மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.10.10

என்ன வேண்டுமென்று இல்லாள் கேட்டாள்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்றைய வாரமலரை நமது வகுப்பறையின் மூத்த மாணவர்கள்
இருவரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்.
அத்துடன் உங்களின் பின்னூட்டங்களை, அவர்கள் பதில் சொல்வதற்கு வசதியாகத் தனித்தனியாக இடும்படி கேட்டுக்கொள்கிறேன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

என்ன வேண்டுமென்று இல்லாள் கேட்டாள்?

இன்றைய வாரமலரை, கோமதியம்மனின் உறைவிடமான சங்கரன்கோவில் என்னும் திருத்தலத்தை சேர்ந்தவரும், 
நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவருமான 
திருவாளர் எஸ்.என். கணபதி அவர்களின் ஆக்கம் கீழே உள்ளது. 
அதைத் தொடர்ந்து தஞ்சைப் பெரியவரின் ஆக்கம் உள்ளது,  
அனைவரும் படித்து மகிழுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Over to their postings!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

                                                 தீதும் நன்றும் பிறர் தர வாரா!

அம்மா, நீ பாஸ் பண்ணிட்டே! 1978 இல் எனது வாழ்க்கைத்
துணையிடம் நான் பேசிய முதல் வார்த்தை அது!

அவள் SSLC. பரீட்சை எழுதி இருந்தாள் .அவளுக்கு வயது16  எனக்கு
வயது 23.  அம்மா, அப்பா, அண்ணன், மதினி, குழந்தைகள் என்று
கூட்டுக் குடும்பம். அவள் ஏழு மாதக் கர்ப்பிணி!

எனது அப்பா, காசி, கயா என்று சென்றவர், தனது பிர்துர்க்களுக்குப்
பிண்டம் போட்டதோடு தானும் அவர்களுடன் ஐக்கியமாகிவிட்டார்.
உடன் சென்ற எனது அம்மா அஸ்தியோடு திரும்பி வந்தார்கள்!

சுற்றி இருந்தவர்கள் “என்னம்மா ஜாதகம்? நல்லா பார்த்தீங்களா?
மருமகள் வந்து ஏழு மாதமே ஆகிறது. உங்கள்  தாலி கிழே இறங்கி
விட்டதே!” என்று குறை சொன்னார்கள்.

அம்மா சொன்ன பதில் வார்த்தை: “என் தாலி இறங்க விதி: அவ
என்ன செய்வா? உங்க வேலையைப் பார்த்துக் கொண்டு போங்க!!”

இரண்டு ஆண் குழந்தைகள். 14.வருஷம் கூட்டாக குடித்தனம். நல்ல
வசதியான வாழ்க்கை!!!! அண்ணன் தனி குடித்தனம் போக வேண்டும்
என்று கிளம்பி விட்டார். அடுத்த கட்டிடம் குடித்தனத்துக்கு  ஏற்றாற்
போல் சரி செய்து போயாச்சு. என உடன் பிறந்தோர்கள் என்னையும்
சேர்த்து மொத்தம் எட்டு பேர்கள். ஐந்து பெண் மூன்று ஆண் நான்
எட்டாவது எல்லோருக்கும் நல்ல மண வாழ்க்கை. அப்பா செய்து
வைத்தது!!

தொழில் விசைத்தறி துணி உற்பத்தி..1992 வரை சுலபமான வியாபாரம். அண்ணன் “சொத்தைப் பிரிப்போம்”  என்றார் ..!!! சொத்தைப் பிரிச்சாச்சு !!!!.

ஒரு சமயம் தொழில் நடத்த முடியவில்லை. “கவலைப் படாதீர்கள்
நான் இட்லி சுட்டுப் பிள்ளைகளைப் படிக்க வைப்போம்!” என்றாள் என் மனைவி. அதற்கு அவசியமில்லாமல், சொத்து இருந்தது. வேறு
தொழில் செய்யத்துவங்கினேன். இருசக்கர வாகன நிதி நிறுவனம்.
வாழ்க்கை சீராக நடந்தது!.

சமய தீட்சை, சிவ தீட்சை இரண்டையும் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டு விட்டோம். மேலும் சிவ பூஜையையும்  ஏற்றாகி விட்டது. இரண்டு பேரும் தினமும் சிவ பூஜா செய்துவிட்டுத்தான் அடுத்த வேலையைச் செய்வோம்!

விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் வந்தால் அவர்கள் மனம் மற்றும் வயிற்றை நிறைவு செய்வதில் அவளுக்கு  நிகர் அவளே!

அதிலும் சிவனடியார்கள் என்று வந்தால் ரெண்டு பேருமாகச் சேர்ந்து
சுமார் 20. பேருக்கு சமைத்து மாகேஸ்வர  பூஜை செய்து விடுவோம்!

அம்மா என் வீட்டில் தங்கினார்கள். அண்ணன் வீட்டில் அவர்கள்
உணவை உண்டார்கள்! அம்மா இங்கேயே  சாப்பிடு. நீ சாப்பிடா
விட்டால் நானும் சாப்பிடுவதில்லை என்று உண்ணாவிரதம்
இருந்ததில், சரி ஒரு நேரம் சாப்பிடுகிறேன் என்று இரவு முதல்
காலை வரை டிபன் என்று கொஞ்ச காலம் சென்றது.

ஒருநாள் படியில் இறங்கும்போது கால் தவறி என் அம்மாவின் இடுப்பு
எலும்பு முறிந்து விட்டது.. மருத்துவம் செய்து, வீட்டுக்குத் திரும்பக்
கூட்டி வந்தோம்!! அப்புறம் ஒன்றரை வருடம். எனது அம்மாவுக்கு
எல்லாமே படுக்கையில்தான்  என்னும் நிலைமை ஏற்பட்டது.

நானும் அவளுமாக அள்ளிப்போடும் ஒரு வாய்ப்பை இறைவன்
கொடுத்தான்! 2006ல் அம்மா சிவனடியைச் சேர்ந்துவிட்டார்கள்.

இதில் ஒரு விசேடம் -- என அம்மாவுக்கு என்னவளைப் பிடிக்காது.
மதினியின் (என் சகோதரனின் மனைவி)  சொல்லே வேத வாக்கு.
ஆனால் அவர்கள் இறுதிக் காலத்தில் என் அன்னைக்குப் பணி
விடைகள் செய்யவில்லை.

இவளை மனைவியாக அடைய என்ன தவம் செய்தேனோ?

மூத்த மகன் ரிஷப லக்னம். சிம்மத்தில், ஆறு கிரகங்கள்!! இரு
சுபர்கள்: சுக்கிரன், குரு: இரண்டு வில்லன்கள் ராகுவும் சனியும்.
ஒரு பாவி:  சூரியன், ஒரு ரெஃபிரி:  புதன். அத்துடன் அவனுக்கு
அப்போது ராகு திசை வேறு

கிரஹயுத்தத்தால் என்ன நடந்தது, அதனால் எனக்கு ஏற்பட்ட
அனுபவம் என்ன என்பதைத் தனியாகக் கேளுங்கள்!

அவனையும் ஒரு மனிதனாக்கி, அரேபியாவில் வேலை வாங்கிக்
கொடுத்துத் திருமணமும் செய்த்கு வைத்தேன்.  வசதிகள்
குறைவான வீட்டுப் பெண் அவள். ஆனாலும் மகராசி. அவளைப் பெற்றவர்களுக்குக் கோவில்  கட்டிக் கும்பிடவேண்டும்

ஆமாம்! வந்த மகராசி 40 நாட்களுக்குள் என்ன வசியம் செய்தாளோ, தெரியவில்லை. அவளுடன் தன் மாமனாரின் வீட்டிற்கே அவனும்
சென்று விட்டான். தற்போது ஓமனில் வசித்து வருகிறான்.
அவனுடைய சேமிப்புக்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறன.

பேத்தி பிறந்தபோது, ஒரு முறை நாங்கள் இருவரும் சென்று பார்த்து
வந்தோம். அவ்வளவுதான். எங்கே  இருந்தாலும் நன்றாக 
இருக்கட்டும்! தீதும் நன்றும் பிறர் தர வாரா!

எல்லாம் பிராப்த கர்மம். வாங்கி வந்த வரம்!                             

ஒரே ஒரு ஆறுதலான விஷயம் சின்ன மகன் அமெரிக்காவில்
இருக்கிறான். “கவலை படாதீர்கள். எனக்கு பொண்ணு பார்த்து மணம் செய்வியுங்கள் அவளுடன் நீங்களும் இங்கேயே வந்து  தங்கி
இருங்கள்!” என்கிறான்.

எங்களுக்குத் திருமணம் முடிந்து 32 ஆண்டுகள் ஆகின்றது. இன்றுவரை எனக்கு சேலை வேணும் நகை வேணும்  என்று என் மனைவி என்னிடம் எதுவும் கேட்டதில்லை

ஒன்றே ஒன்றை மட்டும் அடிக்கடி சொல்வாள்:
“உங்களுக்கு முன்னால் நான் போகணும்.!"

அது உண்மையும் கூட என்னை விட்டு பிரிந்து இருப்பது அவளுக்கு சிரமம்!

தர்ம மகராஜா 2017 or 2023 ல் என்னைப் பார்த்துக் கூட்டிக்கொண்டு
போக வரலாம். அதற்கு முன் அவர் அவளைக் கூட்டிக் கொண்டு
போக வேண்டும்.! தற்சமயம் அது தான் என்னுடைய ஒரே ஆசை!

இதைப் படிக்கும் பெரியவர்கள் அசீர்வாதம் செய்யுங்கள்; 
மற்றவர்கள் வாழ்த்துங்கள்!

ஆக்கம்: கணபதி நடராஜா (S.N.கணபதி) வயது 56, சங்கரன் கோவில், திருநெல்வேலி மாவட்டம்


படத்தில் இருப்பது திருவாளர் கணபதி நடராஜாவும், 
அவரது துணைவியாரும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆக்கம் எண் 2

நாமக்கல்லின் நடுவில் இருக்கும் குன்றின் எழில் மிகு தோற்றம். 
குன்றின் கிழக்குப்புறம் நாமகிரி அம்மனின் கோவிலும், 
மேற்குப்புறம் ஸ்ரீரெங்கநாதப் பெருமானின் கோவிலும் உள்ளன. ஸ்ரீரெங்கநாதப் பெருமான் கோவிலுக்கு எதிரில் 
சுமார் 200 அடிகள் தூரத்தில் 
ஸ்ரீஆஞ்சநேயப் பெருமானின் கோவில் உள்ளது. 
மூன்றுமே அற்புதமான கோவில்கள். 
வாய்ப்புக்கிடைத்தால் ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
'மௌன்ட்டு ஹௌவுஸ்' ராமசாமி மாமா

கடவுள் தானே நேராக வந்து வரமளிக்க மாட்டாராம்.
"மனுஷ்ய ரூபேண"-மனித வடிவத்தில் தன்னை மறைத்துக்
கொண்டு தன் பக்தரை பரிபாலிப்பாராம்!

இன்னும் சொல்வார்கள்."கடவுள் எல்லா இடத்திலும் தானே
இருப்பதற்குப் பதிலாக தாயார்களைப் படைத்தார்". "தாயின்
அன்பு கருணை,பாசம் பரிவு எல்லாம் ஒரு சேர அமைந்தவர்
தான் இறைவன்" என்றும் சொல்வார்கள்.

அப்படி ஒரு தெய்வம் போல எங்களுக்கு வந்து உதவியவர்
தான் 'மௌன்ட்ஹௌவுஸ்' மாமா என்று அழைக்கப்பட்ட
நாமக்கல் ராமசுவாமி அய்யர்!  இதுவரை என் 'நீங்காத
நினைவுகள்' நான்கு கட்டுரைகளாக வகுப்பறையில்
பிரசுரிக்கப்பட்டுள்ளன. இப்போது சொல்லப் போகும்
செய்தியும் நபரும் முதல் கட்டுரையாக வந்திருக்க வேண்டும்.
காரணம் எதுவும் இல்லாமலே மாமா பின் தங்கிவிட்டார்.
எப்போதுமே அவர் இப்படிதான்.

"அன் அஸ்யூமிங்க்" பூத உடலுடன் நடமாடிக்கொண்டு இருந்த
போதும் இப்படிதான். தன்னை நன்கு மறைத்துக்கொண்டு,
புகழுக்கெல்லாம் மயங்காமல் தன் போக்கில் தன் இயல்பான
உதவிகளைச் செய்து வந்தவர்.

நாமக்கல் பற்றி அறிந்தவர்கள் அங்குள்ள பிரம்மாண்டமான
ஆஞ்சனேயரைப் பற்றி சிலாகித்துக் கூறுவார்கள்.இன்னம்
கொஞ்சம் விவரம் அறிந்தவர்கள் யோக நரசிம்மரையும்
நாமகிரித் தாயரையும் நினைவு கூறுவார்கள்.இலக்கிய வாதிகள்,
"கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது..."என்று உப்பு
சத்யாகிரக அணிவகுப்புப் பாடலை எழுதிய ராமலிங்கம்
பிள்ளை அவர்களை நினைவு படுத்துவார்கள்.

