனே வேதமாக நின்றொளிரும் தூயவனே
தேவி ஒருபாகனே அண்டங்களாயிரம் கடந்த
ஆதி அந்தமில்லா அமுதே!
அமுதே
அறிவே ஆனந்தமே - அடியார்
குமுத மனம் துதிக்கும் கோவே
அமு(மிர்)தம் தரவே ஆலகாலம் உண்ட
குமுதவல்லி தொழும் தேவனே!
தேவனே
தேவாதி தேவனே ஆதிமூலனே
மூவரின் அன்னை முழுமுதற் காதலனே
மூவாமருந்தே முப்புரம் அழித்தவனே எப்புறமும்
மேவ எங்கும்நிறை பிரம்மமே!
பிரம்மமே
ஆதிஅந்த மில்லாத்தூய பேரொளியே
பிரபஞ்ச அமைதியில்; விழைந்த விருப்பத்தால்
பிரக்ஞை மேவி ஒளிகீற்றாய் உடைபட்டே
பிராணனோடு ஆகாயம்சேர் ஞாயிறே!
ஞாயிறாய்
ஒளிரும் அக்னிப் பரமனொடு
ஞமர்சக்தியும் கொஞ்சிக் குலவி ஞெகிழிஒலிக்க
ஞமலிஉண்ட தோர்ஞஞ்சை மேவப்பெருங் கூத்தாடி
ஞான்று ஞெகிழடுதீ பொங்கியதே!
(ஞமர் - பரந்து விரிந்த
ஞெகிழி - சலங்கை
ஞமலி – கள் / மயில்
ஞஞ்சை - மயக்கம்
ஞான்று - அந்த நேரம் / அப்பொழுது
ஞெகிழடுதீ =ஞெகிழ் + அடுதீ = உருகிப் பெருகிய
பெரும் தீ.)
பொங்கிய
பேரொளி பரவெளி எங்கும்
தங்கிதோடு டையோன் உடுக்கை யொலியோடு
சங்கும்பெரும் பறையும் சேர்ந்தொலிக்க வெடித்து
வெங்கனல்தெறித்து சக்திசமைத்தது முப்புரமே.
முப்புரமேவிய
செந்தீப்பந்துகள் சக்கரமாயோடி முட்டிமோதி
எப்புறமும் வியாபித்தேநிற்கும் சக்தியின்
ஆளுமையிலே
முப்பொழுதும் முடிவில்லா மூலத்தின் மேனியாக
எப்பொழுதும் எழில் கொஞ்சுகிறதே.
ஆலாசியம் கோ.
சிங்கப்பூர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜல்லிக்கட்டு
ஆக்கம் தனுசு
நித்தம் ஒரு யுத்தத் திருவிழா என்வாழ்வில்
அதில் முரண்பட்டமொத்தக் காளைகளும்
என்னை அரவமின்றி அழிக்க
முப்பொழுதும் முயலும் முரட்டுவிழா.
என் தோட்டத்து தேங்காயை எடுத்து
தெருப் புள்ளையாருக்கு உடைக்க
சீவிய கொம்புடன் வரும் "பொலிகாளை"களை
எந்த தெம்பு கொண்டு அடக்குவது.
மிரட்டல் பார்வையால் பணியவைத்து
எதையும் சுருட்டிக் கொள்ளும்
இந்த பெரும்விழி "புலிக்குளகாளை"களை
எந்த திமிர் கொண்டு அடக்குவது.
மந்திரமின்றி என் பெயரை கெடுக்கும்
யாரென்றே தெரியாத
சில "இருச்சாளி காளை"களை
எந்த தந்திரம் கொண்டு அழிப்பது.
கொள்ளையிலே பங்குதந்து
என்னையும் கள்ளனாக்க துடிக்கும்
இந்த முள்ளுக்காடு "காங்கேய காளை"களை
எந்த நீரில்லா கள்ளிக்காட்டில் தள்ளுவது .
ஆறை நூறாக்கி கூரையை கோபுரமாக்கையில்
ஊமையாய் உலைவைக்கும் உறவென்ற
மவுனமான "மணப்பாறை காளை"களை
எந்த மூக்கணாங் கயிறுடன் இறுக்குவது.
உள்ளத்தை மறைத்து உதட்டால் சிரித்து
என் உழைப்பை உண்டு பிழைப்பை பழிக்கும்
சிங்காரமான "சிந்துகாளை"களை
எந்த சாட்டைக்கழி கொண்டு விரட்டுவது.
சாந்த சொருபியாய் சோப்புபோட்டு
சத்தமின்றி என்சங்கு அறுக்கும்
சித்திரைப் பூ"சில்லிகாளை"களை
சொல்லாமல் அடிக்க எந்த சாந்து பூசுவது.
வெல்ல வார்த்தைகளை வாரியிறைத்து
அவர்களின் சுமையை என்மீதேற்றும்
வெள்ளை வேட்டி "பூம் பூம் காளை"களை
எந்த உறுமி அடித்து விரட்டுவது.
