மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My Photo
Coimbatore, Tamil Nadu, India
எழுத்து என் தொழில் அல்ல! பத்திரிக்கைக்காரர்களும், வாசகர்களும் கொடுத்த உற்சாகத்தால் இதுவரை 80 சிறுகதைகளையும், பல குட்டிக்கதைகளையும் எழுதியுள்ளேன். 1,800ற்கும் மேற்பட்ட பதிவுகளைப் பல தலைப்புக்களில் எழுதியிருக்கிறேன். பத்திரிக்கைகளால் 30,000 வாசகர்களும், வலைப்பதிவால் 3,840 பின் தொடர்பாளர்களும் கிடைத்திருக்கிறார்கள். ஏழு புத்தகங்கள் வெளி வந்துள்ளன. எல்லாம் என்னுடைய சாதனை அல்ல. பழநிஅப்பனின் அருள். ஜோதிடமும் என் தொழில் அல்ல! நான் படித்ததை, கற்றுணர்ந்ததைப் பலரும் கற்றுக்கொள்ள எழுதிவருகிறேன். 653 அடிப்படைப் பாடங்களை எழுதியுள்ளேன். பதிவில் திருட்டுப் போவதால், அதைத் தவிர்க்க, மேல்நிலைப் பாடங்களைத் தனி இணைய தளம் மூலம் எழுதிக்கொண்டிருக்கிறேன் classroom2013. அது உறுப்பினர்களுக்கு மட்டுமே. அவற்றில் எழுதப்படுபவை பின்னால் புத்தகங்களாக வரவுள்ளன. அப்போது அவற்றை அனைவரும் படிக்கலாம்! எனது தொழில் செயற்கை இழைகளைச் சந்தைப் படுத்தும் முகவர் தொழில். தீவிரவாசகன், அது ஒன்றுதான் என்னுடைய தகுதி. கடந்த எட்டு ஆண்டுகளாக எழுதுகிறேன். அது என்னுடைய போதாத நேரம்!!!. நல்ல நேரம் துவங்கும்போது எழுதுவதை நான் நிறுத்திவிடுவேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்!

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அலாவுதீன் விளக்கும் அற்புத வேண்டுகோளும்!

A Woman found Aladdin's magic lamp.
She started rubbing it.!

A Genie appeared and asked for appeared and asked for a wish.!

Woman " I want my husband to have eyes only for me...

...I want to be only one in his life...

...I want him to sleep always by my side...

......I want that when he gets up in the morning, I am the first thing he grabs...

.......He takes me everywhere he goes...

.......Her wishes were granted immediately ..
V
V
V
V
V
V
the genie turned her into a Mobile..!!!!!!!!!!!!!!!!

BY
G.Ananthamurugan


++++++++++++++++++++++++++++++++++++++

அனுபவம்!

அனுபவம்!
உபயம்: கூகுள் ஆண்டவர்

25.1.08

என்னடா மேட்ச் இது - சரவணா?

என்னடா மேட்ச் இது - சரவணா?
அதானே! இரண்டே இரண்டு ப்ளேயர்கள். அம்பயர்களோ ஒன்பது பேர்கள்
கேள்வி எழத்தானே செய்யும்!

சரி, என்ன பதில் வந்தது?
நீங்களே சென்று பாருங்கள்!

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V



23.1.08

மீண்டும் வாத்தியார்

மீண்டும் வாத்தியார்

வலைப் பதிவில் இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.
கதை, கட்டுரை, கவிதை, நகைசுவைத் துணுக்குகள், புதிர்கள்
என்று விதம் விதமாக எழுதினாலும் ஜோதிடப் பாட வகுப்பிற்
குத்தான் அதிகமான வரவேற்பு.

எதுவும் ஓவர் டோஸ் ஆகிவிடக்கூடாது.அதனால் 51 பதிவுகள்
வரை ஜோதிடப் பாடங்களை எழுதியவன், அதை சற்று நிறுத்தி
வைத்தேன்.