வாணிபத்தில் ஆர்வம் உள்ளவர்கள், டேங்கர் லாரி கட்டும்
தொழில் நாமக்கல்லில் எப்படி படிப்படியாக வளர்ந்தது என்று
விவரிப்பார்கள்.சத்துணவில் போடப்படும் முட்டைக்கு தமிழக
அரசு நாமக்கல்லையே நம்பி உள்ளது என்ற தகவல் சிலர்
கூறக்கூடும்.நாமக்கல் லாரித் தொழிலில் சம்பந்தமுடைய
ஆண்களுக்குப் பெண் கொடுக்க அவர்கள் சார்ந்த சமூகம்
தயங்குவதால் கேரளப் பெண்களை தரகர் மூலம் திருமணம்
முடிப்பது பெருகி வருகிறது என்று சமூகவியல் வல்லுனர்
கூறுவார்.

எங்கள் இல்லத்திலோ நாமக்கல் என்ற பெயர் சொன்னாலே
'மௌன்ட்டு ஹௌவுஸ்' ராமசாமி மாமாதான்.எப்படி அந்த ஊர்
ஆஞ்சனேயர் தனியாக உயரமாக கம்பீரமாகக் காட்சி
அளிக்கிறாரோ, அதே போல மாமாவும் தனியாள்தான்.
குடும்பம் கிடையாது.தான் வைத்திருந்த புத்தக, நாளிதழ்,வார
மாதயிதழ், எழுது பொருள் அங்காடியிலேயே சமையல்,
சாப்பாடு, உறக்கம் எல்லாமும்.

மாமா நல்ல உயரம்.பளபள என்று மின்னும் தங்க நிறமும்
பிரௌனும் கலந்த, ஒரு விவரிக்க முடியாத, ஆனால் மிக
அழகான ஒரு நிறத்தில் ஜொலிப்பார்.இந்தியாவின் இரும்பு
மனிதர் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவ்ர்களையும், 
ராமசாமி மாமாவையும் அருகருகே வைத்து ஒப்பிட்டால்
இருவரும் இரட்டையர்கள் அல்லது ஒரு தாய் வயிற்றுப்
பிள்ளைகள் என்று கூறத்தோன்றும்.அதுபோலவே
பெருந்தலைவர் காமராஜரை நினைவுபடுத்துவதுபோலக்
கதரில் தொள தொள அரைக்கை ஜிப்பாவும் நாலு முழ
வேட்டியும் அணிந்து கம்பீரமாக நடந்துவருவார் மாமா.

என் தந்தையார் உயரம் குறைவு.மாமா நல்ல உயரம்.
இருவரும் சேர்ந்து தெருவில் நடந்து வந்தால் லாரல்-
ஹார்டி மாதிரிதான் தோன்றும்.ஆனால் மாமா, என்
அப்பா இருவருமே சீரியஸ் டைப்.சிரிப்பு அவர்களிடம்
ரேஷன் கடை சீனி போல அளவோடும் எடை
குறைவாகவும் தான் கிடைக்கும்.

'மௌன்ட் ஹௌவுஸ்' மாமா என்று அவருக்கு ஏன் பெயர்?
அவர் வைத்து இருந்த கடையின் பெயர் 'மௌன்ட் ஹௌவுஸ்'.
அந்தப் பெயரே மாமாவுக்கும் வைத்துவிட்டோம்.தனித்தமிழ்
ஆர்வலர்களுக்காக "குன்று இல்லம்"என்று வேண்டுமானால்
மொழி பெயர்த்துக் கொள்ளலாம்.நாமக்கல் மலையைச் சுற்றியுள்ள
ஊர். அதனால் மாமாவின் கடைக்கு 'மௌன்ட் ஹௌவுஸ்'
என்ற பெயர் சரிதான்.

மாமாவை பற்றி என் முதல் நினைவு அவர் வரும்போதெல்லாம்
மறக்காமல் வாங்கிவரும் தின்பண்டங்கள்தான்.அதிலும்
குறிப்பாக சேலம் வில்வாத்ரிபவனில் இருந்து வாங்கிவரும்
ஜாங்கிரிக்காக நான் ஏங்கியது உண்டு.மாமாவுக்கு

எங்கள் குடும்பத்தின் மீது அக்கறை அதிகம்.எங்கள் குடும்பம் பெரிது.
வருவோரும் போவோருமாக எப்போதும் வீடு நிறைந்திருக்கும்.
அப்பாவின் வருமானம் வீட்டு வாடகை, உணவு, பள்ளிக் கட்டணம்
ஆகியவற்றுக்கே போதும் போதாமல் இருக்கும்.உடைத் தேவை என்
தாயார் பெட்டி ராட்டையில் நூற்கும் நூலால் நிறைவு பெறும்.

அப்பாவும் விடியற்காலையில் எழுந்து நூல் நூற்பார்.அவ்ர்கள்
இருவரும் தங்கள் கையால் நூற்ற நூலையே ஆடையாக்கிக்
கொள்வார்கள்.குழந்தைகளுக்கும் பெரும்பாலும் கதர்தான்.
சிலசமயம் கைத்தறிக் கண்காட்சியில் ஒரு சில கதரில் இல்லாத
வகைகளை வாங்குவார்கள்.எனவே புத்தகம் நோட்டு பென்சில்
பேனா ஆகியவை எங்களுக்கு எட்டாக்கனி.

நான்கு பிள்ளைகளுக்கு இவற்றை வாங்க அப்பா கடன்
வாங்கத்தான் வேண்டும்.இந்த நிலைமையை நன்கு அறிந்த
ராமசாமி மாமா, புத்தகம் பள்ளி எழுதுபொருள் அனைத்தையும்
தன் செலவில் எங்கள் இல்லத்தில் சேர்ப்பித்து விடுவார்.பள்ளி
ஆண்டு துவங்கும் முன்னரே எல்லா நோட்டு, பென்சில், பேனா,
ஜியாமெட்ரி பாக்ஸ், வாட்டர் கலர் பாக்ஸ், கலர் பென்சில்,
எரேஸர், அனைத்தும் 4 பேருக்கு தேவைக்கு அதிகமாகவே
வீடு தேடி வந்துவிடும்.

ஒருதரம் அப்பா அவற்றுக்கு பில் கொடுக்கும் படியும் தான்
தொகை அளித்து விடுவதாகவும் மாமாவிடம் கூறினார்.
அவ்வளவுதான். மாமா எரிமலை போல் ஆனார்.
"ஒஹோ!அவ்வளவு சம்பாதனை வருகிறதோ? சரிதான்!"
என்று உரக்கச் சொல்லிவிட்டு 'போய் வருகிறேன்' என்று
சொல்லிக்கொள்ளமல், சாப்பிட மறுத்துவிட்டு உச்சி வெய்யிலில்
தெருவில் இறங்கி நடக்கத் துவங்கி விட்டார். அப்பா தெரு
முனை வரை ஓடி மாமாவை சமாதானப்படுத்தி அழைத்து
வந்தார்.நாங்கள் நால்வரும் கற்ற கல்வி ராமசாமி மாமா
இட்ட பிச்சை என்றால் அது மிகையாகாது.

அப்போதெல்லாம் பள்ளிப்பாடப் புத்தகங்கள் தனியார்தான்
வெளியிடுவார்கள்.அரசுப் பள்ளிக் கல்வித்துறை 'சிலபஸ்'
என்னும் பொதுவான பாடத்திட்டத்தை மட்டும் அளிக்கும்.
அந்த சிலபஸ் அடிப்படையில் பல ஆசிரியர்கள் பாடப்
புத்தகம் எழுதி வெளியிடுவார்கள்.நாமக்கல் மாமா கடைக்கு
எல்லா வெளியீட்டார்களிடம் இருந்தும் மாதிரிப் புத்தக நகல்
முன் கூட்டியே வரும்.அவையெல்லாம் எங்கள் இல்லத்துக்குப்
படையெடுத்து வந்துவிடும். உதாரணமாக கணக்குப் புத்தகம்
என்றால் ஆறு ஆசிரியர்கள் எழுதியது எங்களுக்கு மாமா
அளித்துவிடுவார்.அதில் ஒன்று எங்கள் பள்ளியில் கடைப்
பிடிப்பதாக இருக்கும். மற்றவை வீட்டில் அதிகப்படியாக
நாங்கள் பயிற்சி செய்யப் பயன்படும்.


எனவே நாங்கள் மற்ற மாணவர்களை விடக் கல்வித் தரத்தில்
முன்னால் நிற்க ஏதுவாயிற்று.தப்பித்தவறி காசு கொடுத்து
புத்தகம் நோட்டு வாங்கியது மாமாவுக்குத் தெரிந்தால் நாங்கள்
ஒழிந்தோம்.மாமாவின் பொல்லாப்புக்குத் தயாராக இருக்க
வேண்டும்.

அப்பா எங்கள் மதிப்பெண் பற்றியெல்லாம் கவலைப்பட
மாட்டார்.மாதாந்திர கல்வி முன்னேற்ற அறிக்கையில் கேள்வி
கேட்காமல் கையெழுத்து இட்டு அளிப்பார்.நான் வேலைக்கு
வந்த பின்னர் அப்பாவிடம் காரணம் கேட்டேன். "என்னுடைய்
தகப்பனார் மதிப்பெண் குறைந்தால் அதிகமாகக் கவலைப்பட்டு
குழந்தைகளை அடித்துத் துவைத்து விடுவார்.என் மொட்டை
மண்டையை சுவற்றிலேயே வைத்து மோதுவார்.எனவே நான்
பட்ட துன்பம் என் குழந்தைகள் படக் கூடாது என்று
எண்ணினேன்"என்றார்.என் அப்பா கல்வி சம்பந்தமாகக்
குழந்தைகளைக் கண்டிக்காததைக் கண்ட அம்மா, "நாமக்கல்
மாமாவிடம் சொல்லிவிடுவேன்"என்றுதான் பயம் காட்டுவார்கள்.
நாங்களும் மாமா பெயரைக்கேட்டு உண்மையாகவே
பயப்படுவோம்.பயந்து படிப்போம்.

அப்பா தனி நபர் சத்தியாகிரஹத்தின் போது நாமக்கல்லில்
இருந்துதான் கைதி ஆனார்கள். அதனால் நாமக்கல் மாமாவுக்கு
அப்பாமீது ஒரு விதமான பாசப் பிணைப்பு ஏற்பட்டு
இருக்கலாம்.எங்கள் குடும்பத்தின் மீது அவருக்கு ஏற்பட்ட
அக்கறைக்கு எந்த ஒரு காரணத்தையும் என்னால் இன்று
வரை கண்டு பிடிக்க முடியவில்லை."கைமாறு கருதா
கடப்பாடு" என்பதற்கு நாமக்கல் மாமா ஒரு பொருத்தமான
எடுத்துக்காட்டு.

மாமா தெலுங்கு பிராமணர் என்று சொல்லிக் கேள்விப்பட்டு
இருக்கிறேன்.ஆனால் அவர் பூணூல் அணிந்து நான்
பார்த்ததில்லை.தன்னுடைய பிராமண வெளி அடையாளங்கள்
(நற்குணம் தவிர) அனைத்தையும் தொலைத்துத் தலை முழுகி
விட்டார்.யாரும் அவரிடம் காரணம் கேட்கமுடியாது. இதைப்
பற்றியெல்லாம் அவரிடம் பேச அவர் தோற்றத்தைக் கண்ட
யாருக்கும் துணிவு வராது.

அப்பாவுக்கு நாட்டம் உள்ள அனைத்தும் மாமாவுக்கு ஏற்புடையது.
அப்பா ராஜாஜி சீடர் என்றால் மாமாவும் அப்படியே! அப்பா
திருக்கோவிலூர் ஸ்ரீஞானானந்த சுவாமிகளால் கவரப்பட்டால்
மாமாவும் அப்படியே! அவர்களுக்குள் நல்ல கெமிஸ்டிரி இருந்தது.
(நான் கெமிஸ்டிரி மாண‌வன்.பிஸிக்ஸ், மேத்ஸ் படித்தவர்கள் அப்படி
நினைத்துக்கொள்ளலாம்;மாற்றி வாசித்துக்கொள்ளலாம்.)கம்பரும்
சடையப்ப வள்ளல் போன்ற ஒரு உறவு.யாராலும் இது இப்படிதான்
என்று வரையறை செய்ய முடியாது.

மாமா ஏன் திருமணம் செய்யவில்லை? இந்தக் கேள்வியை சுமார் 40
ஆண்டு காலம் மனதில் சுமந்தேன்.மாமாவும் அப்பாவும் மறைந்த
பின்னர் என் அம்மாவும் 2007ல் படுத்த படுக்கையாக ஆன பின்னர்,
இனிமேலும் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல் இருக்கக் கூடாது
என்று கருதிஅம்மவிடம் கேட்டேன்.

"அம்மா, நாமக்கல் மாமா ஏன் கல்யாணமே கட்டவில்லை என்று
உங்களுக்குத் தெரியுமா?"

"யார் சொன்னா அவர் கல்யாணம் செய்யவில்லை என்று? செய்து
கொண்டாராம்.ஒரே நாளில் புது மனைவியைப் பிரிந்து விட்டாராம்.
யார் அவரிடம் காரணம் கேட்க முடியும்? அவர் கோபமும்
ஆவேசமும் உலகப் பிரசித்தம். அவர் முன்னால் நின்று யார்
நியாயம் கேட்கமுடியும்? அந்த முகம் தெரியாத பரிதாபகரமான
பெண்ணை நினைத்து அவரைப் பார்க்கும் போதெல்லம்
மனத்துக்குள் மருகியிருக்கேன்!" என்றார் அம்மா.