ஊர் என்னை அறிய - நான்
என்னை அறிந்து போகையில்- இந்த
வேலிதாண்டும் காளைகள்
என்னை பணிய செல்வதெப்படி?தணிய சொல்வதெப்படி ?
மாடுபிடி ஆட்டமாய் மாறிவிட்ட வாழ்கையில்
முட்டுப் பட்டு மடியாமல் மோதிப்பார்க்க துணிந்து
தினவெடுத்த தோளோடு தொடை தட்டி புறப்படுகிறேன்
ஜல்லிக்கட்டை விளையாடி பார்க்க .
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ஆக்கம் தனுசு
நித்தம் ஒரு யுத்தத் திருவிழா என்வாழ்வில்
அதில் முரண்பட்டமொத்தக் காளைகளும்
என்னை அரவமின்றி அழிக்க
முப்பொழுதும் முயலும் முரட்டுவிழா.
என் தோட்டத்து தேங்காயை எடுத்து
தெருப் புள்ளையாருக்கு உடைக்க
சீவிய கொம்புடன் வரும் "பொலிகாளை"களை
எந்த தெம்பு கொண்டு அடக்குவது.
மிரட்டல் பார்வையால் பணியவைத்து
எதையும் சுருட்டிக் கொள்ளும்
இந்த பெரும்விழி "புலிக்குளகாளை"களை
எந்த திமிர் கொண்டு அடக்குவது.
மந்திரமின்றி என் பெயரை கெடுக்கும்
யாரென்றே தெரியாத
சில "இருச்சாளி காளை"களை
எந்த தந்திரம் கொண்டு அழிப்பது.
கொள்ளையிலே பங்குதந்து
என்னையும் கள்ளனாக்க துடிக்கும்
இந்த முள்ளுக்காடு "காங்கேய காளை"களை
எந்த நீரில்லா கள்ளிக்காட்டில் தள்ளுவது .
ஆறை நூறாக்கி கூரையை கோபுரமாக்கையில்
ஊமையாய் உலைவைக்கும் உறவென்ற
மவுனமான "மணப்பாறை காளை"களை
எந்த மூக்கணாங் கயிறுடன் இறுக்குவது.
உள்ளத்தை மறைத்து உதட்டால் சிரித்து
என் உழைப்பை உண்டு பிழைப்பை பழிக்கும்
சிங்காரமான "சிந்துகாளை"களை
எந்த சாட்டைக்கழி கொண்டு விரட்டுவது.
சாந்த சொருபியாய் சோப்புபோட்டு
சத்தமின்றி என்சங்கு அறுக்கும்
சித்திரைப் பூ"சில்லிகாளை"களை
சொல்லாமல் அடிக்க எந்த சாந்து பூசுவது.
வெல்ல வார்த்தைகளை வாரியிறைத்து
அவர்களின் சுமையை என்மீதேற்றும்
வெள்ளை வேட்டி "பூம் பூம் காளை"களை
எந்த உறுமி அடித்து விரட்டுவது.
ஊர் என்னை அறிய - நான்
என்னை அறிந்து போகையில்- இந்த
வேலிதாண்டும் காளைகள்
என்னை பணிய செல்வதெப்படி?தணிய சொல்வதெப்படி ?
மாடுபிடி ஆட்டமாய் மாறிவிட்ட வாழ்கையில்
முட்டுப் பட்டு மடியாமல் மோதிப்பார்க்க துணிந்து
தினவெடுத்த தோளோடு தொடை தட்டி புறப்படுகிறேன்
ஜல்லிக்கட்டை விளையாடி பார்க்க .
-தனுசு-
6
புலிக்கட்
ஆக்கம் தனுசு
(அனைவருக்கும் வணக்கம். எண் 3ற்கான பதிவின் பின்னூட்டங்களைப் படித்திருப்பீர்கள். "நாம் ஊரில் ஒரு மஞ்சள் துண்டு மிகவும் பிரபலம்" என்று நான் பின்னூட்டமிட, "வெளி நாட்டில் இருக்கும் தைரியமா" என்று தேமொழி அவர்கள் பின்னூட்டமிட, "நான் தைரியமான ஆள்தான் எண்கள் குடும்பத்திற்கு புலிகட் என்றொரு பட்டப் பெயர் இருக்கு அது ஏன் என்றால், எண் தாத்தா புலியை அடித்தே கொன்றார்" என்று பின்னூட்டமிட , "அதை சொல்லுங்கள்" என்று ஆலாசியம் ,உமா ஆகியோர் கேட்க, எங்களின் நினைவை விட்டே விலகிப் போன ஒரு நிஜ சம்பவத்தை எழுதி உள்ளேன்)
கடலூர் மாவட்டத்தில் இருக்கும் மஞ்சக் கொல்லை எனும் கிராமம் தான் என் தாத்தாவின் ஊர். எந்தந்தையாரின் எட்டு பத்து வயதில் நடந்த சம்பவம்.
