"அட கெரகம் புடிச்சவனே!"
யாரையாவது திட்டும்போது இப்படித்தான் திட்டுவோம்: இப்படியும் திட்டுவோம்
"அவனுக்கு நாக்கில சனிடா. அவன் சொன்னான்னா, அந்தக் காரியம் ஊத்திக்கும்டா"
"சனிப்பயல்டா அவன், குறுக்க வந்தான்னா, போற காரியம் உருப்படாதுடா"
அதே போல வீடுகளில் தாய்மார்கள், கோபத்தில் தங்கள் குழந்தைகளை
இப்படித்தான் திட்டுவார்கள்
"சனியனே, வந்து கொட்டிக்கிட்டுப் போய் அப்புறமா விளையாடு.
நான் இட்லிக் கடையை எப்ப முடிக்கிறதாம்?"
கிராமங்களில் பெண்கள் சர்வசாதரணமாக இப்படிச் சொல்வார்கள்
"கெரகம், வந்து வாய்ச்சுது பாருடி எனக்குப் புருஷன்கிற பேர்ல ஒரு சனீஷ்வரன்.
படுத்தி எடுக்குதுடி. எதுக்குமே அதுக்கு நேரம் காலம் கிடையாதுடி. கண்டதே
காட்சி, கொண்டதே கோலம்ன்னு திரியுதுடி. முச்சூடும் அக்கறையே இல்லாத
ஜென்மம். போன ஜென்மத்தில எருமை மாடா இருந்திச்சோ என்னமோ. எங்க
அப்பாரு எனக்கு அதைப் புடிச்சுக் கட்டிவச்சுட்டாருடி"
ஆகா, கை பிடித்தவனைப்பற்றி என்னவொரு அசத்தலான விளக்கம்!
சில ஆசாமிகள் அப்படித்தான் இருப்பார்கள். மனைவிமார்கள் அலுத்துக்
கொள்வதில் தவறில்லை!
பார்த்தீர்களா?
இப்படி எல்லோர் வாயிலும் சம்பந்தமில்லாமல் திட்டு வாங்குகிறார் சனீஷ்வரன்.
யாரும் இனிமேல் அவரைத் திட்டாதீர்கள். அவரைப் போலக் கொடுப்பார்
இல்லை (கெடுப்பாரும் இல்லைதான்) அவர் தன்னிச்சையாக எதையும் செய்வதில்லை.
ஜாதகனின் முன்கர்மவினைகளுக்கு ஏற்றபடி, அதற்குரிய பலன்களையே அவர்
கொடுப்பார்.
-----------------------------------------------------------------------------------------
யோசித்துப் பாருங்கள். பிறப்பில் ஏன் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் ?
எல்லாக் குழந்தைகளுமே ஒரு தாயின் வயிற்றில் 280 நாட்கள் இருக்கின்றன
ஆனால் ஒன்று செல்வந்தர் வீட்டிலும் மற்றொன்று ஒரு பரம ஏழை வீட்டிலும்
பிறப்பதேன்?
ஒன்று அறிவாளியாகவும்,மற்றொன்று அடி முட்டாளாகவும் பிறப்பதேன்?
சில குழந்தைகள் மட்டும் உடல் ஊனத்தோடு பிறப்பதேன்?
ஒன்று ஏஸி. முத்தையா செட்டியார் வீட்டிலும், ஒன்று ஓசி முத்தையா வீட்டிலும்
பிறப்பதேன்?
பிறப்பில் ஏன் இத்தனை பேதமைகள்?
எல்லாம் கர்மவினை. முற்பிறவியில் செய்த பாவங்கள்.
சிலர் தாங்கள் செய்யும் பாவங்களுக்கு இப்பிறவியிலேயே தண்டனைகளை
அனுபவிக்க நேரிடும். சிலருக்குப் பாவங்கள் carry forward ஆகும்.
கவியரசர் ஒருமுறை இப்படிச் சொன்னார்:
"தட்டோடு கோவில் வாசல்களில் உட்கார்ந்து இன்று பிச்சையெடுப்பவர்கள் எல்லாம்
சென்ற பிறவியில் இறைவன் இல்லை என்று சொன்னவர்கள். முற்பிறவியில் தாயைப்
புறக்கணித்தவனுக்கு இந்தப் பிறவியில் தாய்ப்பாசம் மறுக்கப்பட்டுவிடும். தந்தையைப்
புறக்கணித்தவன் தந்தையாக முடியாது. வயதான மாமியாரைப் புறக்கணித்தவள்
மாமியாராக முடியாது. செல்வத்தைச் சீரழித்தவன் சீமான் வீட்டில் பிறக்கமுடியாது."