கட்டுரை நீண்டு கொண்டே போகிறது. பல சொல்லக் காமுற
வில்லை. ஒரு சில சொல்லி முடிப்பேன். நாமக்கல் மாமாவின்
சொந்த ஊர் புட்டிரெட்டிப்பட்டி. இதுவரை நகைச்சுவையாக
எதுவும் சொல்ல மாமா அனுமதிக்கவில்லை. அவர் சொந்த
ஊர்ப் பெயர் அந்த வாய்ப்பை அளிக்கிற்து. "புட்டி"ரெட்டிப்பட்டி!

அங்குள்ளவர்கள் பலரும் புட்டியும்கையுமாக இருந்து
இருப்பார்களோ? யார் கண்டார்கள்?ஆனால் மாமா
தீவிர மது எதிர்ப்பாளர். ராஜாஜி, காந்திஜி சீடர் அல்லவா?

புட்டிரெட்டிப்பட்டியில் செல்வாக்கான மிராசுக் குடும்பமாம்.
பின்னர் மாமா தன் சொந்த முயற்சியில் போர்டு மெம்ப‌ர்
அல்லது தலைவர் பதவி வகித்தாராம்.அவருடைய கட்டுப்
பாட்டுக்குள் போர்டு பள்ளிகள் பலவும் இருந்ததாம். அப்போது,
பிற்காலத்தில் தமிழ் இலக்கிய உலகில் மிகப்பெரிய இடத்தினைப்
பெற்ற, தமிழ்த்தாத்தாவின் மாணவரான, மயிலையில் இருந்து
இன்றளவும் வெளிவரும் தரம் வாய்ந்த இலக்கியப் பத்திரிகையின்
ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று மறைந்தும் விட்ட ஒரு பேர்
அறிஞர் (அவரும் அந்த மாவட்டக்காரர்தான்) தமிழ் படித்து
விட்டு வருமானம் குறைவாக சிரமத்தில் இருந்தாராம்.நமது
மாமா அந்தப் பேர் அறிஞர் சிறிது வருமானம் பெரும் வகையில்
போர்டு பள்ளிகளில் இலக்கியக் கூட்டங்கள் எற்பாடு செய்து
கொடுத்து சன்மானம் கொடுத்து அவர் வறுமையைப் போக்கினாராம்.
நீண்ட ஆண்டுகளுக்குப் பின்னர் மாமாவுக்கும் அந்தப் பேர்
அறிஞருக்கும் ஏற்பட்ட பிணக்கு பற்றிக் கூறி முடிக்கிறேன்.

மாமாவுக்கும் அப்பாவுக்கும் ஸ்ரீஞானான‌ந்த சுவாமிகளைப்
பற்றிய புத்தகங்கள் வெளியிட ஆவல் ஏற்பட்டது. முதலில்
ஸ்ரீ சுவாமிகளின் திவ்ய சரித்திரம் வெளியிட முடிவு செய்து
அதற்கு "பாப்புல"ரான எழுத்தாளரைத் தேடினார்கள். முன்னர்
சொன்ன தமிழ் அறிஞர்தான் இதற்குத் தகுதியானவர் என்று
முடிவு செய்து அவரை அணுகினர்கள். அவரும் பெருந்தன்மை
யுடன் அப்பணியை ஏற்றுக்கொண்டு, ஸ்ரீ சுவாமிகளை நேரில்
சந்தித்து ஒருவாரம் தபோவனத்தில் தங்கிப் பல செய்திகளையும்
சேகரித்துக் கொண்டார்.முடிவில் இந்தப்பணி தன்னால் இயலாது
என்று மாமாவிடம் சொல்லி விலகிக் கொண்டார்.
அதிர்ச்சிக்கு உள்ளான மாமா அறிஞரைக் காரணம் கேட்க,
அவர் கூறினாராம்:"ஸ்ரீ சுவாமிகள் பெரிய ஆன்மீக ஊற்று தான்.
ஆனால் சரித்திரம் எழுதத் தேவையான உறுதி செய்யப்பட்ட
தகவல்கள் ஒன்றும் அவரிடம் இருந்து கிடைக்கவில்லை. நான்
தற்போது உள்ள பதவியில் இருந்து கொண்டு எதை எழுதினாலும்
மக்கள் அப்படியே எற்றுக் கொள்வார்கள்.எனவே சரி பார்க்கக்
கூடிய உறுதியான தகவல் கிடைத்தாலே என்னால் எழுத முடியும்.
மன்னிக்கவும்  “அறிஞரின் தரப்பு நியாயத்தை மாமாவால் பார்க்க
முடியவில்லை. ஸ்ரீ சுவாமிகள் மீது கொண்ட பக்தி மாமாவின்
கண்ணை மறைத்தது."எப்படி இருந்த நீர் காலத்தின் மாற்றத்தால்
இப்படி மாறிவிட்டீரே!" என்று பொருமி விட்டார்.

அப்போது அங்கு வந்த அப்பாவிடம், அறிஞரைக்காட்டி,
" இவாள் ரொம்பப் பெரியவாள்!" என்று நக்கலாகச் சொன்னார் .
நக்கல் என்பது தஞ்சாவூர் பிரயோகம். கிண்டல் என்றால்
எல்லோருக்கும் புரியும். சிலேடைப் பேச்சில் வல்லவரான
அந்த அறிஞர் கூறினார்: "அந்த 'வாள்'தானே என்னை அறுக்கிறது!"
இறுக்கமான சூழல் கொஞ்சம் தளர்ந்தது.

என் மூத்த அண்ணன் தஞ்சையில் 1973ல் கட்டிய வீட்டுக்கு
மாமாவுக்குத் தெரிவிக்கும் நன்றியாக "மௌன்டு ஹௌவுஸ்"
என்றுபெயர் வைத்தார்.

1973 துவங்கி 2008 ல் அந்த வீட்டை அண்ணன் விற்கும் வரை
தினசரிஒரு நபருக்காவது பெயர் விளக்கம் அளிக்க வேண்டி
இருந்தது. ஏனெனில்தஞ்சைத் தரணியில் எங்குமே மலை
கிடையாது. அப்படி இருக்க'ஏன் இந்தப்பெயர்?' என்ற சந்தேகம்
பலருக்கும் எற்பட்டது.நாங்களும்விளக்கம் கூறி மாமாவை
நினைவில் வைத்து இருந்தோம். இப்போது அந்த வீடு அண்ணன்
வசம் இல்லை.எப்படி மாமாவை நினைவில் வைப்பது?
அதனால் தான் இந்தப்பதிவை எழுதினேன்.

பொறுமையாகப் படித்த அனைவருக்கும் என் நன்றி.

ஆக்கம்: K. முத்துராமகிருஷ்ணன் (KMRK) தஞ்சாவூர்
...................................................................
1968 ஆம் ஆண்டில் 
திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்த தபோபோவனத்தில் எடுக்கபெற்ற படம்.  படத்தில் சுவாமிகளின் அருகில் உயரமான தோற்றத்துடன் இருப்பவர்தான் மவுன்ட் ஹவுஸ் ராமசாமி மாமா. சட்டை அணியாமல், கண்ணாடி அணிந்தவாறு, கைகளைக் குறுக்காகக் கட்டியபடி நிற்பவர். சுவாமியின் இடது பக்கம் நிற்பவர்கள் 
திருவாளர் கே.முத்துராம கிருஷ்ணன் அவர்களின் 
அன்புப்பெற்றோர்கள்



ஒரு ஆண்டிற்கு முன்பு (அதாவது 31.8. 2009 அன்று) 
நமது KMRK அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அன்று 
அவருடைய அலுவலகத்தில் (Life Insurance Corporation of India)  
சிறப்புச் செய்யப்பெற்ற போது எடுக்கப்பெற்ற படம். 
அவருக்குப் புத்தகம் ஒன்றைப் பரிசாக அளிப்பது. 
திரு.மகேஷ்வரன் அவர்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

30.10.10

நகைச்சுவை: இரண்டு லார்ஜ் அதிகமானால் என்ன ஆகும்?

வார இறுதிப் பதிவு! (Week end posting)

1. ஹாங்க் ஓவர் என்கிறார்களே அது இதுதானா?

2. குடிப்பவனுக்கு சரக்கு மட்டும்தானே ஏறும். இதெல்லாம் ஏறுமா?

3. தொங்கும் குதிரையைப் பற்றி என்ன கவலை? 
சரிந்து விட்ட சரக்கை முதலில் பார்!

4. தொலைக்காட்சி பார்ப்பதற்கு 
இதைவிட வசதியான இடம் இருந்தால் சொல்லுங்கள்.


5. கூட்டுக் களவாணித்தனம் என்பது இதுதானா?


6. கோழி இடித்துக் குஞ்சுக்கு வலிக்குமா என்ன?


7. ஊசி போடுமுன்பே இந்தப் பாவனை? 
போட்ட பிறகு எப்படியிருக்கும்?

8.  ஒன்றுமில்லை இரண்டு லார்ஜ் அதிகமாகிவிட்டது. 
அதனாலென்ன, படுக்கை இல்லாமல் தூங்கமுடியாதா என்ன?


9. பயந்து விடாதீர்கள். பள்ளிக்கூடத்தை அடையும்வரைதான் 
இந்த அவஸ்தை!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

29.10.10

அடைக்கலம் என்பவர்க்கு என்ன நிலை?


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடைக்கலம் என்பவர்க்கு என்ன நிலை?
----------------------------------------------------------
இன்றைய பக்தி மலரை முருகப்பெருமானின் புகழ் சொல்லும் பாடல் ஒன்றும், நமது வகுப்பறை மாணவர் ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களின் கட்டுரை ஒன்றும் அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்!
-------------------------------------------------------------------
தங்க மயம் முருகன் சந்நிதானம்

பாடல்: தங்க மயம் முருகன் சந்நிதானம்
பாடியவர்: திரு. சீர்காழி கோவிந்தராஜன்


தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்
அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்

(தங்க மயம்)

எங்கும் மனம் பரப்பும் மாலைகளே
அவன் ஈராறு கைகளாம் தாமரையே
திங்கள் முகம் அரும்பும் புன்னகையே
குகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையே

(தங்க மயம்)

கருணை மழை பொழியும் கருவிழிகள்
அந்த காட்சியில் தோன்றுவதோ பெருவழிகள்
அமுதம் ஊறி வரும் திருவடிகள்
அவை அடைக்கலம் என்பார்க்கோ புதுநிலைகள்

தங்க மயம் முருகன் சந்நிதானம்
சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
ஓம் சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

அடுத்து வருவது  நமது வகுப்பறை மாணவர் ஆலாசியம் கோவிந்தசாமி அவர்களின் கட்டுரை
_---------------------------------------------------------------------------

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாரதியின் பார்வையில் பௌத்தம்.

மஹாகவி பாரதியார் பகவத் கீதைக்கு விளக்கம் எழுதியது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அதை நான் படித்த போது அவர் அந்நூலுக்கு எழுதிய முன்னுரையில் பௌத்த மதத்தைப் பற்றிய தகவல்களை அவரின் பார்வையில் தந்திருந்தார் அதை நான் இங்கே உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறேன். எல்லாப் புகழும் பாரதிக்கே.
புத்தியில் சார்பு எய்தியவன், இங்கு, நல்ல செயல், தீயச் செயல் இரண்டையும் துறந்து விடுகிறான். ஆதலால் யோகநெறியிலே பொருந்துக. யோகம் செயல்களிலே திறமையாவது (கீதை 2 - ஆம் அத்தியாயம்; 50 - ஆம் சுலோகம்)
புத்தியிலே சார்பு எய்துதல் யாதனில் அறிவை தெளிவாக கவலை நினைப்புகளும் அவற்றிக்கு ஆதாரமான பாவ நினைப்புகளும் இன்றி அறிவை இயற்கையாக நிலை நிறுத்துதல்.

"நீங்கள் குழந்தையைப் போல் இருந்தால் அன்றி மோட்ச ராஜ்ஜியத்தை அடைய மாட்டீர்கள்" என்றார் ஏசு கிறிஸ்து..... அப்படிஎன்றால், உங்களுடைய லௌகீக அனுபவங்களை , படித்த படிப்பை, மறந்து மீண்டும் குழந்தைகளைப் போல் தாய்ப்பால் குடிப்பது, மழலைச் சொல் பேசுவது அன்று....குழந்தைகளைப் போல் இதயத்தை கள்ளம் கபடம் இல்லாமல் (அவற்றைப் புரிந்து கொள்ளுதல் என்பது வேறு) சுத்தமாக வைத்துக் கொள்ளுதல். இதயம் சுத்தமானால் அறிவு (புத்தி) தெளிவுபெறும் என்று பகவான் சொல்கிறார்.
 