என் தாத்தாவிடம் ஆடு மாடுகள் நூற்றுக் கணக்கில் இருந்த நேரமாம்.இதுதான் இவருக்கு தொழில்.சுற்றி இருக்கும் ஊர்களில் நடக்கும் சந்தைகளில் கொண்டுபோய் விற்று வருமானம் பார்ப்பார். வருமானம் இதிலிருந்துதான் .
ஆண்டுகள் சரியாக நினைவில்லை , சுதந்திரம் வாங்கிய பின்பு 50 களில் நடந்த சம்பவம் . இப்பொழுதும் இந்த மஞ்சக் கொல்லை கிராமம் ,இன்னும் படு
கிராமமாகவே இருக்கிறது. இப்போதைக்கு சொன்னால் விழுப்புரம் மாவட்டமும் கடலூர் மாவட்டமும் இணையும் இடத்தில் இருக்கிறது. நெல்லிக் குப்பம் ,குறிஞ்சிப் பாடி ஆகிய ஊர்களை தொட்டுக் கொண்டு இருக்கும் ஊர். இப்போது வெறும் முந்திரி காடாக இருக்கிறது. அப்போது பனை மரங்களும் , பலா மரங்களுமாக இருந்த வனம்
மேய்ச்சலுக்காக இந்த இடங்களில்தான் ஆடு மாடுகளை விடுவார்கள் .வனத்திலிருந்த புலிகளின் அட்டகாசம் அடிக்கடி எங்களின் ஆடு மாடு மீது நடக்கும்
,ஊருக்குள்ளும் ஓரிருமுறை புலி வந்துள்ளது .
புலி நட மாட்டம் இருக்கு என்று தெரிந்தும் அங்கேயே பட்டி வைப்பதும் அதனை இரவு பகல் என்று பாராமல் விசிட்டிங் செய்வதும் அந்த தினசரி வேலைகளில் அதுவும் ஒன்ர்றாகி விட்டிருந்தது அவருக்கு.
என் தந்தை தான் என் தாத்தாவுக்கு கடைசி பையன்.என் தந்தையோடு பிறந்தவர்கள் மூன்று ஆண்கள்,நாக்கு பெண்கள், என் தந்தை பிறந்து இரண்டு மூன்று மாதத்தில் என் பாட்டி இறந்துவிட்டார்கள். ஆகையால் என் தாத்தாவோடு என் தந்தை எப்போதும் ஒட்டிக் கொண்டே இருப்பார்.
ஒருமுறை மேய்ச்சலுக்கு விட்ட கால்நடைகளை பார்க்க என் தந்தையையும் கூட்டிக் கொண்டு போனார் என் தாத்தா. ஆடு மாடுகள் அடைத்து வைக்கும் பட்டிக்கு பக்கத்தில் இரண்டு புலிகள் அங்கு பதுங்குவதைப் பார்த்து விட்டார்., காய்ந்த சுள்ளிகளையும் ,இலைகளையும் போட்டு நெருப்பு உண்டாக்கி அவைகளை விரட்டி அடித்தார் ,ஓடிப்போன புலிகள் மீண்டும் வரலாம் என்ற கணிப்பில் அங்கேயே தங்கி விட்டார் மாலை நெருங்கும் வரை. மீண்டும் அந்த புலிகள் வரவில்லை என்பதால் ஆடு மாடுகளை வேலிக்குள் விட்டு அடைத்து விட்டு எந்தந்தையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினார் . ஆடு மாடுகள் தங்கும் பட்டியிலிருந்து வீட்டுக்கு வர சுமார் ஒன்னரை மணி ஆகும்.
இப்போது கெடிலம் நதி என்று சொல்லும் ஆற்றின் ஒரு சிறிய கிளை இந்த பகுதியில் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது.இந்த கெடிலம் நதி கடலூரில் வந்து கடலில் கலக்கிறது . இது செம்மண் பகுதி. ஆடு மாடுகள் நீர் குடிப்பதெல்லாம் இதில் தான்.
அந்த வாய்க்காலில் இறங்கி முகம் கழுவி திரும்பும் போது எதிரே முறைத்துக் கொண்டு அதில் ஒரு புலி புதரிலிருந்து வெளி வர ஆடிவிட்டார் என் தாத்தா. .
அவர் கவலை தன் மகன் மீது.
உடனே என் தந்தையை வாய்க்காலில் இறக்கி கழுத்து வரை நீரில் நிற்க வைத்து விட்டார்.
