25.1.08

என்னடா மேட்ச் இது - சரவணா?

என்னடா மேட்ச் இது - சரவணா?
அதானே! இரண்டே இரண்டு ப்ளேயர்கள். அம்பயர்களோ ஒன்பது பேர்கள்
கேள்வி எழத்தானே செய்யும்!

சரி, என்ன பதில் வந்தது?
நீங்களே சென்று பாருங்கள்!

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V



23.1.08

மீண்டும் வாத்தியார்

மீண்டும் வாத்தியார்

வலைப் பதிவில் இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.
கதை, கட்டுரை, கவிதை, நகைசுவைத் துணுக்குகள், புதிர்கள்
என்று விதம் விதமாக எழுதினாலும் ஜோதிடப் பாட வகுப்பிற்
குத்தான் அதிகமான வரவேற்பு.

எதுவும் ஓவர் டோஸ் ஆகிவிடக்கூடாது.அதனால் 51 பதிவுகள்
வரை ஜோதிடப் பாடங்களை எழுதியவன், அதை சற்று நிறுத்தி
வைத்தேன்.

என் வகுப்புக் கண்மணிகளின் தொடர் வேண்டுகோளைப்
புறக்கணிக்க முடியாமல், அதை மீண்டும் (1,2.2008 அன்று)
துவக்க உள்ளேன். ஆனால் வேறு ஒரு கோணத்தில் பாடங்கள்
நடத்தப்படும்.

ஒரு புத்தகத் தயாரிப்பாலும், வழக்கமாக பத்திரிக்கைகளுக்கு
எழுதிக் கொடுக்கும் பணிகளாலும், மற்றும் எனது
வியாபார அலுவல்களாலும், இரண்டு மாத காலமாக பதிவுகள்
எழுத முடியாமல் போய் விட்டது.

இருப்பதை இழப்பது என்பது மிகவும் சோகமானது. என்னுடைய
வகுப்புக் கண்மணிகளையும், மற்றும் பதிவிற்கு வந்து செல்லும்
சக பதிவுலக நண்பர்களையும் இழக்க நான் விரும்பவில்லை

ஆகவே வாரம் தோறும் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில்
பதிவுகள் எழுதலாம் என்று உள்ளேன். வகுப்பறையிலும் ஒரு
பதிவு பல்சுவை'யிலும் ஒரு பதிவு.

அனைவரையும் வழக்கம்போல வந்து படித்து மகிழ வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
வந்ததிற்குச் சும்மா போக வேண்டாம். கீழே ஒரு சரித்திர
நிகழ்வுடன் செய்தி ஒன்றைக் கொடுத்துள்ளேன். படித்துவிட்டுச்
செல்லுங்கள்.

இந்திய தேசம் காலம் காலமாக தன் நினைவில் செதுக்கி
வைத்திருக்கும் மூன்று மாமன்னர்களின் பெயர்கள் அகரத்தில்தான்
துவங்கும். அதுதான் அதிசயம்

அசோகர், அலெக்ஸாண்டர், அக்பர் ஆகிய மன்னர்கள்தான்
அவர்கள்.ஒவ்வொரு வருக்கும் ஒரு அற்புதச்சிறப்பு உண்டு.
அவர்களில் இப்போது அக்பரைப் பற்றிப்
பார்ப்போம்.

அக்பர் பிறந்தது 15.10.1542ல். தனது பதின்மூன்றாவது
வயதிலேயே அரியணையில் ஏறியவர் அவர். அவருடைய
தந்தை ஹுமாயூன் திடீரென்று காலமாகிவிட ஆட்சியைக்
கட்டிக்காக்கும் பொறுப்பு இவர்மேல் சுமத்தப்பட்டது.
இறக்கும்வரை அவர் பேரரசராக ஆட்சி செய்த காலம்
சுமார் 50 ஆண்டுகள் (1556 முதல் 1605ஆம் ஆண்டு வரை)

மிகவும் துணிச்சலானவர்.நகைச்சுவை உணர்வு மேலோங்கியவர்.
மத நல்லிணக்கம் கொண்டவர். அவருடைய அமைச்சரவையில்
9 பேர்களில் நான்கு பேர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்
என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

ஆக்ராவிற்கு அருகில் உள்ள அடர்ந்த காடுகளுக்குச் சென்று
வேட்டையாடுவதில் அக்பருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.
ஒரு சமயம் அவ்வாறு வேட்டைக்குச் சென்றுவிட்டுத்
திரும்பும் வழியில் வழி தவறி காட்டுக்குள்ளே சற்று
நேரம் சுற்றும்படி ஆகிவிட்டது.