மேலும் பகவான் கூறுகிறார், 'கர்மத்தின் பயனிலே பற்றுதலின்றித் தான் செய்ய வேண்டிய தொழிலை எவன் செய்கிறானோ, அவனே துறவி அவனே யோகி.... ஆக அறிவுத் தெளிவை தவறவிடாதே, பிறகு பலனிலே பற்றுதல் கொள்ளாமல் (அதாவது எப்படியாவது பெறவேண்டும் என்று நினைத்து செயல்படுதல் ஆகாது என்பதாகும்) அதன் பின் ஓயாமல் தொழில் செய். அதன் பிறகு நீ எதைச் செய்தாலும் நல்லதாகவே முடியும்…….

பகவான் சொல்கிறார் யோகம் பண்ணு, அதாவது தொழிலுக்குத் தன்னை தகுதி உடையவனாகச் செய்வது யோகம் எனப்படும்.

யோகமாவது சமத்துவம், 'ஸமத்வம் யோக உச்யதே' அதாவது பிறிதொரு பொருளைக் கவனிக்கும் பொருட்டு மனதினில் எந்தவித சஞ்சலம், சலிப்பு, பயன் இன்றி அதை ஆழ்ந்து, மன முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகியப் பயிற்சி. அப்போது அப்பொருளை உண்மையாக முழுவதுமாக புரிந்துக் கொள்ள முடியும். "யோகஸ்த: குரு கர்மாணி" யோகத்தில் நின்று தொழில்செய் என்கிறார் கடவுள்.

இப்படியே பாரதி முன்னுரையில் கூறிச் செல்கிறார் நான் சுருக்கமாக கூற எண்ணி தாவி வெகு தூரம் வந்து விடுகிறேன்...

இனி இன்பத்தையும், துன்பத்தையும் ஒன்றாக கருதுதல் அவசியமென்கையில், அப்போது கடவுளை நம்புவது எதன் பொருட்டு?, கடவுள் நம்மை அச்சம் தவிர்த்துக் காப்பார் என்று எதிபார்ப்பது எதன் பொருட்டு? நமக்கு, இன்பம், துன்பம், வாழ்வு, தாழ்வு, மரணம் எதுநேர்ந்தாலும் - எல்லாம் கடவுள் செய்கையிலே நாம் எல்லாவற்றையும் சமமாகக் கருதவேண்டும் என்று பகவத் கீதை சொல்லுகையிலே, நமக்கு கடவுளின் துணை எதன் பொருட்டு?

நம்மை (திருநாவுக்கரசரைப் போல்) கல்தூணிலே வலியக் கட்டி கடலிலே வீழ்த்தினால், நாம் இதுவும் கடவுள் செயல் என்று எண்ணி அப்படியே மூழ்கி இறந்து விடுதலும் பொருந்தும் அன்றி, பிறகு ஏன்? நமச்சிவாய! நமச்சிவாய! என்றுக் கூவி நம்மைக் காத்துக் கொள்ள முயலவேண்டும்? என்று சிலர் ஆட்சேபிக்கலாம்.

இந்த ஆட்சபம் தவறானது. எப்படியெனில், முந்தியக் கர்மங்களால் நமக்கு விளையும் நன்மைத் தீமைகளை சமமாகக் கருதி நாம் மனச் சஞ்சலத்தை விட்டுக் கடவுளை நம்பினால், அப்போது கடவுள் நம்மை சில வலியச் சோதனைகளுக்கு உட்படுத்துகிறார். அந்தச் சோதனைகளில் நாம் சோர்ந்து கடவுளின் மீது உள்ள நம்பிக்கையை இழக்காமல் அவன் திருவடியையே தொழுதொமானால், அப்போது ஈசன் நமக்குள் வந்து குடி புகுகிறான்.

அதனால் நம்மை துன்பம், மரணம் (உடல் அழியக் கூடியது, ஆத்மா முக்தி அடைவதும் மரணத்தை வெல்வதாகக் கொள்ளவேண்டும்) நம்மை அணுகாது, எல்லாவிதமான ஐயுறவுகளும், கவலைகளும், துயரங்களும் தாமாகவே நம்மை விட்டு விலகி, இந்த உலகத்திலே நாம் விண்ணவர்களின் வாழ்க்கையைப் பெற்று நித்தியானந்தம் பெறுகிறோம்.

மேலும் எல்லாவற்றையும் ஞானி சமமாக கருத வேண்டும் என்ற இடத்தில், அவன் வாழ்க்கைக்கு உரிய விதிகளையெல்லாம் அறவே மறந்துபோய் பித்தனாகிவிட வேண்டும் என்று அர்த்தம் ஆகாது....

கஷ்ட நஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு மனதார பிறருக்கு கஷ்ட நஷ்டங்களை கொடுக்காமல் இந்த உஅலகுக்கு நன்மையை செய்துக் கொண்டே இருக்கவேண்டும். தன்னுயிரைப்போல் மன்னுயிரையும் காக்கவேண்டும், இவைகளே புண்ணியம் தரும் செயல்கள் என்கிறார்.

மேலும் பகவான் 'ஸம்சயாத்மா விநச்யதி' - ஐயமுடையோன் அழிவான் அதாவது கடவுளை நம்பினார் கைவிடப் படார். (இந்த இடத்திலே இன்னொன்றையும் கூறவேண்டும் துச்சாதணன் துகிலுரியும் போது திரௌபதி தனது கைகளால் உடையைக் காக்காது அவள் முழுவதுமாக கிருஷ்ணனையே நினைத்து தனது தலைக்கு மேலே இருகரங்களையும் தூக்கி ஹரி! ஹரி! ஹரி!.... என்று முழுவதுமாக சரணாகதி அடைந்தாள் கிருஷ்ணனும் அருளினான்).

சரி, நான் கூற இங்கு சொல்ல வந்ததை  நோக்கிப் போகிறேன்.

வேதங்களுக்கு உரை செய்தவர்கள், வேதம் கர்மங்களை போற்றுகிற நூலாகவே கண்டார்கள். இதிலே சாயணாசாரியார் சொல்லும் உரையிலும் (சில இடங்களுக்கு கருத்து வேற்பட்டு நின்றாலும்) தமது குருக்களைப் போல் வேதம் கர்ம நூல்  என்றெண்ணி, கர்மத்தையும்- யாகம் என்றெண்ணி இருக்கிறார்.

அப்போதும் கூடவே போலிகள் செய்த இந்த யாகங்களே பெரும்பாலும் பசுவதைகளும், குதிரைவதைகளும், ஆட்டுப் பலிகளும் முக்கியமாக பாராட்டிய கொலைச் சடங்குகள். இவ்விதமான் சடங்குகளைச் செய்தால் மோட்சம் என்ற போலிகளின் செயல்களை புத்தமதம் தனக்கு சாதக மாக்கிக் கொண்டு யாகத் தொழிலை அன்றைய அரசர்களோடு சேர்ந்துக் கொண்டு இகழ்ச்சி செய்தது. 

அப்போது தான் பௌத்தர்களை வென்று ஹிந்து தர்மத்தை நிலை நாட்ட, சங்கராச்சாரியார் அவதரித்தார். அவர் புத்தமதக் கருத்துக்களைப் பெரும்பாலும் ருசிகண்டு, சுவைத்து தமது வேதாந்ததிற்கு ஆதாரகளைத் தயார் செய்துக் கொண்டார். சைவம், வைஷ்ணவம் உள்ளிட்ட ஆறு கிளைகளை கொண்ட விருட்சத்தின் ஆணிவேராகிய வேதத்தை தனது ஞானத்தால், கல்வித் திறமையால், திறம்பட உரைப்பித்து மீண்டும் மீள, என்றும் அழியா சக்தியாக ஹிந்து என்னும் விருட்சம் உயிர்பித்து விளங்கச் செய்து  விட்டுப் போனார் ஸ்ரீ சங்கராச்சாரியார்.

தம்மாலே வெட்டுண்ட புத்தமத விருட்சத்தின் கிளைகள் பலவற்றை ஹிந்து தர்மமாகிய விருட்சத்திற்கு உரமாகுபடி எருவாகச் செய்து போட்டார். அதனாலே, இவரை சிலர் "பிரசன்னா பௌத்தர்" (மறைவு பட்ட பௌத்தர்) என்றும் சொன்னார்கள். எனினும் இவர் ஹிந்து தர்மத்திற்கு செய்த பேருதவியால் இவரை ஹிந்துக்கள் பலரும் பரமசிவனுடைய அவதாரமாகவேக் கருதினார்கள்.

புத்தமதமே துறவு நெறியை உலகத்தில் புகுத்திற்று. அதற்கு முன் ஆங்காங்கே சில மனிதர் துறவிகளாகவும், சில இடங்களில் சிலர் துறவிக் கூட்டத்தாராகவும் இருந்திருக்கிறார்கள். துறவிகளின் மடங்களை இத்தனைத் தாராளமாகவும், இத்தனை வலிமையுடையவனாகவும் செய்ய வழி காட்டியது பௌத்த மதமே. எங்கே பார்த்தாலும் இந்தியாவை அந்த மதம் சந்நியாசி வெள்ளமாகச் சமைத்து விட்டது. பாரத தேசத்தை அந்த மதம் ஒரு பெரிய மடமாக்கி வைத்து விட்டது. ராஜா, மந்திரி, குடி, படை எல்லாம் மடத்துக்குச் சார்பிடங்கள். துறவிகளுக்குச் சரியான போஜனம் முதலிய உபசாரங்கள் நடத்துவதே மனித நாகரீகத்தின் உயர் நோக்கமாக கருதப் பட்டது.

துறவிகள் தான் ஜனங்கள்! மற்றவர்கள் எல்லாம் அவர்களுக்குப் பரிவாரங்கள்! மேடம் தான் பிரதானம், ராஜ்ஜியம் அதற்குச் சாதனம். ஜீவகாருண்யம், ஜனசமத்துவம் கூறிய புத்தம் ஜகத்தின் ஒளி போன்றவளாகிய பத்தினியைத் துறந்தவர்களே மேலோர் என்று வைத்து, அவர்களுக்கு கீழே மற்ற உலகை அடக்கி வைத்து உலகமெல்லாம் துக்கமயம், போஇமயம் என்று பிதற்றிக்கொண்டு வாழ்நாளைக் கழிப்பதே ஞான நெறியாக ஏற்படுத்தி மனித நாகரிகத்தை நாசஞ்செய்ய முயன்றதாக குற்றம் புத்த மதத்திற்கு உண்டு.

நல்ல வேலையாக இந்தியா அதை உதறித் தள்ளி வந்துவிட்டது. பின்னிட்டு புத்த தர்மத்தின் வாய்ப்பட்ட பர்மா போற்ற நாடுகள் இங்ஙனமே புத்த மதத்தின் மடத்தை வரம்புமீறி உயர்த்தி மனித நாகரிகத்தை அழித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது.

(பாரதி ஒரு தீர்க்க தர்சி என்பதற்குள்ள பல சான்றுகளில் இதுவும் ஓன்று... இன்றும் பெரிதும் போற்றும் இலங்கையிலே உள்ள நிலைமை அனைவரும் அறிந்ததே. மடம் தான் பிரதானம், ராஜ்ஜியம் அதன் கருவி.... நாம் இன்று பார்ப்பதை பாரதி அன்றே தீர்க்க தர்சனத்தால் பார்த்து இருக்கிறான் அது பொய்யாகாது) 

இதை தொடர்ந்து வந்த ரோமன் கத்தோலிக்கர்களின் போக்குக்கும் இப்படி இருந்து, பின்பு ஐரோப்பாவில் பெரும்  எதிப்புக் கிளம்பி ஒருக் கட்டுக்குள் வந்தது.  

பௌத்தம் அதன் கொள்கைகள் இந்தநாட்டில் மண்ணோடு மண்ணாக போய்விட வில்லை. அவைகள் ஹிந்து மதக் கொள்கைகளுடன் கலந்து இந்நாட்டில் வழங்கி வருகின்றன.

புலால் மறுத்தல், பூர்வஜென்மக் கொள்கை என்னும் இவை இரண்டும் பௌத்தத்தில் இருந்து ஹிந்து மதத்திற்கு வந்ததாக கூறினாலும் அதற்கு ஆதாரம் இல்லை. காரணம் பூரவஜன்மக் கொள்கை பூர்வ புராணங்களிலேயே இருந்தது. பௌத்தமதம் அக்கொள்கையை அறிஞர் கண்டு நகைக்கத் தக்கப்படியாக, வரம்பு மீறி வற்புத்திற்று எனலாம்.

பிற்கால ஹிந்துமதத்தில் அக்கொள்கை அளவுக்கு மிஞ்சி, நிறைந்த ஆர்த்தமாக ஏறிப்போய் இப்போது ஹிந்து நம்பிக்கைகளில் உள்ள குறைகளில் ஒன்றாக விளங்குகிறது.

சாதரணமாக ஒருவனுக்குப் தலைவலி என்றாலும் கூட, அதற்குக் காரணம், 'முதல் நாள் பசியில்லாமல் உண்டதோ',அளவுக்கு மீறித் தூக்கம் விழித்ததோ அல்லது மிகக் குளிர்ந்த அல்லது அசுத்தமான நீரில் குளித்ததோ என்பதை ஆராயாமல், எல்லாம் பூர்வஜன்ம புண்ணியப் பலன் என்று ஹிந்துக்களிலே பாமரர் கூட என்னும் அளவிற்கு நிலைமை வந்துவிட்டது.