தான் மட்டும் கரை ஏறினார். பதுங்கிய புலி பாய சாமார்த்தியமாக விலகி விட்டார்.பாந்த புலி கீழே விழா அதன் பின்னங்கால்களைப் பிடித்தக் கொண்டு கர கர வென பத்து,இருப்பது சுத்து சுற்றி தரையில் ஓங்கி ஓங்கி அடிக்க ரத்த வெள்ளமானது புலியின் தலை , இறந்ததை ஊர்ஜிதம் செய்துக் கொண்டு துண்டை இரு பக்கம் தோள்களிலும் போடுவது போல் ,புலியை தூக்கி தன் தோள்களின் குறுக்கே போட்டுக் கொண்டு , என் தந்தையையும் அழைத்துக் கொண்டு ஒருமணிநேர நடையில் அந்த பாரத்தோடு வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அந்த வீர செயலால் ஊர்க்காரர்கள் "புலிக்கட்டி" என்று அழைத்தார்கள் .
இதில் புலிக்கட் எங்கிருந்து வருகிறது. புலிக்கட் என்றால் என்ன.
புலிக்கட் என்ற வார்த்தை புரியாததாக இருக்கும்.அது என்ன வென்றால்;
அந்த காலங்களில் நாடகங்களில் நடிப்பவர்களின் கேரக்டரை பொறுத்தே நாடக நடிகர்களின் பெயர்கள் வருமாம் .
கள்ளபார்ட் நடராசன் , ராஜாபார்ட் ரங்கதுரை என்பதெல்லாம் அப்படி வந்ததுதான் . இன்றைக்கு இளைய தளபதி, சின்ன தளபதி என்று வருவதுபோல் அன்றைக்கு "பார்ட்"என்று தான் வருமாம்.
"கள்ள பார்ட்" என்றால் கள்ளன் ,திருடன் கேரக்டரகளையே அதிகம் செய்பவர்.
"ராஜாபார்ட்" என்றால் ராஜா கேரக்டரையே செய்பவர்கள் .
அந்தமதிப்பு மிக்க "பார்ட்" பட்டம் அன்றைக்கு "கட்டி" அடித்தார் என்பதை குறிக்கும் வகையில் என்தாத்தவுக்கு" புலி கட்டி " ஆக மாற்றி ஊர்காரர்கள்
அழைத்தார்கள் , அந்த" கட்டி" நாளடைவில் மருவி "கட்" என்றாகியது. அதுதான் "புலிகட் "
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்ன வேனில், ஒரு நாய் குறைத்தாலே நாம் அடுத்த முறை அந்த தெருப் பக்கம் போக மாட்டோம். பூனை குறுக்கே வந்தால் அன்றைய பொழுது அத்தோடு முடிந்தது. இப்படி இருக்கையில், புலி நட மாட்டம் இருக்கு என்று தெரிந்தே போவது, என்ன வகை துணிச்சல். புலி எதிரே உறும அவர் பதப் படாமல், ஓடாமல், ஒளியாமல்
நிதானமாக தன் மகனை நீரில் இறக்கி பாது காப்பாய் வைத்து விட்டு, புலியை எதிர் கொள்வது என்ன வகை துணிச்சல்.
என் தந்தை என்னிடமும் என் தம்பி இடமும் எப்போதும் சொல்வது உள்ளத்திலும் உடம்பிலும் பலம் இருக்க வேண்டும் என்பார். சின்ன வயதிலேயே உடற் பயிற்சி செய்ய வைத்து பழக்கப் படுத்தி விட்டார். சிலம்பு விளையாட்டு கற்று கொடுத்தார்.
இந்த சிலம்பு விளையாட்டில் "படை விரட்டி" என்று ஒரு வகை கம்பு சுழல் இருக்கிறது. பத்து பேர்கள் நம்மை சுற்றிக் கொண்டாலும் கிர் கிர் கிர்ரென்று சுழற்ற பத்து பேர்களும் பஞ்சாய் பறந்து விடுவாரகள்.
ஒரு மஞ்சள் , மஞ்சக்கொல்லை வரை வளர்ந்து என் தாத்தாவையும் என் தந்தையையும் நினைக்க வைத்தது. வகுப்பறையில் இதனை நான் பகிர்ந்துக்
கொள்வேன் என்று சிறிதும் நினைத்து பார்க்க வில்லை.
தொலைந்து போன ஒரு நினைவை உயிரூட்டி உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வைத்த தேமொழி யின் பின்னூட்டத்திற்கு மிகப் பெரிய நன்றிகள்.
நான் என்பெயரை" புலிகட் தனுசு" என்று வைத்துக் கொள்ளலாமா?
-தனுசு-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7
வகுப்பறை நகைச்சுவை
அனுப்பியவர் வெ.கோபாலன், தஞ்சாவூர்
TEACHER: Maria, go to the map and find North America .
MARIA: Here it is.
TEACHER: Correct. Now class, who discovered America ?
CLASS: Maria.
____________________________________
TEACHER: John, why are you doing your math multiplication on the floor?
JOHN: You told me to do it without using tables.
__________________________________________
TEACHER: Glenn, how do you spell 'crocodile?'