என் வகுப்புக் கண்மணிகளின் தொடர் வேண்டுகோளைப்
புறக்கணிக்க முடியாமல், அதை மீண்டும் (1,2.2008 அன்று)
துவக்க உள்ளேன். ஆனால் வேறு ஒரு கோணத்தில் பாடங்கள்
நடத்தப்படும்.

ஒரு புத்தகத் தயாரிப்பாலும், வழக்கமாக பத்திரிக்கைகளுக்கு
எழுதிக் கொடுக்கும் பணிகளாலும், மற்றும் எனது
வியாபார அலுவல்களாலும், இரண்டு மாத காலமாக பதிவுகள்
எழுத முடியாமல் போய் விட்டது.

இருப்பதை இழப்பது என்பது மிகவும் சோகமானது. என்னுடைய
வகுப்புக் கண்மணிகளையும், மற்றும் பதிவிற்கு வந்து செல்லும்
சக பதிவுலக நண்பர்களையும் இழக்க நான் விரும்பவில்லை

ஆகவே வாரம் தோறும் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில்
பதிவுகள் எழுதலாம் என்று உள்ளேன். வகுப்பறையிலும் ஒரு
பதிவு பல்சுவை'யிலும் ஒரு பதிவு.

அனைவரையும் வழக்கம்போல வந்து படித்து மகிழ வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
வந்ததிற்குச் சும்மா போக வேண்டாம். கீழே ஒரு சரித்திர
நிகழ்வுடன் செய்தி ஒன்றைக் கொடுத்துள்ளேன். படித்துவிட்டுச்
செல்லுங்கள்.

இந்திய தேசம் காலம் காலமாக தன் நினைவில் செதுக்கி
வைத்திருக்கும் மூன்று மாமன்னர்களின் பெயர்கள் அகரத்தில்தான்
துவங்கும். அதுதான் அதிசயம்

அசோகர், அலெக்ஸாண்டர், அக்பர் ஆகிய மன்னர்கள்தான்
அவர்கள்.ஒவ்வொரு வருக்கும் ஒரு அற்புதச்சிறப்பு உண்டு.
அவர்களில் இப்போது அக்பரைப் பற்றிப்
பார்ப்போம்.

அக்பர் பிறந்தது 15.10.1542ல். தனது பதின்மூன்றாவது
வயதிலேயே அரியணையில் ஏறியவர் அவர். அவருடைய
தந்தை ஹுமாயூன் திடீரென்று காலமாகிவிட ஆட்சியைக்
கட்டிக்காக்கும் பொறுப்பு இவர்மேல் சுமத்தப்பட்டது.
இறக்கும்வரை அவர் பேரரசராக ஆட்சி செய்த காலம்
சுமார் 50 ஆண்டுகள் (1556 முதல் 1605ஆம் ஆண்டு வரை)

மிகவும் துணிச்சலானவர்.நகைச்சுவை உணர்வு மேலோங்கியவர்.
மத நல்லிணக்கம் கொண்டவர். அவருடைய அமைச்சரவையில்
9 பேர்களில் நான்கு பேர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்
என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஆக்ராவிற்கு அருகில் உள்ள அடர்ந்த காடுகளுக்குச் சென்று
வேட்டையாடுவதில் அக்பருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.
ஒரு சமயம் அவ்வாறு வேட்டைக்குச் சென்றுவிட்டுத்
திரும்பும் வழியில் வழி தவறி காட்டுக்குள்ளே சற்று
நேரம் சுற்றும்படி ஆகிவிட்டது.

களைப்பு, பசி, தாகம் எல்லாம் கூட்டணி அமைத்துப் படுத்தி
எடுக்க அவருடன் உடன் வந்த வீரர்கள் ஒன்றும் சொல்ல
முடியாமல், பேசாமல் தொடர்ந்து வந்தார்கள்.

இளைஞரான அக்பர் அவற்றைப் பொறுத்துக் கொண்டு
வந்தார். நான்கு பாதைகள் ஒன்று சேரும் இடத்திற்கு
அவர்கள் வந்தார்கள். தாங்கள் வந்த வழியை விடுத்து
மற்ற மூன்றில் எதில் சென்றால் ஆக்ரா நகருக்குப் போய்ச்
சேரலாம் என்பது பிடிபடவில்லை.