உலகத்து வியாபார நிலைமையையும் (He is an economist here) பொருள் வழங்கும் முறைகளையும் மனித தந்திரத்தால் மாற்றிவிடலாம் என்பதும், அங்ஙனம் மாற்றுமிடத்தே செல்வமிகுதியாலும், செல்வக் குறையாலும் மனிதர்களுக்குள்ளே ஏற்படும் கஷ்டங்களையும், அவமானகளையும், பசிகளையும், மரணங்களையும் நீக்கிவிடக் கூடும் என்பதும் தற்காலத்து ஹிந்துக்களிலே பலருக்குத் தோன்றவில்லை. பிறர் சொல்லியும் அது அவர்களுக்குப் புரிவதில்லை.

(அது அவன் விதி... ஆமாம் நாமும் கொஞ்சம் நிதித் தந்தால் அந்த விதியைக் கொஞ்சம் மாற்றலாமே…. எத்தனைப் பேருக்கு இதில் நாட்டம்.....)

ஏனென்றால், அது மன விசயத்தில் ஏற்பட்ட பயங்கரமான பேதங்களையும், தார தம்மியங்களையும், பாரபட்சங்களையும் கண்டு அதற்கு வழி காண முடியாத இடத்திலேதான் (மனம் இல்லை என்று தான் கூற வேண்டும்) இந்த பூர்வஜென்ம விஷயம் உதவியாக நிற்கிறது.

நீண்ட ஆயுள், அற்ப ஆயுள், நோய், நோயின்மை, அழகு, அழகின்மை, செல்வா, ஏழைக் குடியில் பிறப்பதோடு நிற்கலாம். மற்றவைகள் சரிசெய்ய முடிந்தாலும் பணம் சம்பந்தமானதாலே பிறருக்கு உதவ மனமில்லாது இதைக் காரணம் காட்டி தப்பிக்கவே இது பெரிதும் துணைபோகிறது.

பௌத்தமதத்தால் நாம் அடைந்த நன்மைகளில், உண்மையானது ஓன்று உண்டு, அதாவது விக்ரக வழிபாடை ஊர்ஜிதப்படுத்தியது. பௌத்தர்கள் மனிதர்களுக்கு ஏற்படுத்திய சிலைகளை நம்மவர்கள் தேவர்களுக்கு ஞானசக்தியின் விரிவாலும், கற்பனா சக்தியின் விரிவாலும் கலைநயமும் கற்பனையும் கலந்து  அருமையாக ஏற்படுத்தி முக்திக்கு வழிதேடி, உண்மையானப் பக்தியால் வெற்றியும் கண்டார்கள்.

இனி புத்தமதம் இங்கு இழைத்த தீமை யாதெனினும் மாயா வாதம்.

வேதங்களிலும், உபநிடங்களிலும் 'மாயா' என்றால் அது பராசக்தியைக் குறிப்பது. இடைக்காலத்தில் மாயை பொய் என்றொரு வாதம் உண்டாயிற்று. இதனால் ஜகத் பொய், தேவர்கள் பொய், சூர்யா நட்சத்திராதிகள் பொய் (கிரஹங்களை ஆராதிக்கிறான்) பஞ்சபூதம் பொய், பஞ்சேந்திரியம் பொய், மனம் பொய், சைதந்யம் மாத்திரம் மெய்; ஆதலால், இந்த உலகத்துக் கடமைகள் எல்லாம் எரிந்து விடத்தக்கன, என்றதொரு வாதம் எழுந்தது.

'இவ்வுலக இன்பங்கள் எல்லாம் அசாசுவதம்; துன்பங்கள் சாசுவதம் இத்தகைய உலகத்தில் நாம் எந்த இன்பத்தையும் தேடப் புகுதல் மடமையாகும். ஆகவே, எந்தக் கடமைகளையுஞ் செய்யப்புகுதல் வீண் சிரமமுமாகும்' என்ற கட்சி ஏற்பட்டது.

ஆனால் இவைகளை எல்லாம் துறந்துவிட்டதாக நடிக்கிறார்கள் அன்றி, இவர்கள் அங்ஙனம் துறக்கவில்லை. இவ்வுலகத்தில் ஜீவர்கள் எல்லா இன்பங்களையும் துறப்பது சாத்தியமில்லை. கடமைகளைத் துறந்துவிட்டு சோம்பேறிகளாகத் திரிதல் சாத்தியம்,

(எவ்வளவு செல்வம் உள்ளவனும் தொழில் செய்யவேண்டும், சும்மா இருப்பது சுகம் அல்ல நம்மில் பலர் சும்மா இருப்பதற்காக செல்வம் எவ்வழியிலாவது  கொட்டாதா என்று பார்க்கிறோம்)

அது மிக சுலபமுங்கூட, இந்த சோம்பேறித்தனத்தை பெரிய சுகமாகக் கருதியே அநேகர் துறவு பூணுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

இவர்கள் கடமைகளைத் துறந்தனவரே அன்றி, இன்பங்களைத் துறக்கவில்லை. உணவின்பத்தைத் துறந்துவிட்டார்களா? சோறில்லாவிட்டால் உயிர் போய்விடுமே என்றால், அப்போது நீங்கள் தொழில் செய்து ஜீவிக்க வேண்டும். ஆடையின்பத்தை இவர்கள் துறக்கவில்லை, ஸ்நான இன்பத்தை இவர்கள் துறக்கவில்லை, தூக்க இன்பத்தை இவர்கள் துறக்கவில்லை, கல்வி இன்பத்தை இவர்கள் துறக்கவில்லை, புகழின்பத்தைத் துறக்கவில்லை; உயிரின்பந்தத்தைத் துறக்கவில்லை; வாதின்பத்தை துறக்கவில்லை. இவர்களில் முக்கியஸ்தர்களான மடாதிபதிகள் பணவின்பத்தை துறக்கவில்லை. இவர்களுடைய போலி வேதாந்தத்தை அழிக்கும் பொருட்டாகவே பகவத் கீதை எழுதப்பட்டது.

உலகமெல்லாம் கடவுள் மயம் என்ற உண்மையான வேதாந்தத்தைக் கீதை ஆதாரமாக உடையது. மாயை பொய்யில்லை. பொய் தோன்றாது, பின் மாறுகிறதே எனில், மாறுதல் மாயையின் இயற்கை.

மாயை பொய் இல்லை. அது கடவுளின் திருமேனி. இங்கு தீமைகள் அழிக்கவேண்டியன, நன்மைகள் செய்வதற்கும், எய்துவதற்கும் உரியன.

சரணாகதியால்-கடவுளிடம் தீராத மாறாத பக்தியால் யோகத்தை எய்துவீர்கள்,எல்லா ஜீவர்களையும் சமமாகக் கருதக் கடவீர்கள். அதனால், விடுதலையடைவீர்கள். (வீடுபேறு/ஜீவன் முக்தி/ அழியா நிலை/ ஆண்டவன் அருகே அமர்தல்) சத்திய விரதத்தால் ஆனந்தத்தை அடைவீர்கள். இல்லறத் தூய்மையால் ஈசத்தன்மை அடைவீர்கள்.

இந்த மகத்தான உண்மையே கீதை உபதேசிக்கிறது.

இப்படியாக பாரத்தின் பௌத்த மதப் பார்வையின் மூலம் நம்மை நாம் செல்லாத நம் வீட்டின் பல அறைகளுக்குள் அழைத்திச் செல்கிறான் பாரதி. மஹாகவி இவன் ஒரு விஞ்ஞானி, அதனால் தான் தொலைபேசி வரும்முன்னே காசியில் புலவராற்றும் உரையைக் காஞ்சியில் கேட்க கருவி செய்வோம் என்றான். இவன் ஒரு கவியோகி... நாம் அறிந்ததே.

இவன் ஒரு பொருளாதார மேதை (சேதுவை மேல் நிறுத்தச் சொன்னான்) என்பதை மேலுள்ளக் கருத்துக் கூறும்.

தவறான மதம் எப்படி ஒரு நாட்டின் தர்மத்தைக் கெடுக்கும் என்பதை அப்போதே அறிந்தவன் ஆக இந்த தீர்க்க தர்சியை வேறுபலக் காரணத்தால் சில அரசியல் வாதிகள் ஒதுக்கலாம், வேறுபலக் (சமதர்மத்தைப் பற்றிய பாடல்களால்) காரணத்தால் அவனை நம்மவரே (ஹிந்துக்கள்) ஒதுக்கலாம்.

இவன் ஜீவர்களின் வரிசையில் நின்றதால், எல்லா ஜீவாத்மாவினுள்ளும் பரமாத்மாவையேப் பார்த்தான்.

வாழ்க வளர்க பாரதியின் புகழ்.
வாழ்க வாழ்க வாழ்கவே!
ஆக்கம்:  ஆலாசியம் கோவிந்தசாமி, சிங்கபூர்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

24.10.10

கொல்லப்படவிருந்த 35 வயதுக் குழந்தை!

----------------------------------------------------------------------------------
கொல்லப்படவிருந்த 35 வயதுக் குழந்தை!
 ===================================================
இன்றைய வாரமலரை, நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் முத்துராமகிருஷ்ணன் அவர்களின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. நடை துப்பறியும் நாவல்களில் வருவதைப்போல விறுவிறுப்பாக இருக்கிறது. படித்து மகிழுங்கள். ஆக்கம் பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------------------------------------
Over to his posting!
__________________________________________________________
கொலைப்பழி வராமல் கடவுள்தான் காப்பாற்றினார்!

தலைப்பைப் பார்த்ததுமே அந்த குண்டு விழுந்த நாட்டுக்காரர் "சொன்னனில்ல மாமூ..இந்தாளப்பத்தி நாபோட்ட‌ புள்ளி தப்பலியே.."என்று கோபர்களின் தலைவருக்கு குறுந்தகவலைத் தட்டிவிட்டு விட்டதாக காதில் விழுகிறது. போகிறது! முழுக் கதையையும் படித்துவிட்டு போட்ட புள்ளியை மாற்றிக் கொள்வாரா மாட்டாரா என்று பார்ப்போம்.

இந்த சம்பவம் நடந்த சமயம் என் வயது ஏழு அல்லது எட்டு இருக்கலாம்.நான் எந்த வீட்டில் வைத்துப் பிறந்தேனோ அந்த வீட்டிலேயே என்னுடைய 15 வயது வரை வளர்ந்தேன்.அப்பாவுக்கு சொந்தமாக வீடு கிடையாது. சொத்துபத்து சேர்க்கவும் தெரியாது. சேர்க்கக் கூடாது என்ற கொள்கையும் உடையவர். வீட்டு எண் 100, இரண்டாவது அக்ரஹாரம், சேலம் டவுன் என்பது எங்கள் வாடைகை வீட்டின் முகவரி. ஒண்டிக் குடித்தனங்களில் இருந்து அல்லல் பட்ட அப்பா,"எலி வளையானாலும் தனி வளை" என்று 1945ல் மற்றவர்கள் 6,7 ரூபாய் கொடுக்கக் கூடிய வீட்டுக்கு 20 ரூபாய் வாடகை பேசித் தன் மனைவி,இர‌ண்டு குழந்தைகள், மாமனார், மாமியார், இரண்டு மைத்துனர்கள்,ஒரு மைத்துனி சகிதம் குடி வந்து விட்டார்.

நாட்டு ஓடு வேய்ந்த 'இந்தக்கோடிக்கு அந்தக்கோடி' என்று நீளமான வீடு. அகலம் மிகக் குறைவு.அந்த வீட்டுக்கு வரும் விருந்தினர் அனைவரும் "என்ன இது!கோமணம் போல ஏக நீளம்!" என்று தவறாமல் 'கமென்ட்டை'  சிந்த விடுவார்கள்."இவர்களும் சொல்லியாச்சா"என்று மனதுக்குள்ளேயே சிரித்துக் கொள்வேன்.டெல்லிக்கார அம்மா போன்ற 'டீஸன்ட்'டான பெண்மணிகளும் படிக்கும் இந்தப் பதிவில்  'கெளபீனம்'(என்கிற)'கோமணம்' என்ற சொல்
கொஞ்சம் அநாகரீகமாக இருந்தாலும் யதார்த்தமாகக் கதை சொல்லும் போது தவிர்க்க முடியவில்லை. அம்மாக்கள் படித்துவிட்டு மறந்துவிடவும்,என்னை பொறுத்து, மன்னிக்கவும் வேண்டுகிறேன்.

அந்த வீட்டுக்கு வந்தபின்னர்தான்  எனக்கு உடனே மூத்த அண்ணனான‌ முனைவர் கண்ணன்(கோவை நேரு மஹாவித்யாலயா கல்லூரியின் முன்னாள் முதல்வர்) 1946ல் பிறந்தார். அவர் பிறந்த தேதி அன்றுதான் ஹிரோஷிமா நாகசாகி அழிவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்.கேட்கக் கொஞ்சம் சங்க‌டமாக இருந்தாலும் யதார்த்தம் அய்யா யதார்த்தம்!அதை நாம் மறக்கக்கூடாதல்லவா?!