GLENN: K-R-O-K-O-D-I-A-L'
TEACHER: No, that's wrong
GLENN: Maybe it is wrong, but you asked me how I spell it. (I Love this kid)
____________________________________________
TEACHER: Donald, what is the chemical formula for water?
DONALD: H I J K L M N O.
TEACHER: What are you talking about?
DONALD: Yesterday you said it's H to O.
__________________________________
TEACHER: Winnie, name one important thing we have today that we didn't have ten years ago.
WINNIE: Me!
__________________________________________
TEACHER: Glen, why do you always get so dirty?
GLEN: Well, I'm a lot closer to the ground than you are.
_______________________________________
TEACHER: Millie, give me a sentence starting with ' I. '
MILLIE: I is..
TEACHER: No, Millie..... Always say, 'I am.'
MILLIE: All right.... 'I am the ninth letter of the alphabet.'
________________________________
TEACHER: George Washington not only chopped down his father's cherry tree, but also admitted it. Now, Louie, do you know why his father didn't punish him?
LOUIS: Because George still had the axe in his hand.
______________________________________
TEACHER: Now, Simon, tell me frankly, do you say prayers before eating?
SIMON: No sir, I don't have to, my Mom is a good cook..
______________________________
TEACHER: Clyde , your composition on 'My Dog' is exactly the same as your brother's. Did you copy his?
CLYDE : No, sir. It's the same dog.
___________________________________
TEACHER: Harold, what do you call a person who keeps on talking when people are no longer interested?
HAROLD: A teacher
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8
நகைச்சுவை: எதிர்ப் பாட்டு
ஆக்கம் தேமொழி
(சபரியின் நகைச்சுவைகளை பெண்களின்/மனைவிகளின் கண்ணோட்டத்தில் மாற்றி அனுப்பியுள்ளேன். தமிழில் எழுதியிருக்கலாம், ஆனால் "H" என்ற
ஆங்கில எழுத்துக்கு எழுதியிருப்பதாலும், அவர் நகைச்சுவை துணுக்குகளுக்கு பதில் போல் இருப்பதாலும் ஆங்கிலத்தில் எழுத நேர்ந்தது.)
1.
The devil asked the wife who is a recent admission at the hell; "Do you miss your Home?"
Lady replied: Please don't remind me of that hell, I am just enjoying my life here.
2.
Wife has suspicion of her husband's recent change in behavior of visiting neighbors home. To find out the truth she decided to trick him.
In the middle of the night she shouted:
"Up! Quick! My husband is back!"
The husband gets up and jumps out of the window.
3.
Do you know why husband starts with 'H'...
Because for all the wife's requests… they reply with only one word that starts with "H"...
For example:….a wife is in the middle of preparing lunch, suddenly her baby is started screaming.
Wife: Honey, the baby is crying, here is the bottle ...please feed him.
Husband: How?
Wife: Ok…I will be there in a minute, at least change his diaper
Husband: How?
Wife: Good grief, at least remove the dirty diaper and wash him well, give him a bath
Husband: How?
Wife: Let us make a deal, until I am taking care of the baby please take care of this meal preparation
Husband: How?
4.
Nobody teaches Volcanoes to erupt, Tsunamis to devastate, Hurricanes to sway around & no one teaches How to choose a husband,
NATURAL DISASTERS JUST HAPPEN.
5.
Difference between Friend & Husband.
You can tell your Friend "you are the best person I ever met"
But do you think you can honestly tell THAT to your husband
6.
Judge: why did you shoot your husband instead of shooting his lover?
Wise wife: I just got rid of the cause instead of just dealing with the symptoms one by one
7.
Doctor: Sir, your wife needs rest and peace, so please arrange for a vacation.
Husband: Doc, where should I take her, do you think a hill station would be fine?
Doctor: I don't care where you want to go, I suggested you to go by yourself and leave her alone.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9
என்ன வெட்டி முறிக்கிற -பகுதி இரண்டு!!!!
ஆக்கம்: ஜி.ஆனந்தமுருகன்இரண்டு குழந்தையுடைய தம்பதிகள்,வேலைக்கு செல்லும் கணவன் வீட்டை கவனித்து கொள்ளும் மனைவி.சீராக சென்று கொண்டுரிந்த வாழ்க்கை (NH 45 ரோட்டில் செல்வது போல்) திடீரென ஈகோ எனும் அரக்கனின் பார்வை விழுந்தது.
ஏற்ற,தாழ்வுகள்,நிறைந்ததுதானே மானிட வாழ்க்கை!!அது தானே சுவாரசியம்!! ECG எடுக்கும் பொழுது திரையில் அலைகள் மேலும்,கீழும் சென்று வந்தால்தான் மனிதன் உயிருடன் இருக்கிறான் என்று அர்த்தம்மாகிறதல்லவா!!ஒரே சீராக (flat) இருந்தால் சவம் என்று பொருளல்லவா?!