அப்போது அங்கே இளைஞன் ஒருவன் வந்து கொண்டிருந்தான்.

அக்பர் தன்னுடைய படைத்தலைவனைக் கூப்பிட்டு, அந்த
இளைஞனிடம் வழி கேட்கச் சொன்னார்.

அவனும் கேட்டான்," ஏம்ப்பா, இந்தப் பாதை ஆக்ராவிற்குப்
போகுமா?"

இளைஞன் சட்டென்று சொன்னான்,"பாதை எப்படிப் போகும்?
நாம்தான் போக வேண்டும்!"

அக்பர் உட்பட மற்ற அனைவரும் சிரித்து விட்டனர்.
படைத்தலைவனுக்குக் கோபம் வந்து விட்டது."யாருக்காகக்
கேட்கிறேன் என்பதைத் தெரிந்து பேசு.குதிரையில்
அமர்ந்திருப்பவர் இந்த தேசத்தின் மன்னர்"

அந்த இளைஞன் அதிராமல் மீண்டும் சொன்னன்,"மன்ன
ரென்றாலும் பாதை போகாது. அவர்தான் போக வேண்டும்"

அவனுடைய துணிச்சலையும், நகைச்சுவை உணர்வையும்
கண்டு அசந்து போன அக்பர்,அவனை அருகில் அழைத்து
அன்புடன் விசாரித்தார்.

"நீ சொல்வதுதான் சரி, பாதை எப்படி பயணிக்கும்?
நாம்தான் பயணிக்க வேண்டும்! நன்றாகச் சொன்னாய்.
உன் பெயரென்ன?"

"மகேஷ் தாஸ்" என்றான் அந்த இளைஞன்

"உன் போன்று துணிச்சலையும், புத்திசாலித்தனத்தையும்,
நகைச்சுவை உணர்வையும் உள்ளடக்கிய இளைஞனைத்தான்
நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நாளை என்னுடைய
அரண்மனைக்கு வா - நல்ல வேலை போட்டுத் தருகிறேன்"
என்று சொன்னதோடு தன்னுடைய முத்திரை மோதிரத்தையும்
கழற்றி அவனிடம் கொடுத்தார்.

அந்த இளைஞனும் அவ்வாறே செய்தான். அக்பர் என்ன
வேலை கொடுத்தார் தெரியுமா? அமைச்சர் பதவி.

அவன் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அக்பரின் மனதில்
நீங்காத இடத்தைப் பிடித்ததோடு முதல் அமைச்சராகவும்
ஆகிவிட்டான்.

அந்த 'மகேஷ் தாஸ்' என்னும் இளைஞன்தான் பின்நாளில்
பீர்பால் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மதியூகியாவார்.
தன்னுடைய புத்திசாலித்தனத்தாலும், நகைச்சுவை உணர்வாலும்
நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை ஏற்படுத்தியவர் அவர்.

தன்னைப் பற்றிய பல கதைகளால் இன்றளவும் பல இந்தியக்
குழந்தைகள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசமின்றி
அனைவராலும் போற்றப்படுபவர் அவர். அவருடைய
கதைகள் புத்தக வடிவில் ஏராளமாக - தாராளமாகக்
கிடைக்கிறது.

வாங்கிப் படித்து மகிழுங்கள்.

காப்புரிமை பெற்ற வலைப் பதிவு இது

காப்புரிமை பெற்ற வலைப் பதிவு இது
ஆக்கங்களைப் பிரதி எடுத்துக்கொண்டுபோய்த் தவறாகப் பயன்படுத்தவேண்டாம்!

அறிவிப்பு!

இந்தப் பதிவில் உள்ள ஆக்கங்களை ,பாடங்கள், கட்டுரைகள் மற்றும் கதைகளை புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது! காப்பு உரிமை பெறப்பட்டுள்ளது. அதை மனதில் கொள்க!