முன்னரே ஒரு பதிவில் கூறிய படி நான் 1949 ஆகஸ்டு மாதம் 22ந் தேதி 100, 2வது அக்ரஹாரத்தில் பிறந்தேன்.(கூறியது கூறல் என்ற இலக்கணப் பிழை வந்து நிற்கிறது. என்ன செய்வது? என் பிறந்த நாளை எல்லோரும் மறக்கக் கூடாது என்ற நல்லெண்ண‌த்தில் மீண்டும் மீண்டும் கூறுகிறேன்) மூத்த அண்ணன் பிறந்தது ஆகஸ்டு 6ந்தேதி. என்னைப் பள்ளியில் சேர்க்கும் போது அப்பாவுக்கு யார் 6ந்தேதி, யார் 22ந்தேதி என்ற குழப்பம் வந்து எனக்கும் 6ந்தேதியே கொடுத்துவிட்டார். எனவே என் 'அஃபிஷியல்' பிற‌ந்த நாள் 6 ஆகஸ்டு 1949! (ஆமாம்! ஹிரோஷிமா நினைவு நாள்!)

97ம் வீட்டில் தான் இந்தக்கதையின் முக்கிய நபர் வசித்தார்.அவரை ஹீரோ என்று சொல்லலாமே என்று கடல் கடந்து வாழும் சிலர் சொல்கிறார்கள். டெலிபதியில் கேட்கிறது! ஏன் சொல்லவில்லை என்பது கதையின் முடிவில் உங்களுக்கே புரியும். வேண்டுமானல் "ஆன்ட்டி ஹீரோ" என‌  வைத்துக் கொள்ளலாமா? எனக்கு அந்த 'டெக்னிக்கல்' சொற்கள் எல்லாம் அவ்வளவா பழக்கம் கிடையாது. இங்கிலீசு நாவல் எல்லாம் படிக்கும், "ரியலிஸம்,  சர்ரியலியஸ‌ம்"  என்று அட்டகாசமா பேசும் படித்தவர்கள்,கதையை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிச்சுப் போட்டு என்ன சொல்கிறார்களோ சொல்லிக்கட்டும்! நாம் உண்மைக் கதையைப் பார்ப்போம்.

வீட்டு எண் 97ல் வசித்தவர் பெயர் ரெங்கன். அவர் முழுப்பெயர் என்ன என்பது அவருக்கே தெரியுமா என்பது சந்தேகமே. ரெங்கநாதனோ, ரெங்க‌சாமியோ, ரெங்கமன்னாரோ, என்னமோ ஒன்று! "ரெங்கா, ரெங்கா"என்று தான் எல்லோரும் கூப்பிடுவோம்.'படிக்காத மேதை'யில் சிவாஜி சார் நடித்த‌
ரெங்கன் பாத்திரம் கிட்டத்தட்ட நம்ம உண்மை ரெங்கனுக்குப் பொருந்திவரும். என்ன வித்தியாசம் என்றால் சிவாஜி நடித்த ரெங்கன் பாத்திரம் வெகுளித்தனமானதுதானே தவிர மன நோயாளி அல்ல. அந்தப் பாத்திரம் கடுமையான உழைப்பாளி. நம்ம உண்மை ரெங்கன் கொஞ்சம் மன நோயாளி, காலில் ஊனம்,பேச்சுக் குளரல், எப்போதும் கட்டுப்படுத்த முடியாமல் வாயில் இருந்து ஜொள்ளு ஒழுகிக்கொண்டே இருக்கும். நம்ம ரெங்கன் எந்த வேலையும் செய்ய மாட்டார். என்னைப் போல வாண்டுகளுடன் கோலிக்குண்டு விளையாடுவார். பம்பரம் விளையாடுவார்.மட்டக்குதிரை தாண்டுவார். சுவரில் கரியால் விக்கெட் தீட்டிக் கிரிக்கெட் விளையாடுவார்.

 மஹான்களைப் பற்றி சரித்திரம் எழுதும் ஆசிரியர்கள் சிறுவனாக இருக்கும் போது 'அவன் இவன் 'என்று எழுதிவிட்டு, மஹானுக்கு ஞானம் வந்தவுடன் மரியாதை கொடுத்து 'அவர் இவர்' என்று எழுதத் துவங்கி விடுவார்கள். நம்ம கதையில் நேர்மாறாக,. வாண்டுகள் ரேஞ்சுக்கு இருக்கும் ரெங‌க‌னை 'அவர் இவர்' என்றால் என்னமோ அந்நியமாகப் படுகிறது. அப்போ எப்படி உரிமையோடு 'வா போ' என்று இயல்பாக‌ அழைத்தோமோ அது போலவே மரியாதை கொடுக்காமல் 'அவன் இவன்' என்றே எழுதுகிறேன்.

எனக்கு அப்போது 7/8 வயது என்றால் ரெங்க‌னுக்கு 35 வயது இருக்கும். ஆனாலும் மூளை என்னமோ 10வயது சிறுவனுக்கு உள்ளது போல.

ரெங்க‌னுக்குத்  தாய் தந்தைய‌ர் ரெங்க‌னின் சிறிய வயதிலேயே இறந்துவிட்டார்களாம். திரண்ட சொத்துக்களை விட்டுச் சென்றாலும், ரெங்க‌னின் அறியாமை காரணாமாக எல்லாவற்றையும், நரிக்கும் கேவலமான த‌ந்திர‌ம் உள்ள‌ உற‌வுக்கார‌ர்க‌ள் பிடுங்கிக்கொண்டு அவ‌னை ந‌டுத்தெருவில் விட்டு விட்டார்க‌ளாம். ஒரே அக்காவின் இல்ல‌த்தில் அடைக்க‌ல‌ம் புகுந்த‌ ரெங்க‌‌னை, குழ‌ந்தை பாக்கிய‌ம் இல்லாத‌ அக்கா த‌ன் குழ‌ன்தையாக‌வே பாவித்து உண‌விட்டு வ‌ந்தார்க‌ள். காதில் வைர‌க்க‌டுக்க‌ன், மொத்த‌மான‌ பிரேஸ்லெட்,தோடா, தொப்புள் வ‌ரை தொங்கும் த‌ங்க‌‌ச் ச‌ங்கிலி என்று ரெங்க‌னைப் பார்த்த‌வ‌ர்க‌ள் சொல்ல‌க் கேட்டுள்ளேன்.அக்காவின் க‌ண‌வ‌ர் ந‌ல்ல‌ ப‌டித்த‌,ஆனால் சாம‌ர்த்திய‌ம் இல்லாத‌ வ‌க்கீல். ச‌ட்ட‌மும், இல‌க்கிய‌மும் கரைத்துக் குடித்த‌வ‌ர். ஆனால் நெளிவு சுளிவு என்றால் என்ன‌ என்றே தெரியாத‌ வ‌க்கீல்.என‌வே வீட்டில் வ‌றுமை.ஆனாலும் வ‌றுமையில் செம்மையாக‌ வா‌ழ்ந்த‌வ‌ர்க‌ள்.தான் ப‌ட்டினி கிட‌ந்தாலும் த‌ம்பி வ‌யிறு காயாம‌ல் பார்த்துக்கொண்டார்க‌ள் ரெங்க‌னின் அக்கா.

காங்கிர‌ஸ் க‌ட்சி த‌மிழ‌க‌த்தில் செல்வாக்கோடு இருந்த‌ ச‌ம‌ய‌ம். க‌ட்சிக்கூட்ட‌ம், ஊர்வ‌ல‌ம் ஆகிய‌வ‌ற்றில் ரெங்க‌‌ன் முன்னிலை வ‌கிப்பான். அழுக்குத் துணியுட‌ன் எங்க‌ளுட‌ன் ப‌ம்ப‌ர‌ம் சுற்றிக்கொண்டு இருக்கும் ரெங்க‌‌‌ன், திடீரென‌ வீட்டுக்குப் போய் அடுத்த‌ நிமிட‌ம் மாஜிக் போல‌ வெளியில் வ‌ருவான். த‌லை‌யில் காந்திக் குல்லாய், க‌த‌ர் ஜிப்பா,வேட்டி, கையில் காங்கிர‌ஸ்  கொடியுட‌ன் த‌ன் குழ‌‌ர‌ல் குர‌லில் "வ‌ந்தேமாத‌ர‌ம், ம‌ஹாத்மா காந்திஜிக்கு ஜே!" என்ற‌ கோஷ‌ங்க‌ளுட‌ன் த‌னி ந‌ப‌ராக‌ ஊர்வ‌ல‌ம் கிள‌ம்பிவிடுவான்.

சுத‌ந்திர‌ம் கிடைப்ப‌த‌ற்கு முன்னால் ஒரு நாள் நீதிம‌ன்ற‌‌த்துக்குப் போய் "வ‌ந்தேமாத‌ர‌ம்" என்று கோஷ‌மிட்டு கோர்ட்டு ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ஸ்த‌ம்பிக்க‌ச் செய்தானாம். இவ‌னைப்ப‌ற்றி ந‌ன்கு அறிந்த‌ நீதிப‌தி இவ‌னுக்கு அன்று ஒரு நாள் ம‌ன்ற‌ம் க‌லையும் வ‌ரை த‌ண்ட‌னை அறிவித்து அத‌னைப் ப‌திவும் செய்து விட்டாராம்.அத‌னால் நாட்டுக்காக‌ சிறை சென்ற‌ தியாகி என்ற‌ ப‌ட்ட‌மும் ரெங்க‌னுக்கு உண்டு!

தெருவில் எல்லாரும் ரெங்க‌‌னின் நிலை அறிந்து அனுச‌ரித்து போவார்க‌ள். சில‌ ச‌ம‌ய‌ம் அவ‌ன் அட்ட‌காச‌ங்க‌ள் எல்லை மீறிப்போகும் போது அவ‌னைக் க‌ட்டுக்க‌ள் கொண்டுவ‌ர‌ ப‌ல‌ப் பிர‌யோக‌மும் செய்வார்க‌ள்.அவ‌னுக்குக் க‌ல்யாண‌ ஆசை வ‌ந்து எல்லோர் வீட்டுப் பெண்க‌ளுக்கும் ஒரு தொந்திர‌வாக‌ப் போய்விட்டான். கொஞ்ச‌‌ம் பேரிட‌ம் அடி கூட‌ வாங்கிவிட்டான்.

என் த‌ந்தையை அண்ணா என்றும் என் தாயாரை ம‌ன்னி என்றும் அழைத்துப் ப‌ழ‌கிய‌ ரெங்க‌‌ன், திடீரென‌ அப்பாவிட‌ம் " மாமா..... உன் பொண்ணக் கொடு...." என்பது போலப் பாடத் துவங்கிவிட்டான். முத‌லில் அவ‌ன் பேச்சை அல‌ட்சிய‌ம் செய்தாலும்,தொந்திர‌வு அதிக‌மாக‌வே அவ‌னை வீட்டுக்குள் அனும‌திக்காம‌ல் விர‌ட்ட‌த் துவ‌ங்கினோம்.

இது இங்கே நிற்க‌ட்டும்.

சேல‌த்தில் சிவ‌சாமிபுர‌ம் எக்ஸ்டென்ஷ‌னில் அந்த‌க் கால‌த்தில் எக்ஸ்ச‌ர்வீஸ்மென் கூட்டுற்வு ச‌ங்க‌த்துக்கார‌ர்க‌ள் 3 ப‌ஸ்க‌ள் வாங்கி ப‌ய‌ணிக‌ளுக்குப் ப‌ணி செய்து வ‌ந்தார்க‌ள். தின‌ச‌ரி ம‌துரை,கோவை, சித‌ம்ப‌ர‌த்துக்குப் பேருந்துக‌ள் சென்று திரும்பும்.சித‌ம்ப‌ர‌ம் பேருந்து எங்க‌ள் தெரு வ‌ழியாக‌ச் செல்லும். வாண்டுக‌ள் எல்லாம் வ‌ரிசையாக‌ நின்று கை அசைத்து வ‌ழி அனுப்ப‌வோம். ப‌ஸ் என்றால் அது ப‌ஸ். முத‌ல் முத‌லில் பானட்டை ப‌ஸ்ஸுக்குள் வைத்து வ‌ந்த‌ முத‌ல் ப‌ஸ் அதுதான். ந‌‌ல்ல‌ உய‌ர‌மான‌ ப‌ஸ்.க‌ம்பீர‌மாக‌ அதிர்வு இல்லாம‌ல் மிக‌ வேக‌மாக‌ அது ந‌ம்மைக் க‌ட‌ப்ப‌தைப் பார்ப்ப‌தே ஒரு அனுப‌வ‌ம். பேருந்துப் ப‌ய‌ண‌த்திற்கு முன் ப‌திவு என்ப‌து முன்னாள் ராணுவ‌த்தின‌ர் ஏற்ப‌டுத்திய‌ ப‌ழ‌க்க‌ம் தான். பின்ன‌ர் அர‌சு கூட‌ அத‌னைப் பார்த்துதான் செய‌ல் ப‌ட்ட‌து.

த‌லைப்புக்கு ச‌ம்ப‌ந்த‌மான‌ ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌ நாள் இப்போது வ‌ருகிற‌து. முத்திரைத்தாள் விற்ப‌னை செய்ப‌வ‌ரான‌ ச‌ந்திர‌ மெள‌லீஸ்வ‌ர‌ர் வீட்டூ வாச‌லில் க‌ட்டிட‌ வேலைக்காக‌ ம‌ண‌ல் கொட்டி இருந்த‌து. நானும் ந‌ண்ப‌ர்க‌ள் ஓரிருவ‌ரும் ம‌ண் வீடுக‌ட்டி விளையாடிக்கொண்டு இருந்தோம். அப்போது வ‌ந்தான‌ய்யா ரெங்க‌‌ன்.