ஆணாதிக்கம்,ஏழரையை ஆரம்பித்தது,நான் காலையிலருந்து,சாயங்காலம் வரை வேலைக்குபோய் கஷ்ட்டப்பட்டு உழைச்சிட்டு வரேன்!உன்னாலே வீட்ட,குழந்தைகள்,கூட கவனிக்க முடியலையா? "நீங்க வேலைக்கு போயிட்டு வந்தறீங்க,நான் வீட்ல எந்த வேலையும் இல்லாம அப்பிடியே உக்கந்துதானே இருக்கேன்" இது மனைவி (கலவரம்).தொடர்ச்சியாக மனைவி,"புள்ளைங்களா ரெண்டும்,அப்படியே ஒங்களமாதிரி!!?யாரோட கஷ்டத்தையும் புரிஞ்சிக்கற ஜென்மங்களா!!ஒவ்வரு நாளும் உயிரு போகுது"....கொஞ்சம் ஆசுவாசபடுத்தி கொள்கிறாள்.அவனுக்கோ இப்போதே கண்ண கட்ட ஆரம்பித்து விட்டது!!ஒரு வேலை எறும்பு புத்துக்குள் கையை விட்டோமோ?என சந்தேகமெல்லாம் வந்து மறைந்தது.
இருந்தாலும் தன்மானம் விட்டுகொடுக்கவில்லை.....என்னடி,நீ மட்டும்தான் புதுசா குழந்தை பெத்த மாதிரி பேசற?!..அவள்,.நான் பழசாதான் பெத்துருக்கேன்...அதுங்க first பிள்ளைகளே இல்லை!?ஒங்களோட வகையறா!!??......அப்பிடின,எங்க குடும்பத்தை பார்த்த உனக்கு காட்டுமிராண்டியாக தெரியுதா!!??........அதை நான் வேற சொல்லனுமா!? "இந்த வீட்டுக்கு மாதம் 4000 சம்பளம் கொடுத்த கூட எந்த வேலையாளுங்க வரமான்ட்டாங்க" மனதின் ஆதங்கத்தை கொட்டினாள்.
கோபம் தலைகேறிய கணவன் "என்ன வீட்டுலே பெரிசா வெட்டி முறிக்கிறே!? நான் செய்யற வேலைய ஒன்னாலே செய்யமுடியுமா? ஒன்னோட வேலைய செய்ய என்னக்கு ஒரு மணி நேரம் போதும் பண்ணிமுடிசுடுவேன்!!
ம்ம்.க்கும்!!!.கிழிச்சுடுவிங்க!!?அவனை மேலும் வெறுப்பேற்ற அவன் தசாவதாரம் அல்லாமல் பல்வேறு அவதாரங்கள் எடுத்து ஆட,அவள் கூலாக டிவி சீரியலில் மூழ்கினாள்.அன்று அவனுக்கு விடுமுறையாதலால் வெளியே சென்று lunch க்கு வந்தான்.கோபமாக மனைவியை பார்க்க ..அவள் உணவு பரிமாற கிச்சனுக்கு செல்ல இவன் சோபாவில் அமர்த்து டிவியை நோக்கினான்.
என்ன சாருக்கு கோபமெல்லாம் போச்சா!இல்லையா!?கிச்சனிலிருந்து குரல்!? ஒன் வேலை எதுவோ?அதை மட்டும் பாரு!சும்மா,என்னை சீண்டாதே!!
சானலை மாற்றினான்."தினமும் மூணு கிளாஸ் பால் கொடுக்கிறேன்" விளம்பரம் வெறுப்பேற்றியது.மீண்டும் சானல் மாற்றம், மானட, மயிலாட்டங்களூம் பிடிக்காமல் மீண்டும் மாற்ற "நல்ல ஆண் மகன் கணவனாகவே வந்து வாய்த்திடும் பொது" சன் டிவில் சீரியல் டைட்டில் சாங் ஒலித்தது. "நல்ல கேளுங்க உங்களுக்குத்தான் இந்த பாட்டு" சமயலறையிலிருந்து சகபத்தினி.
வேறு சானல் அழுத்தினான்'போன ஆட்சியில் போட்ட நடைமுறை படுத்திய திட்டங்கள் இந்த ஆட்சியில் முடக்கபடுகின்ற்ன "ஒரு அரசியல்வாதி கத்திகத்தி பிசிறரடைத்த குரலில்...ஒடனே கணவன் சத்தமாக "போன ஆட்சியில் செய்த கல்யாணம் கூட செல்லாதாம் "சட்டம் கொண்டுவந்து இருக்காங்கலாம்"....அடுப்படியில் "கடுகு"பொரிக்கும் (வெடிக்கும் ) சத்தம் கேட்டது,கூடவே அவளும் பொறிகிறது தெரிந்தது.மீண்டும் சானல் மாற்றம் முதல்வன் திரைப்படம் சென்றது.அதை பார்த்தவுடன் மனைவி "இது போல் (ஒரு நாள் முதல்வன் போல்) ஒரு நாள் நீங்க பெண்ணாக மாறனும், நான் ஆணாக மாறனும் நாள் வேலைக்கு போய்ட்டுவரனும்.நீங்க வீட்டு வேலையெல்லாம் செஞ்சு வைக்கணும்!!?? அப்படியிருந்தால் நல்ல இருக்கும்லே!!!அவள் கேட்க என்ன ஆச்சரியம் மிக பிரமாண்ட ஜோதி அவர்கள் எதிரில் தோன்றியது அதிலிருந்து இறைவன் பேசத் தொடங்கினார்.