இதெல்லாம் இருவினைப் பயன்கள் எனும் கணக்கில் மனிதன் பிறக்கும்போது கூடவே
வரும். அது எப்படி pro gramme செய்யப்பட்டு வருகிறது என்பது மட்டும் யாருக்கும்
தெரியாது. எந்த சர்வரில் இருந்து செயல் படுத்தப்படுகிறது என்பதும் தெரியாது.
தெரிந்தால் மனிதன் சும்மா இருப்பானா?
பட்டினத்தடிகளும் அதை இப்படிச் சொன்னார்
"பற்றி தொடரும் இருவினைப் பாவமும் புண்ணியமும்"
------------------------------------------------------------------------------
வடமொழியில் சனி என்றால் மெதுவாக செயல் படுபவன் என்று பொருள்.
வானவெளியில் ஒரு சுற்றை முடிக்க அவர் சுமார் முப்பது ஆண்டு காலத்தைச் சனி
எடுத்துக் கொள்வதால் அப்படி சொல்லியிருக்கலாம்
தீயவர்களில், முதன்மையான தீயவன் என்று பெயர் பெற்றவர் சனீஷ்வரன்
(malefic amongst the malefics)
வில்லன்களில் Top rated villain என்று வைத்துக்கொள்ளுங்கள்
சனி தான் சென்றமரும் வீட்டை சேதப்படுத்தி விடுவார். அதே போல அவர்
பார்வையைப் பெறும் வீடு சேதத்திற்கு உள்ளாகும். அதே நிலைமைதான் அவருடன்
சேரும் கிரகத்திற்கும் ஏற்படும். அல்லது அவர் பார்வையைப் பெறும் கிரகத்திற்கும்
ஏற்படும்.
ஏழில் அமர்ந்திருக்கும் சனிக்கு மட்டும் இந்தத் தன்மை இருக்காது. இந்த விதிகளில்
ஏழாம் வீட்டுச் சனிக்கு விலக்கு உண்டு.
Saturn destroys the house it occupies. The seventh place position is exempted
since Saturn receives directional strength.
ஜாதகத்தில் வலுவாக இருக்கும் சனி, அனுசரித்துச் செயலாற்றும் தன்மை, புகழ்,
பொறுமை, தலைமை ஏற்கும் சக்தி, அதிகாரம், நீண்ட ஆயுள், நிர்வாகத்திறமை,
உண்மையாக இருத்தல், விசுவாசம், நேர்மை, நியாயமாக இருத்தல், தவறு எது
சரி எது என்று உணர்ந்து செயல்படும் தன்மை ஆகியவற்றைச் ஜாதகனுக்குக்
கொடுப்பார்.
ஜாதகத்தில் வலுவில்லாமல் தீமை பயக்கும் நிலையில் இருக்கும் சனி
துன்பம், துயரம், தாமதம், தடைகள், ஏமாற்றங்கள், வம்பு, வழக்குகள்,வெறுப்பு,
கஷ்டங்கள் என்று வரிசையாக தொல்லைப் படுத்தும், அவதிப்படும் சூழலையே
ஜாதகனுக்குக் கொடுப்பார். ஜாதகன் நம்பிக்கையின்மையோடும், உணர்ச்சி
வசப்படும் நிலைமையோடும், ரகசியமாகவும் செயல்படும் நிலைமைக்கும்
தள்ளப்படுவான். இந்த categoryயில் (miseries, sorrows, delay, obstruction,
disappointment, disputes, dejection, difficulties)ஏதாவது விடுபட்டிருக்கிறதா?