"என்ன‌டா செய்ய‌ரீங்க‌?" ‍இது ரெங்க‌ன்.

நான்: "பார்த்தா தெரிய‌லை? போடா, போ!"

"டேய், டேய், நானும் ஆட்ட‌துக்கு வ‌ரேன்டா! என்னையும் சேத்துக்க‌ங்க‌டா"‍,ரெங்க‌ன் கெஞ்சுகிறான்.

நான் சொல்கிறேன்: "டேய், ரெங்கா! உன்னோட‌ பேச‌க்கூடா‌துன்னு அப்பா சொல்லிட்டார். ம‌ரியாத‌யா போயிடு. இல்லாட்டா அப்பா‌விட‌ம் சொல்லுவேன்".

ரெங்க‌‌னுக்குக் கோப‌ம் பொத்துக்கொண்டு வ‌ந்துவிட்ட‌து. நாங்க‌ள் க‌ட்டிய‌ ம‌ண‌ல்  வீட்டைக் காலால் உதைக்க‌ வ‌ந்தான். நான் ச‌ட்டென்று அவ‌னுடைய‌ தூக்கிய‌ காலைப் பிடித்துத் த‌ள்ளி விட்டேன். ச‌ற்றும் எதிர் பாராம‌ல் ந‌டு ரோட்டில் த‌லைகுப்புற‌ விழுந்தான். ம‌ய‌க்க‌மான‌துட‌ன் வ‌லிப்பும் வ‌ந்து விட்ட‌து.

'கிறீச்'சென்று ஒரு ச‌த்த‌ம். நிமிர்ந்து பார்த்தால் ராட்ச‌ச‌னைப்போல‌ சித‌ம்ப‌ர‌ம் பேருந்து 'ச‌ட‌ன் பிரேக்' போட்டு ரெங்க‌னின் த‌லைக்கு ம‌யிரிழையில் வ‌ந்து நின்று விட்ட‌து. ந‌ல்ல‌வேளையாக‌த் த‌லை மீது ஏற‌வில்லை.பேருந்து ஒட்டுன‌ர் த‌ன் இருக்கையை விட்டு எழுந்து கீழேகுதித்து என்னை பிடிக்க‌ வ‌ந்தார். நான் அவ‌ர் கையில் சிக்காம‌ல் த‌லை தெரிக்க‌  செள‌ராஷ்ட்ரா ந‌ந்‌த‌வ‌ன‌ம் வ‌ரை ஓடி  ஒளிந்து கொண்டேன். சாலையின் இர‌ண்டு ப‌க்க‌மும்
பேருந்துக‌ளும், குதிரை வ‌ண்டிக‌ளும் தேங்கி நின்று டிராஃபிக் ஜாம் ஆயிற்றாம்.நான் நீண்ட‌ நேர‌த்திற்குப் பிற‌கு எல்லாம் அட‌ங்கிய‌ பின்ன‌ர் வீடு திரும்பினேன்.ந‌ட‌ந்த‌ செய்தி அனைத்தையும் கேள்விப்ப‌ட்ட‌ அப்பா சொன்னார்:
"அப்ப‌ன் நாட்டுக்காக‌ ஜெயிலுக்குப் போனேன். ம‌க‌ன் கொலைப் ப‌ழி ஏற்று சிறை செல்லாம‌ல் அந்த‌க் க‌ட‌வுள்தான் காப்பாற்றினார்".

அப்புற்ம் என்ன‌ ஆச்சு ரெங்க‌‌னுக்கு?

1970ல் நாங்க‌ள் சேல‌த்தைவிட்டு வ‌ந்து விட்டோம்.நீண்ட‌ வ‌ருட‌ங்க‌ளுக்குப் பின்ன‌ர் கேள்விப்ப‌ட்ட‌து என்ன‌வென்றா‌ல் ரெங்‌க‌ன் சென்னையைப் பார்க்க‌ ஆசைப்ப‌ட்டு சென்னை வ‌ந்‌தானாம், மின்சார‌த் தொட‌ர் வ‌ண்டியில் அடிப‌ட்டு இற‌ந்துவிட்டானா‌ம்.அவ‌ன் ஆத்மா சாந்தி அடைய‌ப் பிரார்த்திக்கிறேன்!
---ஆக்கம்: KMRK (கே. முத்துராமகிருஷ்ணன்) தஞ்சாவூர்

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

23.10.10

நீங்கள் பத்தோடு பதினொன்றா?

நீங்கள் பத்தோடு பதினொன்றா?

நீங்கள் பத்தோடு பதினொன்றா? அதாவது சராசரி ஆசாமியா? 
அல்லது சராசரிக்கும் மேலே உள்ள மனிதரா?
உங்களை நீங்களே தெரிந்துகொள்ள ஒரு வழியிருக்கிறது. 
அதன் விவரம் கீழே உள்ளது. 
ஸ்க்ரோல் டவுன் செய்து பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கடைசி மேட்டரைத் தவிர மற்றதெல்லாம் ஒத்து வருகிறதா?
ஒரு வார்த்தை சொல்லுங்கள்!
அன்புடன்
வாத்தி (யார்)


வாழ்க வளமுடன்!

22.10.10

இறைவியின்செயல் என்றாகிவிட்டபிறகு, மர்மம் ஏது?

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 பக்தி மலர்

இன்று வெள்ளிக்கிழமை. புதிய பகுதியாக பக்தி மலரை உங்களுக்குத் தருவதற்கு மகிழ்வு கொள்கிறேன். இன்றைய பக்தி மலரை, தஞ்சைத் தரணியைச் சேர்ந்தவரும், நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவருமான, திருவாளர்.வி. கோபாலன் அவர்களின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. படித்து மகிழுங்கள்


----------------------------------------------------------------------------------------
Over to his posting!

----------------------------------------------------------------------------------------
                                                    "அன்னமிட்ட அன்னை!”
    மகாத்மா காந்தி முதன் முதலில் காலடி எடுத்து வைத்த தமிழகக் கிராமம் எது தெரியுமா? தற்போது நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தில்லையாடி என்னும் கிராமம். அவருக்கு  அப்படி என்ன ஆர்வம் அங்கு?

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா சத்தியாக்கிரகம் செய்தபோது அவரோடு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைப்பட்ட ஒரு டீன் ஏஜ் பெண், வள்ளியம்மை என்று பெயர், அவர் சிறையில் மாண்டு போனார். அந்த சின்னஞ்சிறு பெண்ணின் தியாகத்தைப் போற்ற மகாத்மா அந்தப் பெண் பிறந்த கிராமமான தில்லையாடிக்கு  விஜயம் செய்து அங்கு அந்தப் பெண்ணின்  நினைவாக ஒரு ஸ்தூபியையும் திறந்து வைத்தார். அந்த தில்லையாடியில் தான் நானும் அவதரித்தேன்.

    அப்படிப்பட்ட தியாகி பிறந்த ஊரில் பிறந்ததனால் உனக்கு என்ன பெருமை என்று நீங்கள் கேட்பதும்  எனக்குப் புரிகிறது. ஒரு அல்ப ஆசை. அந்த மண்ணின் ராசி, நாமும் ஏதாவது ஒரு வகையில் தியாகியாக  முடியாதா என்று. இன்று வரை ஆகவில்லை.

    அது போகட்டும். இந்த ஊரில் நாராயணசாமி என்றொரு நெசவாளி. அவரும் மேலும் சிலரும்  தென்னாப்பிரிக்கா சென்றால் அங்கு நல்ல வேலை கிடைக்கும், பணம் சம்பாதித்து ஊர் திரும்பலாம் என்று  நம்மவர்களை  வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் "கங்காணி'களை அணுகினார்கள். அப்போதெல்லாம் பிரிட்டிஷ்  ஆட்சி. எந்த நாட்டிற்கும் நம் இஷ்டத்துக்குச் செல்லலாம். பாஸ்போர்ட் இல்லை, விசா இல்லை. நேராக  நாகப்பட்டினம் போனார்கள், அங்கிருந்து படகில் சென்று கடலில் வெகு தூரத்தில் நிற்கும் கப்பலில் ஏறிப் பயணம்  செய்து தென்னாப்பிரிக்காவில் இறங்கினார்கள்.

    அங்கு இவர்களுக்கு என்ன பெயர் தெரியுமா? கூலிகள். ஆம்! காந்தி கூட அங்கு ஒரு வழக்குக்காக  சென்றவர் இல்லையா? அதனால் அவருக்கும் 'கூலி வக்கீல்' என்றுதான் பெயர். தானாக வலியச் சென்று  அடிமைகளானவர்கள் நமது சகோதரர்கள். ஏற்கனவே அந்த பூமியின் சொந்தக்காரர்களான கருப்பர்கள்  அடிமைப்படுத்தப் பட்டுள்ள நிலையில், இங்கிருந்தும் மேலும் அடிமைகள். ஆனால் அவர்களும் இவர்களும்  கருப்பர்கள் என்றும், அடிமைகள் என்றும் வகைப்படுத்தப் பட்டார்கள். அங்கிருந்த நிலைமை குறித்து மேலதிகத் தகவல்களுக்கு மகாத்மா காந்தியின் "சத்திய சோதனை"யைப் படியுங்கள்.

    அப்படி தென்னாப்பிரிக்காவில் குடியேறிய குடும்பத்தில் உதித்த பெண்தான் வள்ளியம்மை. அந்தப்  பெண் எங்கள் சின்னஞ்சிறிய கிராமத்துக்கு பெருமை சேர்த்து விட்டாள். அந்த கிராமமே 'வள்ளியம்மை நகர்'  என்றே அழைக்கப் படலாயிற்று. அந்த புண்ணிய பூமியில் நான் அவதரித்ததாகச் சொன்னேன் அல்லவா? ஆனால்  எந்த வகையிலும் சொல்லும்படியாக என் வாழ்க்கை அமையவில்லை!

    அந்த ஊரைச்சுற்றி பல அருமையான தலங்கள். மிக அருகில் திருவிடைக்கழி என்னும்  அருணகிரியாரால் பாடப்பட்ட திருத்தலம். வடக்குத் திருச்செந்தூர் என வழங்கப்படும் முருகத்தலம். அடுத்தது  திருக்கடவூர் எனும் அபிராமியம்மைத் திருத்தலம். இங்கு கோயில் கொண்டுள்ள காலசம்ஹார மூர்த்திதான்  மார்கண்டேயனுக்காக எமனை வதம் செய்தவர். அபிராமி அந்தாதி எனும் மிக உயர்ந்த நூல் சுப்பிரமணிய பட்டர்  என்பவரால் எழுதப்பெற்றது. பின்னர் இவர் அபிராமி பட்டர் என அழைக்கப்பெற்றார்.

    அதற்கடுத்ததாக அனந்தமங்கலம் என்னும் சிற்றூர். அங்கு மிக உயரமான ஆஞ்சநேயர்  எழுந்தருளியிருக்கிறார். அதையொட்டி எப்போதும் அலைகள் பாடிக்கொண்டிருக்கும் இடம், தரங்கம்பாடி. அந்த  நாளில் டச்சுக்காரர்கள் கட்டிய கோட்டையை இன்றும் காணலாம், அருகில் கடல் எப்போது விழுங்குமோ  என்றபடி உயிரைக் கையில் பிடித்தபடி நிற்கும் மாசிலாமணி நாதர் ஆலயம். அங்கு போகும் வழியில் ஒழுமங்கலம்  என்றொரு ஊர். அங்கு எழுந்தருளியுள்ள மாரியம்மன் மிகப் பிரசித்தமானவள். இந்த மாரியம்மனுக்கு நேர்த்திக்  கடன் செலுத்த தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வர். அப்படிப்பட்ட சூழலில் அமைந்த  ஊர் தில்லையாடி எனும் வள்ளியம்மை நகர்.

    அது சரி, இதெல்லாம் எதற்கு இப்போது? பூகோளப் பாடமா? இல்லை, இந்த ஒழுமங்கலம்  மாரியம்மனின் திருவிளையாடலைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்பதற்காக  இத்தனை பீடிகை போட்டேன். கொஞ்சம் பொறுமை காட்டுங்கள், விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

    நான் எனது ஒன்பதாவது வயதில் பிறந்த மண்ணை விட்டு மயிலாடுதுறை செல்லும்படியாகி விட்டது.  அப்போது எங்களுக்கிருந்த வீடு அறுநூறு ரூபாய்க்கு விற்கப்பட்டது. பின்னர் திருவிடைக்கழியில் இருந்த நஞ்சை நிலமும் சில ஆயிரங்களுக்கு விலை போயிற்று. ஒருவழியாகப் படித்து வேலையில் சேர்ந்தது திருச்சியில். அங்கிருந்து கரூர், பின்னர் புதுக்கோட்டை, கடைசியில் தஞ்சாவூர். கரூரில் இருந்த சமயம் திருமணம் ஆயிற்று.