குழந்தைகளே! உங்களது உரையாடல்களை கேட்டு உங்களுக்கு உதவி புரிய வந்துள்ளேன்."கணவன் இறைவனிடம் "கஷ்டமுன்னு கூப்பிட்டால் வரமாட்டேன்ரீங்கள்" கடவுள் "அது கர்மவினை போனஜென்ம பாவ புண்ணியம் அதை நீங்கள் அனுபவித்து ஆகவேண்டியது கட்டயமாகிறது"
என்ன சாமீ சமச்சீர் கல்வி அமுல் படுத்திற மாதிரி சொல்றிங்க "போன மாசம் செய்த தப்புக்கு தண்டனை கொடுத்தா என்ன தப்பு பண்ணேன்னு தெரியும்? போன ஜென்ம தப்புக்கு தண்டனை கொடுத்தா எப்படி சாமீ?!!
கடவுளோட 'மூடனே,உன் நாக்கிலே சனியோட ஆதிக்கம் உள்ளது. மூன்று நாட்கள் நீ உன் மனைவி ரூபத்திலும்,உன் மனைவி உன் ரூபத்திலும் மாறுவீர்களாக!!! மீண்டும் சந்திப்போம்.எனக்கூறி மறைகிறார்.
மறுநாள் அதிகாலையிலே முழிப்பு வந்தது அவளாக மாறிய அவனுக்கு, எழுந்து குளித்து காப்பியில் ஆரம்பித்து,வாசல் தெளிப்பது,பசங்களுக்கு சுடுதண்ணீர் போட்டு,எழுப்ப சென்றால் school க்கு போக மாட்டேன்னு ஒரே அழுகை,சமாதானபடுத்தி அழைத்து,குளிக்க வைத்து தலை சீவி,uniform போடும் பொது குக்கரில் விசில் சத்தம்,அவசரமாக இறக்கி கொதிவரும் நிலையில் இருந்த ரசத்தை ஆப் செய்து விட்டு,காலை சிற்றுண்டிக்காக தோசை கல்லை அடுப்பில் போடும் பொது மணி 8.20 இன்னும் இருபது நிமிடங்களே உள்ளன.அதற்குள் அவனாக மாறிய அவள் குளித்துவிட்டு வர பசங்க பாட்டில்லில் தண்ணீர் பிடிங்க!........என்னக்கு ஆபீஸ் டைம் ஆயிடுச்சு!!
அதையும் அவனே செய்ய எல்லோரையும் கிளப்பிவிட்டபிறகு மணியை பார்க்க 9.10 பின் அவசரமாக வீட்டை பெருக்கி,மாப் பண்ணி பாத்திரம் துலக்கும் போதுதான் மனதில் லைட் ஆக மணியடித்தது அவசரப்பட்டு விட்டோமோ!!! சரி!பார்ப்போம் மூணு நாள்தானே என தனக்கு தானே சமாதனம் பண்ணிக்கொண்டு மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
அழுக்குத் துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு எல்லாவற்றையும் arrange செய்து முடிக்க மணி 10.30 காலை உணவை சாப்பிட்டுவிட்டு,பேங்க் சென்று பணம் வித்டிராவ் பண்ணிவிட்டு,அத்தியாசிய மளிகை பொருள்கள் வாங்கி வீடு வந்து சேர்ந்த பொழுது மணி 2.30 வாஷிங்மெஷ்னில் துவைத்து முடித்ததற்கான அழைப்பு வந்து கொண்டிருந்தது. அவைகளைக் காயப்போட்ட பிறகு மதிய சாப்பாட்டு மணி 3.௦௦ க்கு,மனதில் 'என்னடா இது நாய் பொழப்பு?!'என எண்ணியவாரே பள்ளி முடிந்தது வரும் குழந்தைக்களுக்கு பால் கொதிக்க வைத்து ஸ்நாக்ஸ் ரெடி பண்ணுவதுக்குள்,
'கீங்க்" ஸ்கூல் பஸ்சின் ஹாரன் சவுண்ட் கேட்டது.அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு ஓட்டமாக பஸ் நிறுத்தத்திற்கு ஒடி குழந்தைகளின் ஸ்கூல்பாக்கை வாங்கி கொண்டு லஞ்ச்பாகையும் எடுத்து கொண்டு
வருகையில் மகன் "மம்மி,என்னைய ராகுல் அடிச்சிட்டான் இப்பவே கேளுங்க!?......சரி வா நாளைக்கு பஸ் எத்துறப்போ கேட்கிறேன் அடம் பிடித்தவனை சரிபண்ணி அழைத்துகொண்டு வருவதற்குள் பால் பொங்கும் நிலைக்கு வந்து விட shoe வை மம்மி நீ தான் அவித்துவிடனும் இது பெரிய பெண். ஸ்நாக்ஸ்,பால் கொடுத்து விட்டு கொடியில் மலர்ந்து இருக்கும் இரட்டை மல்லியை பறிப்பதற்கு மொட்டை மாடிக்கு செல்லும்முன் இரண்டு பேரும் பேஸ் வாஷ் செய்து விட்டு தனி தனியா உக்கார்ந்து ஹோம் வொர்க் செய்யணும்.சண்டை போட்டுக்கிட்டு இருந்தீகள்? அவ்வளவுதான்! சொல்லிட்டேன்.