களைப்பு, பசி, தாகம் எல்லாம் கூட்டணி அமைத்துப் படுத்தி
எடுக்க அவருடன் உடன் வந்த வீரர்கள் ஒன்றும் சொல்ல
முடியாமல், பேசாமல் தொடர்ந்து வந்தார்கள்.

இளைஞரான அக்பர் அவற்றைப் பொறுத்துக் கொண்டு
வந்தார். நான்கு பாதைகள் ஒன்று சேரும் இடத்திற்கு
அவர்கள் வந்தார்கள். தாங்கள் வந்த வழியை விடுத்து
மற்ற மூன்றில் எதில் சென்றால் ஆக்ரா நகருக்குப் போய்ச்
சேரலாம் என்பது பிடிபடவில்லை.

அப்போது அங்கே இளைஞன் ஒருவன் வந்து கொண்டிருந்தான்.

அக்பர் தன்னுடைய படைத்தலைவனைக் கூப்பிட்டு, அந்த
இளைஞனிடம் வழி கேட்கச் சொன்னார்.

அவனும் கேட்டான்," ஏம்ப்பா, இந்தப் பாதை ஆக்ராவிற்குப்
போகுமா?"

இளைஞன் சட்டென்று சொன்னான்,"பாதை எப்படிப் போகும்?
நாம்தான் போக வேண்டும்!"

அக்பர் உட்பட மற்ற அனைவரும் சிரித்து விட்டனர்.
படைத்தலைவனுக்குக் கோபம் வந்து விட்டது."யாருக்காகக்
கேட்கிறேன் என்பதைத் தெரிந்து பேசு.குதிரையில்
அமர்ந்திருப்பவர் இந்த தேசத்தின் மன்னர்"

அந்த இளைஞன் அதிராமல் மீண்டும் சொன்னன்,"மன்ன
ரென்றாலும் பாதை போகாது. அவர்தான் போக வேண்டும்"

அவனுடைய துணிச்சலையும், நகைச்சுவை உணர்வையும்
கண்டு அசந்து போன அக்பர்,அவனை அருகில் அழைத்து
அன்புடன் விசாரித்தார்.

"நீ சொல்வதுதான் சரி, பாதை எப்படி பயணிக்கும்?
நாம்தான் பயணிக்க வேண்டும்! நன்றாகச் சொன்னாய்.
உன் பெயரென்ன?"

"மகேஷ் தாஸ்" என்றான் அந்த இளைஞன்

"உன் போன்று துணிச்சலையும், புத்திசாலித்தனத்தையும்,
நகைச்சுவை உணர்வையும் உள்ளடக்கிய இளைஞனைத்தான்
நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நாளை என்னுடைய
அரண்மனைக்கு வா - நல்ல வேலை போட்டுத் தருகிறேன்"
என்று சொன்னதோடு தன்னுடைய முத்திரை மோதிரத்தையும்
கழற்றி அவனிடம் கொடுத்தார்.

அந்த இளைஞனும் அவ்வாறே செய்தான். அக்பர் என்ன
வேலை கொடுத்தார் தெரியுமா? அமைச்சர் பதவி.

அவன் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அக்பரின் மனதில்
நீங்காத இடத்தைப் பிடித்ததோடு முதல் அமைச்சராகவும்
ஆகிவிட்டான்.

அந்த 'மகேஷ் தாஸ்' என்னும் இளைஞன்தான் பின்நாளில்
பீர்பால் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மதியூகியாவார்.
தன்னுடைய புத்திசாலித்தனத்தாலும், நகைச்சுவை உணர்வாலும்
நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை ஏற்படுத்தியவர் அவர்.

தன்னைப் பற்றிய பல கதைகளால் இன்றளவும் பல இந்தியக்
குழந்தைகள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசமின்றி
அனைவராலும் போற்றப்படுபவர் அவர். அவருடைய
கதைகள் புத்தக வடிவில் ஏராளமாக - தாராளமாகக்
கிடைக்கிறது.

வாங்கிப் படித்து மகிழுங்கள்.