முதலில் ஒரு ஆண் குழந்தை. அதன் ஓராண்டு நிறைவுக்கு காது குத்தி, தலைக்கு மொட்டை போடப் பிறந்த  பூமிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்படி வேண்டுதல். ஒழுமங்கலம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல கரூரிலிருந்து மயிலாடுதுறை வந்து தங்கி, மறுநாள் காலையில் கிளம்பி, ரயிலில் பயணம் செய்து பொறையாறு  என்கிற ரயில் நிலையத்தில் இறங்கி, அருகிலுள்ள ஒழுமங்கலம் சென்றோம். அப்போது மயிலாடுதுறை  தரங்கம்பாடி இடையே ரயில் போக்கு வரத்து இருந்தது. வழியில் மாயூரம் டவுன், மன்னம்பந்தல், ஆக்கூர்,  செம்பொன்னார்கோயில், திருக்கடவூர், தில்லையாடி, பொறையாறு கடைசியில் தரங்கம்பாடி.

    ஒழுமங்கலத்தில் குழந்தைக்கு மொட்டை அடித்து, குளத்தில் மூழ்கி பின்னர் மாரியம்மனுக்கு மாவிளக்கு முதலியன போட்டு தரிசனம் முடிய கிட்டத்தட்ட பன்னிரெண்டு மணியாகிவிட்டது. ஒழுமங்கலம் மாரியம்மன் மிக  சக்தி வாய்ந்தவள் என்பது பொதுவாக அங்கு நம்பப்படும் செய்தி. எந்தக் குறையு மில்லாமல் எங்கள் நேர்த்திக்  கடன் முடிவடைந்தது. நல்ல வெயில். அருகிலுள்ள பொறையாறு ரயில் நிலையம் சென்றோம். குழந்தைக்கு நல்ல
பசி. எங்காவது பசும்பால் கிடைக்குமா என்று விசாரித்துப் பார்த்தேன். எங்கும் கிடைக்கவில்லை. பொறையாறு  நிலையத்துக்கு அருகிலும் எந்த ஓட்டலும் இல்லை. எங்களுக்கும் நல்ல பசி. என்ன செய்வது. மாயூரம் செல்ல  தரங்கம்பாடியிலிருந்து 12.45க்கு ஒரு ரயில் வரும். அது கிட்டத்தட்ட இரண்டு மணிக்குத்தான் மாயூரம் போகும்.

அதுவரை பசியைத் தாங்கமுடியுமா? குழந்தையின் அழுகையும் அதிகரித்து வந்தது. ரயில் சரியாக 12.45க்கு  வந்தது. அங்கிருந்து, அடுத்த நிலையம் தில்லையாடிதான். அங்கு இப்போது யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம்  ஒன்றும் தெரியாது. அப்படி யாராவது இல்லாமலா போய்விடுவார்கள். போய் அங்கு யார் வீட்டுக்காவது போய்  நிலைமையைச் சொல்லி அங்கு சாப்பிட்டால் என்ன என்று தோன்றியது. சரியாக ஒரு மணிக்கு ரயில் தில்லையாடி
போய்ச் சேர்ந்தது. நாங்கள் துணிந்து இறங்கி விட்டோம்.

    கோயிலுக்கு எதிரில் சந்நிதித்தெருவின் முடிவில் ரயில் நிலையம். நான் இருந்தது வடக்கு மடவளாகம்  என்னும் தெரு. அங்கு போவது மிகவும் சுலபம். அதிகம் நடக்கத் தேவையில்லை. நல்ல வெய்லில் வேகமாக  சந்நிதித் தெருவைக் கடந்து வடக்கில் திரும்பி வடக்கு மடவளாகம் போய்ச் சேர்ந்தோம். அங்கு சுமார் பதினைந்து  இருபது வீடுகள்தான் இருக்கும். அந்தத் தெருமுனையில் நாங்கள் திரும்பிய போது அங்கு ஒருவரையும்  காணவில்லை. ஏழெட்டு வீடு தாண்டி ஒரு வீட்டு வாசலில் ஒரு அம்மையார் நிற்பது தெரிந்தது. சரி அங்கு  போய்விடுவோம். மொட்டையடித்த கைக்குழந்தை, கணவன் மனைவியாக நாங்கள் இருவர். எங்களுக்கு உணவு  இல்லாமலா போய்விடும். ஆபத்துக்குப் பாவமில்லை. பசி என்று கேட்டால் போட மறுக்கப் போகிறார்களா  என்ன? துணிந்து நடந்தோம்.

    அந்த வீட்டை நெறுங்கிய சமயம் அந்த அம்மையார் எங்களை எதிர்பார்த்து நிற்பது போலத் தெரிந்தது. நாங்கள் நெறுங்கி வந்ததும் "வாருங்கள், வாருங்கள்" என்று தெரிந்த உறவினரை அழைப்பது போல அந்த  அம்மையார் எங்களை அழைத்தார்கள். நாங்களும் அப்பாடா என்று வீட்டினுள் நுழைந்தோம். நான் சொன்னேன்,

இதே தெருவில் இருந்த சுந்தராம்பாள் பாட்டியின் பேரன் நான். என் அப்பா சைகோன் வெங்கட்டராமன் என்பது என்றேன். ஆகா, தெரியுமே, நன்றாகத் தெரியுமே என்று எங்கள் குடும்ப விஷயங்களை விசாரிக்கத் தொடங்கி  விட்டார்.

    உள்ளே வாருங்கள், கைகால்களை சுத்தம் செய்துகொண்டு வந்து உட்காருங்கள். சாப்பிடலாம். மணி ஆகிவிட்டது என்றார்.

     என்ன இது ஆச்சரியம். எங்கள் மனவோட்டத்தை இந்த அம்மையார் புரிந்து கொண்டாரா, என்ன? “ குழந்தைக்கு பால் தரட்டுமா? நீங்கள் வேறு ஏதாவது கொடுப்பீர்களா?”  என்றார்.

    பால் முதலில் தருகிறோம். பிறகு சிறிது ரசம் சாதம் கொடுக்கலாம் என்று என் மனைவி சொன்னாள். எங்களுக்கு இன்னமும் ஆச்சரியம்
தாங்கவில்லை. நானே கேட்டேன்.  

     "நீங்கள் சாப்பிட்டு விட்டீர்களா, அம்மா?" என்று.

    ” இன்னும் இல்லை”  என்றார் அவர்.

     "ஏன், நேரமாகிவிட்டதே" என்றேன்.

      அப்போது அந்த அம்மையார் சொன்ன செய்திதான் எனக்கு இத்தனை ஆண்டுகள்  கழித்தும் மனதைவிட்டு அகலாமல் இருக்கிறது.

அவர் சொன்னார். “ நாங்கள் எப்போதும் காலையில் பழைய சாதம்
சாப்பிட்டுவிடுவோம். பிற்பகல் ஒரு மணிக்கு தரங்கம்பாடி ரயில் வந்த பிறகு அதில் யாராவது விருந்தாளிகள்  வருகிறார்களா என்று பார்த்துவிட்டுத்தான் சாப்பிடுவது வழக்கம்”  என்றார் அவர்.

    ”அது எப்படி இந்த கிராமத்துக்கு விருந்தாளி தினம் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்? “  என்றேன்.

    அவர் சொன்னார், ” இங்கு மிக அருகாமையில் இருக்கும் திருவிடைக்கழி, திருக்கடவூர், ஒழுமங்கலம் இவைகளெல்லாம் பிரார்த்தனை தலங்கள். இங்கு வேண்டுதல் உள்ளவர்கள் அடிக்கடி வந்து தரிசனம் செய்து,  பிரார்த்தனைகளை முடித்துக் கொண்டு போவார்கள். அப்படி இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் இருந்தால் நிச்சயம்  இங்கு வந்துவிட்டுத்தான் போவார்கள். அப்படி அடிக்கடி இங்கு வருபவர்கள் உண்டு. அந்த வகையில் வரும்  விருந்தினர்களை உபசரித்து, பசியோடு வரும் அவர்களுக்குச் சாப்பாடு போட்டு விட்டுத்தான் நாங்கள் சாப்பிடுவது  என்பது நெடுநாட்களாக இருந்து வரும் பழக்கம்”  என்றார்.

     அப்போது அவரது கணவர் அந்த ஊரின் கணக்குப் பிள்ளை. எங்கோ வெளியில் போய்விட்டு குடையோடு வீட்டுக்குத் திரும்பினார்.

    எங்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்து முகமன் கூறி,  “வாருங்கள், கொஞ்சமும் தயக்கமில்லாமல் உங்கள்  வீடு போல இங்கு சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை ரயிலில் நீங்கள் போகலாம்”  என்றார்.

     வீட்டில் அவர்கள் இரண்டே பேர்தான் என்றாலும், நாலைந்து பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.

     இது என்ன அதிசயம். நாங்கள் வருவதை எப்படி அவ்வளவு நிச்சயமாக எதிர்பார்த்தார்கள். ஒன்றும்  புரியவில்லை. அவரும் கைகால்களைக் கழுவிக்கொண்டு வந்து உட்கார அனைவரும் உணவு உண்டு எழுந்த  பின் அந்த வீட்டு அம்மாள் தான் உட்கார்ந்து உணவருந்தினார். அவர் சொன்னது போலவே அன்று பகல் வெய்யில்  நேரத்தில் அவர்கள் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு மாலை ரயிலேறி ஊர் திரும்பினோம்.

    அந்த அம்மையாரின் பரந்த உள்ளத்தினால் ஏற்பட்டதா, அல்லது ஒழுமங்கலம் மாரியம்மன் எங்களை  "பசியாயிருக்கிறது என்று தவிக்கிறீர்களே, போங்கள், அங்கு ஒரு அம்மாள் உங்களுக்காக சாப்பாடு வைத்துக்  கொண்டு காத்திருக்கிறாள்" என்று எங்களை இங்கே அனுப்பி வைத்தாளா? தெரியவில்லை. அந்த மர்மம்
புரியவில்லை.

    பின்னர், அதை இறைவியின் செயல் என்று எடுத்துக்கொண்டு விட்டேன்.

    இறைவியின் செயல் என்றாகிவிட்டபிறகு, மர்மம் ஏது?

    ஆக்கம்: V. கோபாலன், தஞ்சாவூர்
-------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

16.10.10

ஏழைக்கு எழுத்தறிவித்தலால் ஏற்படும் பயன் என்ன?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழைக்கு எழுத்தறிவித்தலால் ஏற்படும் பயன் என்ன?

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இன்று சரஸ்வதி பூஜை தினம். சரஸ்வதியை வணங்கிப் பூஜிக்கும் தினம்.

அறிவிற்கான, கலைகளுக்கான கடவுள் சரஸ்வதி. Sarasvatī is the goddess of knowledge, music and the arts வேதங்களின் தாய். பிரம்மாவின் துணைவி.

தேவியின் அருட்பார்வை கொஞ்சமேனும் இருப்பதால்தான் நான் ஜோதிடத்தைக் கற்றுணர்ந்தேன். உங்களுக்குப்  பயிற்றுவிற்கிறேன். உங்களுக்கும் சரஸ்வதியின் அருட்பார்வை இருப்பதால்தான் ஆர்வமுடன் அரிய கலையான ஜோதிடத்தைக் கற்றுக்கொள்கிறீர்கள்.

சரஸ் என்றால் வடமொழியில் தங்குதடையின்றி சீரான ஓட்டத்துடன் இருக்கக்கூடியது என்றும் வதி என்றால்  ‘பெண் என்பதையும் குறிக்கும். "saras" (meaning "flow") and "wati" (meaning "a woman").

அறிவு தங்குதடையின்றி வளர வேண்டும். வெளிப்பட வேண்டும். பயன்பட வேண்டும். தேவிக்கு சரியான  பெயர்தான் உள்ளது.

இன்று தேவியை வணங்கும் முகமாக, தேசியக் கவி சுப்பிரமணிய பாரதியின் பாடலைப் பதிவிடுகிறேன்.  அனைவருக்கும் தெரிந்த பாடல்தான். இருந்தாலும், அதை நினைவுறுத்தி இன்று தருவதில் மிக்க மகிழ்ச்சி  கொள்கிறேன்.

எதெதில் தேவி இருப்பாளாம்?

பாரதி அழகாகச் சொல்லியுள்ளார்:

வெள்ளைத் தாமரைப் பூவில் அவள் இருப்பாளாம். வீணையின் இனிய நாதத்தில் இருப்பாளாம். மனதை மயக்கும்  கவிதைகளைக்கூறும் கவிஞர்களின் உள்ளத்திலே இருப்பாளாம். இப்படி, தேவி இருக்கும் இடங்களை எல்லாம்  பட்டியல் இட்டிருக்கிறார் பாரதியார். படித்து, பொருள் உணர்ந்து மகிழுங்கள்!!!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------
ராகம்-ஆனந்த பைரவி                                                                    
தாளம்-சாப்பு

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள முற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொரு ளாவாள்.                                   
(வெள்ளைத்)

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்.                                              
(வெள்ளைத்)

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்
வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,
வீர மன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.                                                     
(வெள்ளைத்)

தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,
தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;
உய்வ மென்ற கருத்துடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம்                 
(வெள்ளைத்)

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்.                                           
(வெள்ளைத்)

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி;
நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி;
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அனனை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்,                                  
(வெள்ளைத்)

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு;
சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க.                                         
(வெள்ளைத்)

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்!                                               
(வெள்ளைத்)

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்                
(வெள்ளைத்)

நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் வ்வகை யானும்
இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்!                                    
(வெள்ளைத்)   

+++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!