பூப்பறித்து விட்டு இறங்கி வந்து பார்த்தால் குருஷேத்ரம் போல் வீடு!? இரண்டு பேரையும் விட்டு சுழட்டி அடித்து விட்டு பூக்கட்ட உட்கார்ந்தால் மணி 6.00 "அம்மா,பசிக்கிறது!" இது பையன்.சாப்பாடு போட்டுப் பாடங்களை ரிவிசன் கொடுத்து கொன்றிருக்கும் பொது கணவரின் வருகை திரும்பவும் காபி, ஸ்நாக்ஸ் சாப்பாட்டு பாத்திரம் கழுவுதல். இரவு உணவு ரெடி செய்தல் மணி படுக்கும் போது 10.30 மறுநாளும் இதே ரீப்பீடு!? அதற்க்கு அடுத்தநாள் same blood மூன்றவது நாள் கடவுள் இருவர் எதிரிலும் தோன்றுகிறார்.
உடனே இவன் "கடவுளேனு காலில் விழுந்தான்" மன்னிச்சுடுங்க சாமி உடனே என்னை பழையபடி மாத்திருங்க!அப்படின்னு கதறினான்.கடவுள் "மகனே.எனக்கு அந்த அதிகாரம் இல்லை.என கூறினார்.அப்படியெல்லாம் சொல்லபடாது சகல வல்லமையுடன் உள்ள உங்களுக்கு அதிகாரம் இல்லையா??என்ன சாமி குழப்புகிறீர்கள்?!!!!?.....ஆம் பக்தா நேற்றிரவிலிருந்து நீ கர்ப்பமாக இருக்கிறாய்!!ஆதலால்,அடுத்த ஒன்பது மாதங்கள் நீ காத்திருக்க வேண்டியதுதான்!? பெண்கள் படும் பிரபல வேதனையான பிரசவ வேதனையை நீ அனுபவித்த பின் உன் உருவம் மாறும்!?என கூறி மறைந்தார்.
கதையின் நீதி:எப்பொழுதும் தப்பு செய்யகூடாது!! ( கல்யாணமான பிறகு அது எப்படி தப்பாகும்!!! கேள்வியெல்லாம் நல்லா கேளுங்க!!? மூணு நாளும்!!!! (என்ன,என்ன தப்பு நீங்களே பட்டியலிட்டுக் கொள்ளவும்)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10
Eight Gifts that Do Not Cost A penny!
Sent by S.Sabari Narayanan, Chennai
1. THE GIFT OF LISTENING...
But you must REALLY listen.
No interrupting, no daydreaming,
No planning your response.
Just listening.
2. THE GIFT OF AFFECTION...
Be generous with appropriate hugs,
Kisses, pats on the back, and handholds.
Let these small actions demonstrate the
Love you have for family and friends.
3. THE GIFT OF LAUGHTER...
Clip cartoons.
Share articles and funny stories.
Your gift will say, "I love to laugh with you."
4. THE GIFT OF A WRITTEN NOTE...
It can be a simple
"Thanks for the help" note or a full sonnet.
A brief, handwritten note may be remembered
For a lifetime, and may even change a life.
5. THE GIFT OF A COMPLIMENT.. .
A simple and sincere,
"You look great in red,"
"You did a super job,"
Or "That was a wonderful meal"
Can make some one's day.
6. THE GIFT OF A FAVOR...
Every day, go out of your way
To do something kind.
7. THE GIFT OF SOLITUDE...
There are times when we want nothing better
Than to be left alone.
Be sensitive to those times and give
The gift of solitude to others.
8. THE GIFT OF A CHEERFUL DISPOSITION. ..
The easiest way to feel good is
To extend a kind word to someone.
Really, it's not that hard to say,
Hello or Thank You.
++++++++++++++++++++++++++++++++++++++++++