விடுபட்டிருந்தால் அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
--------------------------------------------------------------------------------------------
சனிக்கு உரிய கிழமை சனிக்கிழமை. உலகில் அது எந்த நாடாக இருந்தாலும்
சனிக்கிழமைதான். (Saturday is for Saturn)
வான சாஸ்திரம், ஜோதிடம், கணிதம் அகிய மூன்றும் உலகிற்கு இந்தியர்கள்
அளித்த கொடை. இந்தியாவில் இருந்து வணிகத்திற்காக அக்காலத்தில் வந்து
சென்ற கிரேக்கர்கள் மற்றும் சீனர்கள் மூலமாக, அது உலகெங்கும் பரவியது
சனியின் ஆதிக்க திசை மேற்கு
சனிக்கு உரிய நிறம்: கறுப்பு
சனிக்கு உரிய நவரத்தினக் கல்: நீலக் கல் (blue sapphire)
சனிக்கு உரிய எண்: 8
--------------------------------------------------------------------------
சனிக்குச் சொந்த வீடுகள்: மகரம், கும்பம்
சனிக்கு நட்பு வீடுகள்: ரிஷபம், மிதுனம், கன்னி
சனிக்குச் சம வீடுகள்: தனுசு, மீனம்
சனிக்குப் பகை வீடுகள்; கடகம், சிம்மம், விருச்சிகம்
சனிக்கு உச்ச வீடு: துலாம்
சனிக்கு நீச வீடு: மேஷம்
சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் இருக்கும் சனிக்கு 100%
வலிமை இருக்கும்.
சனியுடன் சூரியன் சேரக்கூடாது. அதுவும் ஜாதகனின் லக்கினத்தில்
சேரக்கூடாது. அல்லது ஒருவர் பார்வையில் ஒருவர் இருக்கக்கூடாது.
உடல் நோய்கள், உடல் உபாதைகள் உடல் ஊனங்கள் ஏற்படும்
அபாயம் உண்டு. அதோடு ஜாதகனுக்கும், அவனுடைய தந்தைக்கும்
சுமூகமான உறவு இருக்காது. இருவரும் எலியையும் பூனையையும்
போல ஒற்றுமையாக இருப்பார்கள்:-))))
சம வீட்டில் இருக்கும் சனிக்கு 75% பலன் உண்டு! (என்ன
இருந்தாலும் சொந்த வீடு போல ஆகுமா?)
நட்பு வீட்டில் இருக்கும் சனிக்கு 90% பலன் உண்டு.
பகை வீட்டில் இருக்கும் சனிக்கு 50% பலன் மட்டுமே உண்டு
நீசமடைந்த சனிக்கு பலன் எதுவும் இல்லை
உச்சமடைந்த சனிக்கு இரண்டு மடங்கு (200%) பலன் உண்டு!
இந்த அளவுகளையெல்லாம் நான் Avery Company தராசை வைத்து
எடை போட்டுச் சொல்லவில்லை; அனுபவத்தில் சொல்கிறேன்.
அதை மனதில் கொள்க!
-----------------------------------------------------------------------
The second biggest planet in the solar system,
Saturn is also one of the the most important planets.
700 earths can be fit into Saturn.
சுருக்கமாகச் சொன்னால்:
Saturn is the indicator of Sorrow and if he is in good position in the horoscope,
the native will be a Wise One freed from sorrow. If he is weak, the native will
be depressed and unable to come out of the sorrow.
(சனியைப்பற்றிய அலசல் தொடரும்)
---------------------------------------------------------------------
சனிதான் எனக்குப் பிடித்த கிரகம். என் ராசிநாதன் அவன்தான்
நான் மகரராசிக்காரன். மகர ராசிக்காரர்கள் எல்லாம் கடுமையான
உழைப்பாளிகள். என் உழைப்பு உங்களுத் தெரிந்திருக்கும்!:-))))
இன்று சனிக்கிழமை. ஆகவே சனீஷ்வரனைப் பற்றிய பாடத்தை இன்று வலை
ஏற்றுவோம் என்று உவந்து வலை ஏற்றியிருக்கிறேன்.
வரிசைப்படி இதைத் திங்கட்கிழமைதான் ஏற்றியிருக்க வேண்டும். சணீஷ்வரனின்
சனிக்கிழமைக்காக இரண்டு நாட்கள் முன்பாகவே வலையில் ஏற்றியிருக்கிறேன்.
இதைப் படித்துவிட்டு உடனே, அடுத்த பாடம் திங்கட்கிழமை வரும் என்று
யாரும் நினத்துக்கொள்ள வேண்டாம். அடியேன் திங்கள் & செவ்வாய்க்
கிழமைகளில் வெளியூர் செல்ல இருப்பதால், அடுத்த பாடம் 4.3.2009 புதன்கிழமை
அன்று பதிவிடப் பெறும்.
நன்றி, வணக்கத்துடன்
வகுப்பறை
வாத்தியார்
வாழ்க வளமுடன்!